கல்விச் சமூகவியல் |
இன்று தமிழ்ச்சூழலில் சமூகவியல், மானிடவியல் போன்ற கற்கையென்பது பரவலாக்கப்பட வேண்டிய கட்டத்திலேயே உள்ளது. இவை சார்ந்த அடிப்படையான நூல்கள் மற்றும் இத்துறைசார் கோட்பாடுகளின் பின்புலத்தில் எழுதப்படும் கட்டுரைகள் எம்மிடையே போதியளவு வளர்ச்சியடையவில்லை. இதனால், எமது சிந்தனை, தேடல், கற்கை, ஆய்வு போன்ற அம்சங்களில் சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளின் தாக்கம் முழுமையாக ஆழமாகச் செல்வாக்குச் செலுத்தவில்லை. |