Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கற்றல் கற்பித்தல் : மேம்பாட்டுக்கான வழிமுறைகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-02-01-005
ISBN : 978-955-1857-04-2 , 978-955-685-021-5
EPABNo : EPAB/02/18570
Author Name (எழுதியவர் பெயர்) : மா.கருணாநிதி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 148
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 500.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  1. உலகளாவிய செல்நெறியும் கற்றலும்
  2. ஆசிரியர்களைத் தொழிற்ற்றகைப்படுத்தல் 
  3. விளைதிறனுள்ள கற்பித்தலின் கூறுகள்
  4. ஆசிரியர்களை மதிப்பிடுதல்
  5. ஆசிரியர் கல்வியும் பயிற்சியும் - பாடசாலைகளில் அவற்றின் பயன்பாடுகளும்
  6. மாணவர் பற்றிய மதிப்பீடுகள்
  7. மாணவர் கற்றல் - ஆசிரியர்களுக்கான வினைத்திறன்கள்
  8. கல்விச் செயற்பாடுகளில் அதிகரித்துவரும் பெற்றோரின் வகிபங்கு
  9. பிள்ளையின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தும் குடும்பக் காரணிகள் 
  10. நடத்தைப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான சில வழிமுறைகள்
  11. வகுப்பறை முகாமைத்துவமும் ஒழுக்காற்றுப் பிரச்சினைகளும்
Full Description (முழுவிபரம்):

வகுப்பறைக் கற்பித்தல் சிறப்புற அமைவதற்குப் பல்வேறு காரணிகள் துணைபுரிகின்றன. ஆசிரியர் கல்வியும் தொழில்சார் கல்வியில் வழங்கப்படும் அணுகுமுறைகளும், நுட்பங்களும் மட்டும் கற்றல் - கற்பித்தலின் மேம்பாட்டுக்கு உதவுவதில்லை. இவற்றோடு, கல்விச்சூழல், பாடசாலைகளில் அதிபரின் தலைமைத்துவம், பெற்றோரின் ஒத்துழைப்பு வகுப்பறைக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதல், ஆசிரியர் தொழில்சார் பயிற்சியின் கூறுகளை இற்றைப்படுத்துதல் என்பனவும் அத்தியாவசியமானவை. கற்றல் - கற்பித்தல் : மேம்பாட்டுக்கான வழிமுறை என்ற இந்நூல் இத்தகைய விடயம் பற்றிய கருத்துக்களையே முன்வைத்துள்ளது. இந்நூலில் இடம்பெறுகின்ற கட்டுரைகள் கல்வித்துறை மேம்பாடு பற்றிச் சிந்திப்போர், அத்துறையில் பணிபுரியும் சகல தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகின்றேன். 
முன்னைய காலம் போலன்றித் தற்போது இலங்கையில் ஆசிரியர்கள் அனைவரும் தொழில்முறைப் பயிற்சியுடையவர்களாக இருத்தல் வேண்டும் என்னும் கொள்கை பெரிதும் வலியுறுத்தப்படுகின்றது. ஆயினும், நடைமுறையில் 30 ஆயிரம் பேர்வரை பயிற்சியற்றவர்களாகப் பணிபுரிகின்றார்கள். இந்நிலையில் பயிற்சி பெற்ற ஆசிரியரும் பயிற்சி பெறாத ஆசிரியரும் தமது கல்வியறிவை மேம்படுத்துவதற்கான மற்றொரு வழி கல்வியியல் நூல்களையும் சஞ்சிகைகளை ஊன்றிக் கற்பதாகும். இச்செயற்பாட்டுக்கு எமது நூலும் பங்களிப்புச் செய்யும் என நம்புகிறோம். 
இத்தருணத்தில் இத்தகையதொரு நூலை வெளியிட வேண்டும் என ஆலோசனைகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்கிய கல்விப்பீடத் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களுக்கும், பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
ஆசிரியர்களின் அறிவுப்புலம் மற்றும் தொழில்கள் சிந்தனைகள் விரிவுபட வேண்டும் என்னும் நோக்குடன் ஊக்கத்துடன் செயற்படும் 'அகவிழி' சஞ்சிகை ஆசிரியர் தெ.மதுசூதனன் தந்த உற்சாகம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாகும். இந்த நூலிலே இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சில 'அகவிழி' மாதாந்த சஞ்சிகையில் வந்தவை. அக்கட்டுரைகளை இந்நூலில் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கியமைக்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலை வெளியிட்டு உதவும் சேமமடு பதிப்பக உரிமையாளர் சதபூ.பத்மசீலன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன். 

கலாநிதி.கருணாநிதி

 

 

 

 

 

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கற்றல் கற்பித்தல் : மேம்பாட்டுக்கான வழிமுறைகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-02-01-005
CBCN:2013-04-01-122
ISBN : 978-955-685-021-5
978-955-1857-04-2
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2013
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 159
Edition (பதிப்பு): விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

1.    உலகளாவிய செல்நெறியும் கற்றலும்
2.    ஆசிரியர்களைத் தொழிற்ற்றகைப்படுத்தல் 
3.    விளைதிறனுள்ள கற்பித்தலின் கூறுகள்
4.    ஆசிரியர்களை மதிப்பிடுதல்
5.    ஆசிரியர் கல்வியும் பயிற்சியும் - பாடசாலைகளில்         அவற்றின் பயன்பாடுகளும்
6.    மாணவர் பற்றிய மதிப்பீடுகள்
7.    மாணவர் கற்றல் - ஆசிரியர்களுக்கான         வினைத்திறன்கள்
8.    கல்விச் செயற்பாடுகளில் அதிகரித்துவரும்         பெற்றோரின் வகிபங்கு
9.    பிள்ளையின் ஆளுமையில் செல்வாக்குச்         செலுத்தும் குடும்பக் காரணிகள் 
10.    நடத்தைப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான         சில வழிமுறைகள்
11.    வகுப்பறை முகாமைத்துவமும் ஒழுக்காற்றுப்         பிரச்சினைகளும்
12.    பாடசாலைகளில் மாணவர் பற்றிய மதிப்பீடுகள்
13.    பாடசாலை மட்டக் கணிப்பீடு : நடைமுறைகளும்         பிரச்சினைகளும்
14.    இலங்கையில் ஆரம்பக்கல்வியில் நியாயத்         தன்மையும் சமவாய்ப்பும்
15.    இலங்கைப் பாடசாலைகளில் எட்டாம்,         பத்தாம் வகுப்பு மாணவரின் கல்வியடைவுகள்

Full Description (முழுவிபரம்):
இன்று நாளாந்தம் சமூகஅறிவியல், இயற்கை அறிவியல் மற்றும் மனிதப் பண்பியல் துறைகளில் ஆராய்ச்சிகளினூடாக அறிவுப் பெருக்கம் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாகப் பாடசாலைகளில் பெறப்படும் அறிவும் திறன்களும் சிறிது காலத்தின் பின் காலாவதியாகிப் போகின்றன. அவை பயனற்றும் பொருத்தமற்றும் போகின்றன.
 
ஆகவே, பாடசாலைக் காலத்தின் அறிவையும்  திறன்களையும் மாணவர்கள்  சுயமாகக் கற்றுக் கொள்ள வேணடிய அவசியம் ஏற்படுகின்றன. இதனால் வாழ்நாள் முழுவதும் அறிவையும், திறன்களையும் புதுப்பித்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான், புதிய அறிவியல் தொழில்நுட்ப சமுதாயத்தில் இணங்கி வாழ்வது சாத்தியமாகும். 
 
எனவே, பாடசாலைக் கல்வியானது மாணவர்கள் விலகிய பின்னரும் புதிய அறிவையும் திறன்களையும் கற்றுக்கொள்வதை இலகுபடுத்தும் முறையில் சுயமாகக் கற்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொடுப்பதாக இருத்தல் வேண்டும். சுயஅறிவு, சுயதேடல், சுயகற்றல் போன்ற அம்சங்களை வலியுறுத்தும் கல்விச் செயற்பாடுகள் எம்மிடையே விரிவுபெற வேண்டும்.
 
ஆகவே, மாணவர்களது சுய கற்றல், சுயஅறிவு, சுயதேடல் போன்ற பண்புசார் விருத்திக்கமைய கற்றல்-கற்பித்தல் செயன்முறை அமைய வேண்டும். இதற்கான புதிய வழிமுறைகள் பற்றிய கற்றலும் தேடலும் சமகாலத்தில் ஆசிரியர்களுக்கு முனைப்பாக இருக்க வேண்டும்.
 
இன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை ஆசிரியர்களது கல்விச் செயற்பாட்டிலும் உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. கடந்தகாலம் பற்றிய நோக்கினைக் கைவிட்டு எதிர்காலம் பற்றிய புதிய நோக்கினைக் கைக்கொள்ள நேரிடுகின்றன. துரிதகதியில் மாற்றங்கள் ஏற்படும் போது கடந்தகால எடுகோள்கள், நோக்கங்கள் பெறுமதியற்றதாகி விடுகின்றன. ஆகவே, பழைய அனுபவங்கள் பயனற்றுப் போகின்றன. கற்றல் - கற்பித்தல் செயன்முறையும் உயிர்ப்பற்றதாகி விடுகின்றன.
 
விருத்தியுறும் புதிய அறிவுத்தொகுதியைக் கையளிக்கும் கல்வி உளவியல் புதிய சிந்தனையும், நோக்கு முறையும் கொண்டிருக்க வேண்டும். இவை ஆசிரியர்களுக்கு திடமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கட்டாயக் கல்வி பெறும் காலத்திலேயே அவர்கள் கற்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்குரிய அறிவும் திறன்களையும் புதுப்பித்துக் கொள்வதற்கான கற்றல் - கற்பித்தல் செயன்முறை விரிவு பெற வேண்டும். ஆகவே, இதை மேம்படுத்தக்கூடிய சிந்தனைகள் வழிமுறைகள் பற்றிய புதிய நோக்குமுறைகள் வேண்டும்.இதனையே இந்நூல் வலியுறுத்துகின்றது.
 
சலிப்புட்டும் கற்றற் செயன்முறையிலிருந்தும் அதற்குத் துணையாக வுள்ள பழைய சிந்தனை முறையிலிருந்தும் முதலில் ஆசிரியர்கள் விடுபட வேண்டும். எப்போதும் சுயதேடல், சுயகல்வி என்ற பண்புசார் விருத்தி ஆசிரியத்துவத்தின் உயிர்ப்பு மையமாக அமைய வேண்டும். கற்றல்-கற்பித்தல் செயன்முறை சார்ந்த புதிய விளக்கங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்பத் தம்மைத் தயார்படுத்தக் கூடிய சுயவிளக்கம், சுயதேடல் இல்லாமல் ஆசிரியர் தமது பொறுப்பை செயற்படுத்த முடியாது. மாறிவரும் உலகில் ஆசிரியர் வகிபாகம் என்ன என்பது வெறும் கேள்வியாக மட்டுமல்ல, அவை சிந்தனையும் செயல்வாதமும் புதிய நடத்தைக்
கோலங்களுக்குமான பண்பு விருத்திகளையும் கொண்டுள்ளன.
 
இத்தகு அம்சங்களையும் உணர்ந்து கொள்ளவும் நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் செயற்படுவதற்குமான உந்துதலைத் தரும் நோக்கிலேயே இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, இன்றைய தமிழ் பேசும் சூழலில் கற்றல் - கற்பித்தல் செயன்முறைகள் சாரந்து புதிய தேடலுக்கும்  புதிய சிநத்னைககும் தேவைகள் மிகுநதுள்ன. இதற்கு இந்நூல் புதிய வாயில்களைத் திறக்க வேண்டும் அல்லது முன்னுரை இந்நூல் தரும் வெளிச்சத்திலிருந்து நாம் மீறல் வகைப்பட்ட தெரிவுகளுக்கும் தேடல்களுக்கும் செல்வதற்குத் துணை செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட.
 
இத்தகு பொறுப்புக்களை தீவிரமாக உணர்த்தி நிற்கும் நூலாக பேரா.மா.கருணாநிதி இந்நூலை அமைத்துள்ளார். ஆசிரியர்களது தொழில்சார் விருத்திக்கு இந்நூல் ஒரு கைந்நூலாகவும் அமைந்துள்ளது. இந்த ஆக்கம் மூலம் யாவரும் பயன்பெற்றுச் சிறக்கவும், தமிழ்க் கல்விச் சூழலில் தரமான கற்றல் - கற்பித்தல் சூழல் மேம்பாடு அடையவும் வழிகிடைக்கட்டும்.
தெ.மதுசூதனன்