சீனாவும் இந்துசமுத்திரமும்
|
'சீனாவும் இந்துசமுத்திரமும்' என்ற இந் நூல் கடந்த மூன்று வருடங்களாக கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்ட போது தேடப்பட்ட தகவல்களின் மேலதிக வாசிப்பினால் உருவானதாகும். இன்றைய உலக ஒழுங்கு பற்றிய தேடலில் மிகப்பிந்திய முடிவுகளை வெளியிடும் அமெரிக்கப் பல்கலைக்ககைமான ஹவாட்ன் சர்வதேச அரசியல் கற்கையின் பேராசிரியரான ஜோஸப்நை இன் கருத்துக்கள் கவனத்திற்குரியவை.
அவர் தொடர்ச்சியாக உலக ஒழுங்குபற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருவதனால் இன்றைய உலக ஒழுங்கின் போக்குகளை சரிவர முன்வைத்து வருபவராக உள்ளார். அவரது வாதமே அமெரிக்கா தலைமையிலான மேற்கு உலகம் முடிபுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் பலதுருவ ஒழுங்குக்குள் உலகம் நகர்வதாகவும் அதில் சீனாவின் பங்கு அதிகமானதெனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ - அரசியல் வலுவை சீனா சமப்படுத்தாது விடினும் பொருளாதாரத்தில் மிகப் பெரும் சக்தியாக எழுச்சியடைந்துள்ளது எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளரும் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேப்பாளராக விளங்கியவருமான கில்லாரி கிளின்டன் சீனா இராணுவ ரீதியில் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் நாடாக வளர்ந்துள்ளதுடன் அமெரிக்காவை வேவுபார்க்கும் நாடாக உள்ளதென குறிப்பிடுகின்றார். உலகை அமெரிக்கா வேவுபார்க்க அமெரிக்காவை சீனா வேவுபார்க்கின்றது என்றால் அதன் வலியை வளர்த்துள்ளது என்பதையே காட்டுகின்றது. இருந்த போதும் சீனாவை வெற்றி கொள்ள அல்லது எழுச்சியை தடுக்க அமெரிக்க உலகளாவிய கூட்டுக்களைப் பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஜப்பான், ஐரோப்பிய யூன
|