கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் |
ஆரம்பத்தில் இருந்து மனித சமுதாயத்தில் கல்வியும் வளர்ந்து வந்துள்ளது. மனிதராகப் பிறந்த ஒவ்வொரு ஜீவியும் கல்வி வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களிலும் தமக்குப் பொருத்தமானதைத் தேவையானதைக் கற்றுக்கொண்டே வந்துள்ளார்கள். கற்றல் என்பது மனிதரது இயல்பான பண்புகளில் ஒன்றானது. மனிதர்கள் தொடர்ந்து புதியவற்றைத் தேடியும் கண்டுபிடித்தும் கல்வியின் பல்பரிமாண விருத்திக்கும் சாதகமான தன்மைகளை உருவாக்கி வந்துள்ளார்கள். |