ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு |
'ஈழத்துச் சிறுகதை வரலாறு' என்ற இந்நூலை ஆக்குவதற்குத் தகவல் திரட்டுவதிலும், அனைத்துச் சிறுகதைகளையும் கூடிய வரை படிப்பதிலும் அதிக காலத்தை நான் எடுத்துக்கொண்டேன். 400 சிறுகதைப் படைப்பாளிகளையும், 274 சிறுகதைத் தொகுதிகளையும், சுமார் எண்ணாயிரம் வரையிலான பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளையும் கொண்ட குறுகிய வரலாறுதான் ஈழத்துச் சிறுகதை வரலாறு. எனினும், நமது சிறுகதை இருப்பினை அடையாளம் காண்கின்ற முயற்சியும், அதன் மூலம் நாம் தமிழிலக்கியத்தில் - குறிப்பாகச் சிறுகதைத் துறையில் அடைந்துள்ள வளர்ச்சியையும் கணிப்பீடு செய்வதில் நிறைய இடர்பாடுகளுள்ளன. இன்று வரையிலான சிறுகதை வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றிய கணிப்பீடுகள் சார்புநிலை சார்ந்தவையாகவே விளங்குகின்றன. சமநிலை சார்ந்தவையாகவில்லை. |