Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : ஆசிரியரை வினைத்திறன் மிக்கவராக்கல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-01-01-031
ISBN : 978-955-1857-30-1
EPABNo : EPAB/2/19269
Author Name (எழுதியவர் பெயர்) : மா.சின்னத்தம்பி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 160
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 400.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் இல்லை
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • ஆசிரிய விளைதிறன்
  • சுய முகாமைத்துவம்
  • சுயகற்றல்
  • பாடசாலை வகிபாகம்
  • பாடசாலையில் வழிகாட்டல்
  • சமூக அந்தஸ்து
  • சமூக தலைமைத்துவம்
  • தொழில்சார் அறைகூவல்கள்
  • நெருக்கடிகளைக் கையாளுதல்
  • நேர முகாமைத்துவம்
  • தொழில்வாண்மை
  • எதிர்கால முன்னேற்றம்
Full Description (முழுவிபரம்):

ஆசிரியர்கள் பாடசாலைக் கல்வி முறையின் மைய விசையாக கருதப்படுகிறார்கள். பாடசாலை கல்வியை விளைதிறன் மிக்கதாக்க வேண்டிய தேவை உலகரீதியாக வற்புறுத்தப்படுகின்றது. கல்வியில்அதிகளவு அரச நிதியை முதலீடு செய்துவரும் இலங்கை போன்ற நாடுகள் பாடசாலைக் கல்வி தோல்வியடையாது தடுப்பது தொடர்பாக தொடர்ந்து முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இந்த தேவையப்படையில் ஆசிரியர்கள் பற்றிய கவனக்குவிப்பு அதிகரித்து வருவது நியாயமானதாகிவிட்டது. 
ஆசிரியர்கள் தம்மளவிலும் பாடசாலை மட்டத்திலும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டியது மிக அவசியமாகும். இவை தொடர்பான அம்சங்கள் இந்நூலி ஆராயப்பட்டுள்ளன. அதேபோல் சமூக மட்டத்திலும் பல்வகைப்பட்ட மாதிரிகளில் தொழிற்பட வேண்டியுள்ளது. இதனால் பாடசாலை ஆசிரியர்களை விளைதிறன் மிக்கவராக முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் பற்றியும், வழிகாட்டல்கள் பற்றியும் இந்நூல் விரிவாக ஆராய்கின்றது.
ஆழமாக இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஆசிரியரதும் சிந்தனை, நடத்தை என்பவற்றில் நிச்சயமாக மாறுதல்கள் ஏற்படும் என நம்புகிறேன் எனது வாசிப்புப்பலமும், அனுபவங்களும் ஆசிரியர் மீதான கூர்மையான எனது அவதானமும் இந்த நூலை விரிவாக எழுதுவதற்கு எனக்கு உதவின.
இந்த நூலை எழுதுங் காலத்தில் எனக்கு பல்வேறு வழிகளிலும் உதவிய எனது அன்பு மனைவி சசிலேகாவுக்கும் எனது பிள்ளைகளான சிராணி, சாளினி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.
நெருக்கடியான காலகட்டத்தில் தமிழர் உயர்கல்வி நிறுவனமான யாழ்ப்பாணப் பல்களைக் கழகத்தை திறமையாக நிர்வகித்து வரும் துணைவேந்தர் பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கம் அவர்களுக்கு இந்த நூலைச் சமர்ப்பிப்பதில் மனநிறைவு அடைகின்றேன்.
இந்த நூலை அழகாக வெளியிடும் பொறுப்பேற்றிருக்கும் சேமமடு பதிப்பகத்தினருக்கு குறிப்பாக திரு சதபூ.பத்மசீலன் அவர்களுக்கும் எனது ஆழமான நன்றி உரித்தாகும். 
நாடு முழுவதிலுமுள்ள ஆசிரியர்களும் கல்வியாளர்களும் இந்த நூலை வரவேற்க வேண்டுமென வேண்டி மகிழ்கிறேன். 
மா. சின்னத்தம்பி
கல்வியியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இலங்கை.