Book Type (புத்தக வகை) : நிர்வாகவியல்
Title (தலைப்பு) : பாடசாலைகளை முகாமை செய்தல் சமகால அணுகுமுறை
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-02-01-033
ISBN : 978-955-1857-32-5
EPABNo : EPAB/02/18851
Author Name (எழுதியவர் பெயர்) : மா.சின்னத்தம்பி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 132
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 340.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் இல்லை
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • பாடசாலை முகாமைத்துவ தேவை
  • பாடசாலை முகாமைத்துவம்
  • பாடசாலை முகாமைத்துவமும்
  • கலைத்திட்ட முகாமைத்துவம்
  • பாடசாலைக்கான நேர முகாமைத்துவம்
  • கல்வி  தகவல் முகாமைத்துவம்
  • முரண்பாடுகளை முகாமை செய்தல்
  • அனர்த்த நிலைமைகளில் பாடசாலைகளை முகாமை செய்தல்
Full Description (முழுவிபரம்):

பாடசாலை அதிக சமூக கவன ஈர்ப்புக்குரியனவாகிவிட்டன. ஊடகங்கள், சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், உதவி வழங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போன்ற பலரும் பாடசாலைகள் முகாமை செய்யப்படும் முறைமை பற்றி அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அதிக நிதியை செலவிடும் அரசாங்கமும் தனது நிதிவளம் நன்கு முகாமை செய்யப்படவில்லை என்று கண்டனங்களைத் தெரிவிக்கின்றது. பெற்றோர் கூட மாணவரை ஈர்த்துக்கொள்ளும் வகையில் அவை முகாமை செய்யப்படவில்லையென்றும் அதனால்தான் தனியார் பாடசாலைகளும், கல்வி நிறுவனங்களும் வளர்கின்றன என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த பின்னணியை மனதில் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளேன். சமகால முகாமைத்துவ அறைகூவல்களை எதிர்கொள்ளும் புதிய தகைமை மற்றும் திறன்கள் பற்றி அதிக கவனத்துடன் எழுதியுள்ளேன்.
அதிபர்களுக்கும், பகுதித்தலைவர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும் இது மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன். 
இந்த நூலை எழுதும்போது எனக்கு நிறையவே உதவிய அன்பு மனைவி சசிலேகாவுக்கு நிச்சயம் நன்றி கூறவேண்டும். 
மிக அபாயகரமான காலப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உயிரோட்டத்துடன் முகாமை செய்த பேராசிரியரிரும், சிந்தனையாளரும், உன்னதமான மனித விழுமியங்களும் கொண்ட யதார்த்தவாதி பேராசிரியர் முன்னாள் துணைவேந்தர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களுக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்வதன் மூலம் நான் மனநிறைவடைகின்றேன்.
எனது இந்த நூலை வெளியிடுவதில் அக்கறை கொண்டு, அழகாகவும், திருத்தமாகவும் இதனை வெளியிடும் சேமமடு பதிப்பக உரிமையாளர் திரு.பத்மசீலன் அவர்களும் அவருக்குதவும் திரு.மதுசூதனன் அவர்களுக்கும் என்று நன்றி உரியதாகும். 
மா.சின்னத்தம்பி