Saravanamuthu Pillai

மிக்க அரிதிற் கிடைப்பனவாகிய, அச்சுப்பதிவுப் பெற்ற தமிழ் நூல்களையும் இன்னும் அச்சில் வராத தமிழறிஞர் சிலரது ஆக்கங்களையும் அச்சுப்பதிவு செய்து அவற்றைத் தமிழ் பயிலும் மாணவரிடையே பரப்பும் பெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ.இளவழகனார் அவர்களுக்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. 
திரு.ந.சி.கந்தையாப்பிள்ளையின் எழுத்தாக்கங்களை முதலிலே வெளிக்கொணர்ந்து, அவற்றைத் தொடர்ந்து வித்துவான் தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி எனும் பதினேழு நூல்களைக் கொண்டப் பெருந்தொகுதியினை வெளியிட்டுள்ள நண்பர் இளவழகனார் இப்பொழுது யாழ்ப்பாணத்து அகராதியெனவும், மானிப்பாய் அகராதியெனவும் அழைக்கப்பெறும் கையகராதியினை வெளியிடுகின்றார்.
இவ்வெளியீடு பற்றி  இவ்வெளியீட்டின் ஈழத்து முகவர் திரு.பத்மசீலன் என்னிடத்துக் கூறியபொழுது ஈழத்தின் ஆய்வாளர்கள் இருவரது குறிப்புரைகளைப் பெறுவது நலம் எனக் கூறினேன். ஒருவர் ஈழத்துத் தமிழ் கிறித்தவ இலக்கியங்களைத் தமது சிறப்பு ஆய்வுத்துறையாகக் கொண்டு அத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளவரான பேராயர் வண.எஸ்.ஜெபநேசன் ஆவார். இவர் தென்னிந்திய திருச்சபையின் யாழ்மறை மாவட்டப் பேராயராக இருந்தவர். மற்றவர் ஈழத்திலக்கியத்தைக் குறிப்பாக பதினேழு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளுக்குரிய ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைத் தமது சிறப்பு ஆய்வுத்துறையாக கொண்டுள்ள பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா ஆவார். இவர்கள் இருவரது குறிப்புரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. 
அக்குறிப்புரைகள் இரண்டும் இந்த அகராதி பற்றிய விளக்கங்களைத் தருகின்றன. தமிழகத்தில் யாழ்ப்பாணத்து அகராதியென்றும், மானிப்பாய் அகராதியென்றும் குறிப்பிடப்படுவது இக்கையகராதியே என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. இவ்வதிகார-தியின் தமிழ்ப் பெயரை தரும் பக்கத்தினில் சில முக்கிய செய்திகள் உள்ளன. முதலாவது  இதற்குத் தொகுத்தோர் வழங்கிய பெயர் 'பெயரகராதி' என்பதாகும். அப்பக்கத்தின் கீழ்ப்பாகத்தில் தரப்பட்டுள்ள குறிப்பு மிக முக்கியமானது. 
சாலிவாகன சகார்த்தம் தஎளசுநக்குச் சரியான கிருஸ்து வருஷம் 1842இல். நிகழாநின்ற பிலபவருஷம் யாழ்ப்பாணத்துக்குச் சேர்ந்த மானிப்பாய் அமேரிக்காமிசியோன் அச்சுக்கூடத்தில் அச்சுப்பதிக்கப்-பட்டது.
இதன் மூலம் 'யாழ்ப்பாண' 'மானிப்பாய்' எனும் பெயர்கள் கிட்டியதற்கான காரணம் புரிகிறது. 
அகராதியென்பது அதன் உருவிலும் உள்ளடக்கத்திலும் மேலைத்தேய பண்பாட்டுவழி வந்ததாகும். தமிழ் மரபில் நிகண்டு முறைமையே உண்டு. அம்முறைமையினுள் அகராதியிற் கிடைப்பன போன்ற சொல்லுக்கான கருத்து தரப்படாது. மாறாக சொற்கள் தொகுதி-களாக தரப்படும். சிவனுக்குரிய பெயர்கள் கடலுக்குரிய பெயர்கள் என தொகுதி முறையிலேயே வரும். உண்மையில் ஆங்கில மரபுப்படி இவை (ளலழெலெஅள) ஒரு பொருளுக்கான பல பெயர்கள் எனவே கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களிடையே தமது மதத்தைப் பரப்ப முனைந்த முதற்பெரும் பாதிரியார் முதலே அகராதி முறைமை வழியாக தமிழைத் தமது விளக்கப்பதிவிட் கொண்டு வருவதற்கு மேலைநாட்டு மரபுவழி வந்த அகராதி முறைமையைக் கையாண்டுள்ளனர். (வீரமாமுனிவரும் சதுகராதி) புரட்டஸ்தாந்தக் கிறித்தவர்கள் இம்முயற்சியில் அறிவியல் பூர்வமான அணுகுமுறைமையையே மேற்கொண்டனர். இவர்களுள்ளும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கப் புறப்பட்ட மிசனரிமார்-கள் தொடக்கத்திலிருந்தே அகராதி முயற்சியில் ஈடுபட்டனர். ஜோஸப் நைற் (முniபாவ) பற்றி பேராயர் ஜெபனேசன் தந்துள்ள செய்திகளை நோக்குக. ஜோசப் நைற் (முniபாவ) மெதடிஸ்ட் மிசன் பாதிரியாராகிய பர்சிவலுடன் இணைந்து தொழிற்பட்டார் என்பது மிக முக்கியமான செய்தியாகும். இந்த பர்சிவல்தான் ஆறுமுகநாவலரின் ஆரம்பகால உந்து ஆற்றலாக விளங்கியவர். 
இந்த அகராதி முயற்சிகளை இன்னொரு முறையிலும் எடுத்துக் கூறலாம். அதாவது, தமிழின் எழுத்தறிவுப் பாரம்பரியத்தைப் பாதிரிமார் தமதாக்கிக் கொள்ள எடுத்த முயற்சிகளுள் ஒன்று இது ஆகும்.  தொடக்கத்திலே கைந்நூலாகத் (ஆயரெயட) தொடங்கிப் பின்னர் 'வழக்கும் செய்யுளுமாகிய' இரண்டையும் ஒன்றிணைத்துப் பார்க்கின்ற வின்சுலோ அகராதி வரை தொடர்கின்றது. 
அகராதி முறைமையின் வருகை மூலம் தமிழின் நவீன மயப்பாடு நிச்சயமாக்கப்படுகின்றது. முதலிற் பிற பண்பாட்டாளர்களுக்குப் பயன்பட்ட அகராதிகள் பின்னர் தமிழரின் தமிழ்ப் பயில்வுக்கே இன்றியமையாதனவாகின்றன.
இப்பொழுது மீளச்சுப் பெறும் இக்கையகராதிக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தறிவுப் பாரம்பரியத்தின் நிலைமையை இது நமக்குக் காட்டுகின்றது. அந்த அளவில் தமிழ்மொழி, இலக்கியம் பயில்வோருக்கு இது ஒரு முக்கியமான நூலாகும். திரு.கோ.இளவழகனார் தமிழ்க் கல்வியுலகின் வாழ்த்துக்குரியவராகின்-றார். இம்மீளச்சுப் பதிவினை அது தோன்றிய ஈழத்தில் மீட்டும் பரப்புவதற்கு காரணராகவுள்ள திரு.பத்மசீலனுக்கு நமது நன்றி உரித்து.

கார்த்திக்கேசு சிவத்தம்பி ஆ.யு.Phனுஇனு.டுவைவ
தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
01-12-2005

 
சரவணமுத்துப் பிள்ளை புத்தகங்கள்
2008 - அகராதி - யாழ்ப்பாண அகராதி
2019 - அகராதி - யாழ்ப்பாண அகராதி