இலங்கை நிர்வாக அரசியல்:சில பரிமாணங்கள் |
நவீன அரசியல் சமூக வாழ்க்கையில் பொதுநிர்வாகம் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. ஒரு நாடு ஜனநாயக நாடாக மிளிர்வதற்கும் அவ் அரசினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் உரியமுறையில் வெற்றி பெறுவதற்கும் பொதுநிர்வாகம் இன்றியமையாதது ஆகும். மாறாக அந்நிர்வாகக் கட்டமைப்பு சீரில்லாது காணப்படுமாயின் அவை நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கோ, அல்லது அதனால் ஏற்படும் அரசியல் ஸ்திரமின்மைக்கோ அடிப்படையாக அமையலாம். இன்றைய அரசுகள் சமூக நலன்பேணும் ஸ்தாபனமாக விளங்குவதனால் அரசாங்கம் தன்னில் உறைந்துள்ள அதிகாரங்களை நிர்வாகத்திற்கு பரவலாக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. இதனால் அவை நிர்வாக அரசுகளாக வளர்ச்சி யடைந்ததனை தொடர்ந்து அவை பற்றிய ஆய்வுகள் முக்கியம் பெற்றதோடு 'அரசியல் நிர்வாகம்' என்ற கல்வியும் அரசறிவியலில் முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொண்டது. |