சர்வதேச தாபனங்களும் ஒப்பந்தங்களும்
|
சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவும் அதனை தீர்த்துக்கொள்ளுவதற்கும் நாடுகளிற்கிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. இதற்காக உலகில் பல்வேறு வகைப்பட்ட சர்வதேச தாபனங்கள், சர்வதேச உடன்படிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் தாபனமும் அதனுடன் இணைந்த நிறுவனங் களும் மேற்படி பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கு வெளியேயும் உலகப் பிரச்சினைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கான சர்வதேச தாபனங்களும் சர்வதேச ஒப்பந்தங்களும் காணப்படுகின்றன. இந்நூ லானது அத்தகைய தாபனங்கள் ஒப்பந்தங்கள் பற்றி சுருக்கமான தகவல்களை முன்வைக்கின்றது.
இத்தாபனங்களின் தோற்றம் அவற்றின் ஒழுங்கமைப்பு, அங்கத்துவ நாடுகள் பற்றிய விபரங்கள் இந்நூலில் முன்வைக்கப்படுகின்றது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரும், தற்போதைய உலகமய மாதல் பின்னணியிலும் பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல்வேறு சர்வதேச தாபனங்களும், ஒப்பந்தங்களும் தோன்றியுள்ளன. அது மட்டுமல்ல இன்னும் பலதரப்பட்ட ஒப்பந்தங் களும், தாபனங்களும் தோன்றிக்கொண்டு இருப்பதுடன் தோன்றி யுள்ள தாபனங்களின் உறுப்புரிமைகளும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றன. இவை பற்றிய ஒரு தகவல்களை ஒரே பார்வையில் பெற்றுக்கொள்ளவும், ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுப் பரீட்சை கள், போட்டிப் பரீட்சைகளில் தோற்றுவோர்களும் அவர்களின் நன்மை கருதியும் இந்நூல் வெளிவருகின்றது. குறிப்பாக யுஃடு உயர்தரத்தில் பயிலும் பல்கலைக்கழக பொருளியல் மாணவ ஆசிரியர் களுக்கும்
|