புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

முகாமைத்துவக் கொள்கைகள் - ஓர் அறிமுகம்

சமூக அறிவியல் துறைகளில் பொருளாதார மேம்பாட்டுடன் தொடர்புடையதும் நேரடியாக வாழ்க்கைப் பயன்பாடுடையதுமான ஒருதுறை முகாமைத்துவம் எனலாம். இன்று முகாமைத்துவம் ஒரு புலமைசார் துறை என்ற முறையில் பெருவளர்ச்சி பெற்றுள்ளதோடு அத்துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு நிகரான பல  முகாமைத்துவக்கல்வி நிறுவனங்கள் உலகில் எழுந்துள்ளன. இத்துறைசார்ந்த ஆய்வாளர்கள் நூல்கள் சஞ்சிகைகளும் ஏராளம். ஐக்கிய அமெரிக்கா உலகில் பெரு வல்லரசானதற்கான காரணங்கள் பற்றிக் கூறும் முகாமைத்துவ மற்றும் எதிர்காலவியல் பெருமறிஞரான பீற்றர் ட்றக்கர் அந்நாட்டில் முகாமைத்துவத் துறையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்களை ஒரு காரணமாகக் கூறுகின்றார். உலகளாவிய மகத்தான சாதனைகளுக்குப் பின்னணியில் (பிரமிட், சீனப் பெருஞ்சுவர்) ஏதோவொரு முகாமைத்துவம் இருந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இன்று முகாமைத்துவம் நிறுவனங்களைப் பொறுத்த வரையில் மட்டுமன்றி குடும்பம், பொருளாதாரம், இனமுரண்பாடுகள், அறிவு, கோபம் என்பவற்றைப் பொறுத்தவரையிலும் கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் நாற்பது சதவீதமான ஊழியர் தொகுதியினர் சாதாரண தொழிற்சாலை ஊழியராக இருந்தனர். முதலாம் யுத்த காலத்தில், முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத காலத்தில் மக்களில் 35 சதவீதமானோர் வீட்டுப்பணியாளராகவே பணிபுரிந்தனர் என பீற்றர் ட்றக்கர் மதிப்பிடப்பட்டுள்ளார். இன்றைய அமெரிக்காவில் ஊழியர் தொகுதியில் 35 சதவீதமானோர் 'முகாமையாளர்களும் உயர்தொழில் வல்லுநர்களும்' எனக் குறிப்பிடப்படுகின


சு.பராமானந்தம்
Paramanantham,S

சுப்பிரமணியம் பரமானந்தம் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக - ஆசிரியக் கல்வியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தொடர்ந்து கற்றல் - கற்பித்தல் பணியுடன் மட்டுமல்லாமல் முழுமையான ஆய்வுப் பணியிலும் ஈடுபாடு கொண்டவர்.
 
கல்விச் செயன்முறை, கற்பித்தலியல், ஆசிரியம் தொடர்பான உரத்த சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வு செய்வதற்குரிய மனப்பாங்கும் உழைப்பும் கொண்டவர். இதற்குரிய கருத்தாடலை வெளிப்படுத்துவதில் வளர்ப்பதில் நிதானமான நேர்நிலை அணுகுமுறையைக் கைக்கொள்பவர்.கோட்பாட்டு வழியிலான மொழியாக்கத்திலும் பிரயோகத்திலும் சமாந்தரமாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்.
 
சமூக நோக்கும் தத்துவத் தரிசனமும் புலமைத்துவத்தை ஆற்றுப்படுத்தும் என்பதில்  நம்பிக்கை கொண்டவர். இதற்காக தீவிரமாக உழைக்கவும் புத்தாக்கமான சிந்தனைகளை கற்றறியவும் விருப்பம் கொண்டவர்.  புதி