Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : பாடசாலை முகாமைத்துவம்:கோட்பாடுகளும் பிரயோகங்களும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2014-03-01-129
ISBN : 978-955-685-028-4
EPABNo : EPAB/2/19285
Author Name (எழுதியவர் பெயர்) : கி.புண்ணியமூர்த்தி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2014
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 142
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 400.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

1.     முகாமைத்துவம்    01
2.     பாடசாலை பதவியணி    11
3.    விளைதிறன்மிகு பாடசாலைகளும் ஆசிரியர்களும்    20
4.     பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமும் நடைமுறைப் பிரச்சினைகளும்    31
5.     பாடசாலை முகாமைத்துவத்தில் திட்டமிடல்     44
6.     விழுமிய விருத்தியும் அதிபர்களும்    52
7.     பாடசாலை அதிபர்களும் முகாமைத்துவத் திறன்களும்    62
8.     பொது நிர்வாகமும் கல்வி நிர்வாகமும்    71
9.     ஆசிரிய ஊக்குவிப்புக்கள்    81
10.     தேர்ச்சி மையக் கலைத்திட்டமும் அதிபர்களின் வகிபாகமும்    93
11.     மனிதவள முகாமைத்துவம்     101
12.     கல்வி நிர்வாகத் தலைமைத்துவம்    112
13.     பாடசாலையும் பெற்றோரும்    123
14.     அதிபர்களின் முகாமைத்துச் செயற்பாடுகள்    131

 
Full Description (முழுவிபரம்):

கல்வியுலகில் எனது இரண்டாவது பிரசவமாக 'பாடசாலை முகாமைத்துவம்' என்னும் இத் தொகுப்பு அமைந்துள்ளது. எனது முதலாவது வெளியீடாகிய 'கலைத்திட்ட மாதிரிகைகள்'; ஆசிரிய உலகில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமை இந்நூல் வெளிவரக் காரணமாக அமைந்தது  எனலாம். வழமையாகக் கோட்பாடுகளை மாத்திரமே உள்ளடக்கிய கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்டதாக இவை போன்ற நூல்கள் வெளிவருவது கண்கூடு. இந்நிலையில் கோட்பாடுகளை இலகுவாகப் புரியவைக்கும் வண்ணம்  பிரயோக உதாரணங்கள் உள்வாங்கப்பட்டு இந்நூல் உருப்பெற்றுள்ளது. நேரடியாகக் கண்டும், கேட்டும் பெற்ற தகவல்களைக் கொண்டும், சுய அனுபவங்களைக் கொண்டும் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கல்விக்கல்லூரிகள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆகியவற்றில் கற்கும் மாணவர்களுக்கும், கல்விமாணி , பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, கல்வி முதுமாணி, ஆசிரிய கல்வியில் முதுமாணி, கல்வித் தத்துவமாணி போன்ற பாட நெறிகளைப்  பின்பற்றும் மாணவர்களுக்கும், பொது முகாமைத்துவம் , பாடசாலை முகாமைத்துவம், கல்வி நிர்வாகம், போன்ற விடயங்களில் தெளிவும், விளக்கமும் பெற இந்நூல் வரப்பிரசாதமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும். அது தவிர கல்வித்திணைக்களங்களில் கடமையாற்றும் கல்விசார் உத்தியோகத்தர்களுக்கும,;  பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும் தமது நிர்வாக முகாமைத்துவ நடவடிக்கைகளைச் சரிவரச் செய்வதற்கும், தம்மைச் சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கும் இந்நூல் மிகத் துணைபுரியும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும்.  
கல்வித்துறையில் பாடசாலைகள், கல்வித்திணைக்களங்கள் ஆசிரியகல்விக்கல்லூரிகள் என்றவகையில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நான் பெற்ற 30 வருட கால அனுபவங்களை இந்நூலில் ஊடாட விட்டுள்ளேன். இந்நூலை வாசிக்கும்போது அதில் பரவிக்கிடக்கும் யதார்த்த உண்மைகள் உங்கள் தொழில்வாழ்க்கையில்  இடம்பெற்றிருப்பதை நீங்கள் அனுபவித்து உணர வாய்ப்புக் கிடைக்கும். 
'ஆசிரியம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு. மதுசூதனின் தொடர்ச்சியான வேண்டுதல்களின் அடிப்படையிலேயே இந்நூல் வெளிவருகின்றது என்பதை வெளிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். புதிய, புதிய ஆக்கங்கள் வெளிவரவேண்டும் என்பதில் அவர் அக்கறையுடன் இருக்கும் அதேவேளை அது அழகுற வெளிவரும் வரை அவர் அயராது பாடுபடுபடுவார் என்பது நான் நேரடியாக அறிந்த உண்மையாகும். 'அகவிழி' , 'ஆசிரியம்' போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்த பெரும்பாலான  கட்டுரைகளின் தொகுப்பாகவே இந்நூல் அமைந்துள்ளது என்பதையும் நான் குறித்துக்காட்ட விரும்புகிறேன.; 
இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய எனது பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஆசான்,எனது வழிகாட்டி,என்னை என்றென்றும் ஊக்குவித்துக்கொண்டிருக்கும் பேராசிரியர் மா. கருணாநிதி ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தக்கொள்ளுகின்றேன். 
ஒருவர் நல்லதொரு வாண்மையாளராக விளங்குவதானால் அவர் தனது சுய ஆக்கங்களைச் சமூகத்துக்கு வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும் என தொடர்ச்சியாகக் கூறிவரும் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி திரு சி. ராஜேந்திரன் அவர்கள் தந்த ஊக்கமும், ஒத்துழைப்பும் கூட இந்நூல் வெளிவரக் காரணமாக அமைந்தது எனலாம். இந்நூலை அச்சு வடிவமாக அழகுற வெளிக்கொண்டுவந்த சேமமடுப் பதிப்பகத்துக்கும் அதன் உரிமையாளர் திரு பூ.பத்மசீலன் அவர்களுக்கும் எனது ஆக்கங்கள் வெளிவர எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனது அன்பு மனைவி விஜிதாவுக்கும் மகன் அம்சத்வஜனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். 
கி. புண்ணியமூர்த்தி 
ஆசிரிய கல்வியியலாளர். 

 

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : பாடசாலை முகாமைத்துவம்:கோட்பாடுகளும் பிரயோகங்களும்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
Edition (பதிப்பு): 2ம் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

1.     முகாமைத்துவம்    01
2.     பாடசாலை பதவியணி    11
3.    விளைதிறன்மிகு பாடசாலைகளும் ஆசிரியர்களும்    20
4.     பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமும் நடைமுறைப் பிரச்சினைகளும்    31
5.     பாடசாலை முகாமைத்துவத்தில் திட்டமிடல்     44
6.     விழுமிய விருத்தியும் அதிபர்களும்    52
7.     பாடசாலை அதிபர்களும் முகாமைத்துவத் திறன்களும்    62
8.     பொது நிர்வாகமும் கல்வி நிர்வாகமும்    71
9.     ஆசிரிய ஊக்குவிப்புக்கள்    81
10.     தேர்ச்சி மையக் கலைத்திட்டமும் அதிபர்களின் வகிபாகமும்    93
11.     மனிதவள முகாமைத்துவம்     101
12.     கல்வி நிர்வாகத் தலைமைத்துவம்    112
13.     பாடசாலையும் பெற்றோரும்    123
14.     அதிபர்களின் முகாமைத்துச் செயற்பாடுகள்    131

 

Full Description (முழுவிபரம்):

நிறுவனத்தின் முகாமையாளர்கள் ஒவ்வொருவரும் முகாமைத்துவக் கோட்பாடுகளை அறிந்திருத்தல் இன்றியமையாதது. நிறுவனம் தொடர்பான பயனுள்ள அகக்காட்சியைப் பெறுதல், நிறுவனத்தின் வளங்களைச் சிறப்பாகப் பண்படுத்துதல், விளைதிறனுள்ள முகாமைத்துவம், விஞ்ஞான முறையிலான தீர்மானம் மேற்கொள்ளல், சூழல் மாற்றங்களால் ஏற்படும் தேவைகளை நிறைவேற்றுதல், சமூகப் பொறுப்பினைப் பூர்த்திசெய்தல், பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சிகளை முகாமைத்துவம் செய்தல் முதலிய விடயங்களின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு  முகாமைத்துவக் கோட்பாடுகள் பக்கபலமாக இருக்கின்றன. பாடசாலையின் முகாமைத்துவப் பொறுப்பை ஏற்பவர்கள் அன்றாட நிருவாகச் செயல் முறைகளை நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாது நிறுவனத்திலுள்ள சகல வளங்களையும் விளைதிறனுடன் பயன்படுத்தி நிறுவனத்தின் விளைதிறனை மேம்படுத்துதல் அத்தியாவசியமானது.
ஆரம்ப காலங்களில் கல்வி நிருவாகமானது ஒப்பீட்டடிப்படையில் பொது நிருவாகக் கோட்பாடுகளையும் சிந்தனைகளையும்  அடியொற்றி யதாக இருந்து வந்துள்ளன.  பொது நிருவாகத்துறையில் உயர்தொழில் அனுபவம் மிகுந்தவர்களால் விருத்திசெய்யப்பட்ட  கோட்பாடுகளும்  கொள்கைகளும் கல்வி நிருவாகத்திலும் இடம்பிடித்திருந்தன. பாடசாலை முகாமைத்துவத்தில் அதிபர்களின் தலைமைத்துவம், ஆசிரியர்களின் பொறுப்புகள் மற்றும் இருசாராரினதும் ஆளுமைகள் பொதுத்துறை நிருவாகத்திலிருந்தும் பெருமளவில் வேறுபட்டுக் காணப்பட்ட வேளையில் கல்வி முகாமைத்துவமும் தனித்துறையாக விருத்திபெறத் தொடங்கியன.
இன்று கல்வித்துறையிலே முகாமைத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளும் அதன் பிரயோகங்களும் விரிவான முறையில் இடம்பெற்றுவருதல் இதற்குச் சான்றாகும். குறிப்பாக பாடசாலை முகாமைத்துவம் தொடர்பில் குவியப்பட்டு வரும் சிந்தனைகளும் ஆய்வுகளும் கவனத்திற்குரியதாக உள்ளன.
பாடசாலை முகாமைத்துவத்தில் பங்கேற்பவர்கள் நிறுவனம் பற்றிய அகக்காட்சி பெறுவதற்கும், பாடசாலைகளில் மாணவரின் வினையாற்றல்களை மேம்படுத்துவதனூடாக அடைவை உயர்த்து வதற்கும், இருபத்தோராம் நூற்றாண்டில் அறிவு யுகத்தில் கற்றலை மேம்படுத்துவதற்கான உபாயங்களை இனங்காண்பதற்கும் உரிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கென நிறுவனத்தில் கிடைக் கும் வளங்களை முகாமைத்துவம் செய்தலும் நாட்டின் கல்விக்கொள் கைகளுடன் இணைந்த வகையில் பயனுள்ள தீர்மானங்களை மேற்கொள்ளவதும் இன்றைய பாடசாலை முகாமையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விடயங்களாகும். இதற்கெனத் தெளிவான தொலைநோக்கும் அத் தொலைநோக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இலக்குகளும், நோக்கங்களும் உருவாக்கப்பட்டு அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் பாடசாலை முகாமை யாளர்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அண்மைக் காலங்களில் இலங்கையின் பாடசாலை முறைமையில் அறிமுகமாகி யுள்ள புதிய கொள்கைகளின் அடிப்படையிலான நிகழ்ச்சித் திட்டங்களான பாடசாலை மட்ட முகாமைத்துவம், பாடசாலை மேம்பாட்டுத்திட்டம், ஆயிரம் பாடசாலைகள் திட்டம் முதலியன விளைதிறன்மிக்க முகாமையாளர்களை எதிர்பார்த்திருக்கின்றன.
பாடசாலைகளை முகாமைத்துவம் செய்தல் ஒரு சிக்கலான பணியெனவும் பாடசாலை முகாமைத்துவத்திலே வெற்றி காண்பதற்கு பாடசாலைச் செயற்பாடுகளை மிக விரிவாகவும் நுட்பத்துடன் கூடிய வகையிலும் திட்டமிடுதல் அவசியமெனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. முகாமைத்துவச் செயல்முறைகளில் இடம்பெறும் அடிப்படை விடயங்களான திட்டமிடல், திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், அவற்றைக் கண்காணித்தல், பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளுதல், பிரச்சினைகளைத் தீர்த்தல், மாற்று வழிமுறைகளைக் கண்டறிதல், தீர்மாங்களை மேற்கொள்ளுதல் முதலிய திறன்கள் முகாமையாளர்களான அதிபர்களுக்கு அவசியமானவை.
மேற்கூறிய செயல்முறைகளை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் குறுங்கால மற்றும் நீண்டகால பயிற்சி களை வழங்கும் ஏற்பாடுகளைக் கல்வியமைச்சும் அதனோடு இணைந்த நிறுவனங்களும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆயினும் அதற்கும் அப்பால் முகாமையாளர்கள் தமது கொள்கையை சுயமாக விரிவுபடுத்தும் நோக்கில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவரும் நூல்களைத் தேடி வாசித்து தமது அறிவை இற்றைப்படுத்திக்கொள்ளுதல் அவசியமாகின்றது. முகாமையாளர்கள் தொடர்ந்து கற்பவர்களாக மாறும்போதே அவை முகாமைத்துவச் செயல்முறைகளில் வெளிப்பட்டு பாடசாலை, சமூகம் மற்றும் நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்.
கல்வி தொடர்பான பல நூல்கள் தமிழ்மொழியில் அநேகம் வெளிவருகின்றன என்றாலும் அவற்றுள் பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான நூல்கள் மிகக்குறைவு. திரு.கிருஷ்ணபிள்ளை  புண்ணியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூலானது மாறிவரும் பாடசாலை முகாமைத்துவத்திற்குத் தேவையான பல முக்கியமான விடயங்களை அடக்கியுள்ளது. குறிப்பாக விளைதிற னுள்ள பாடசாலையின் உருவாக்கத்தில் ஆசிரியர்களின் பங்கு, பாடசாலை மேம்பாட்டுத்திட்டம், பாடசாலையில் விழுமியங்களைப் பேணுதல், கல்வி முகாமைத்துவத்தில் ஊக்கல், கொள்கையின் பிரயோகம், தேர்ச்சிமையக்  கல்வியை முகாமைத்துவம் செய்தல், பாடசாலையின் அபிவிருத்திக்கு உதவக் கூடியவாறு மனிதவளத்தை முகாமைத்துவம் செய்தல், விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகாமைத்தும் முதலிய விடயங்களை களநிலை யதார்த்தங்களுடன் ஒப்பிட்டு அனுபவங்களையும் பரிமாறியுள்ளமை இந்நூலுக்கு அழகு சேர்த் துள்ளது. பாடசாலை முகாமைத்துவத்துவத்தோடு தொடர்புடையவர்கள் மட்டுமல்லாது வகுப்பறை முகாமைத்துவத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், கல்விச் செயல்முறைகளை மேற்பார்வை செய்வோர், பெற்றோர் முதலியோருக்கும் இந்நூல் பயனுள்ளது.
பேராசிரியர் மா.கருணாநிதி
கல்விப் பீடம்
கொழும்புப் பல்கலைக் கழகம்