புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல்

நவீன கல்வி முறைமையோடு இணைந்த தொழிற்பாடாகத் தொடர் தொழில் வழிகாட்டல் அல்லது ஆற்றுப்படுத்தல் அமைந்து வருகின்றது. 
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றித் தொழில் நிறுவனங்களும் தொடர் தொழில் ஆற்றுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றன.
மனித வளத்தை உச்ச நிலையிலே பயன்படுத்திக் கொள்வதற் கும் தொழிற் சோர்வை நீக்கி தொழில்சார் உளநிறைவை ஏற்படுத்திக் கொடுத்தலுக்கும் வளமுள்ள வழிகாட்டல் வேண்டப்படுகின்றது. 
வழிகாட்டுனர் மேலாதிக்க நிலையிலிருந்து செயற்பாடுகளை முன்னெடுத்தல் தவறானது. மாணவரின் உளச்சார்பு மற்றும் தனித்து வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்காது, உறுவளஞ்செய்யும் நிலையிலிருந்தே வழிகாட்டலைத் தருதல் வேண்டும்.
வழிகாட்டல் என்பது உளவியல் மயப்பட்ட ஒரு செயற்பாடு என்பதை மறந்துவிடலாகாது. அதேவேளை தொழிற்கட்டமைப் புக்களோடு இணைந்துள்ள வர்க்க சார்புடைமையை அறிகை நிலையிற் புலப்படுத்துதலோடும் வழிகாட்டலை முன்னெடுத்தல் சமூக நீதியாகின்றது.
வழிகாட்டல் ஒரு புலமைப்பயிற்சியாக மட்டும் அமைதல் இல்லை. அது சமூக நீதியுமாகின்றது. அது எந்த வர்க்கத் தளத்திற் செயற்படுகின்றது என்பது மிகமுக்கியமானது.
சபா.ஜெயராசா

 

 


பொ.கனகசபாபதி
Kanakasababathy, P

             திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கடந்த இருபது வருடங்களாக இலங்கை, இந்திய, கனடியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகிறார். அவரது படைப்புக்களிற் சில, அதிபர் ஒருவரின் கூரிய பார்வையில், பெற்றோர்ஃ பிள்ளை உளவியல், மாறன் மணிக்கதைகள் (இருபகுதிகள்), திறவுகோல், மனம் எங்;கே போகிறது என்ற தலைப்புகளில் நூலுருப் பெற்றுள்ளன.
             சென்னைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியலில் சிறப்புப் பட்டம் பெற்று மகாஜனக் கல்லூரியில் அவர் ஏற்றுக் கொண்ட ஆசிரியப் பணி, சக மனிதர்களை மேம்படுத்தும் அவரது நோக்கத்திற்கு உவப்பாய் அமைந்தது. அதிபராய் அவர் பணிபுரிந்த காலங்களிற் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் பெருவளர்ச்சியுற்றன. புலம் பெயர்ந்து நைஜீரியாவில் ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், கனடாவில் ரொறன்ரோ  பாடசாலைச் சபையின் கல்விசா