தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்
|
நமது மொழியை நாமே அறிந்துகொள்ள...
பேராசிரியர் சு.சுசீந்திரராஜாவின் தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்
தொகுதி ஐ க்கான பாயிரக்குறிப்பு.
புலமைநிறை தோழமையுணர்வுடன்.
அமெரிக்க, ஐக்கிய அரசிலும், இங்கிலாந்திலும் ஆங்கிலமே பொது மொழியாகவிருப்பினும், அது இவ்விரண்டு இடங்களிலும் பேசப்பெறும், எழுதப்பெறும் முறைமை காரணமாக நாம் ஒரே மொழியால் பிரிக் கப்பட்டுள்ளவர்கள் (றுந யசந னiஎனைநன டில வாந ளயஅந டுயபெரயபந) என்று மிக ஆழமான மனத்திருப்தியுடன் கூறப்படுவது வழக்கம்.
பேராசிரியர் சுசீந்திரராஜாவின் இக்கட்டுரைத் தொகுதியை வாசிக்கும் பொழுது அத்தகைய ஓர் சிந்தனை நமது மனங்களிலே வந்து போவதை மறுதலிக்க முடியாதுள்ளது. தமிழகத்துப் பேச்சுத் தமிழுக்கும் நமது பேச்சுத் தமிழுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளன. தமிழகத்தை யும் நம்மையும் (ஈழத்தையும்) பொறுத்தவரையில் மேலதிக விசேடப் பண்பு ஒன்று உள்ளது. அதாவது, ஏறத்தாழ இரண்டாயிரம் வருடப் பழைமையும் தொடர்ச்சியுமுள்ள தமிழ்மொழியின் புராதன சொல் வழக்குகளும் வடிவங்களும் இலங்கையிலேயே பெரிதும் பேணப்படு கின்றன என்பதாகும்.
மொழியியலை இலக்கணத்திலிருந்து வேறுபடுத்தி நோக்குவதிலே இன்னுந்தான் ஆசிரிய மட்டங்களிலே கூட புலமைத் தெளிவு காணப் படவில்லையென்று கூறப்படுமின்றைய வேளையில் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கின் இயல்புகளையும் அப்பேச்சு வழக்கில் இடம்பெறும் சொற் பயன்பாடுகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறும் இக்கட்டுரைத் தொகுதி நமது அத்தியாவசிய வாசிப்புக்குரியதாகிறது.
ஒட்டுமொத்தமான தமிழ்ச் செழுமைக்கு ஈழத்தவர்களின் பங்க ள
|