கற்றல் கற்பித்தல் : மேம்பாட்டுக்கான வழிமுறைகள் |
வகுப்பறைக் கற்பித்தல் சிறப்புற அமைவதற்குப் பல்வேறு காரணிகள் துணைபுரிகின்றன. ஆசிரியர் கல்வியும் தொழில்சார் கல்வியில் வழங்கப்படும் அணுகுமுறைகளும், நுட்பங்களும் மட்டும் கற்றல் - கற்பித்தலின் மேம்பாட்டுக்கு உதவுவதில்லை. இவற்றோடு, கல்விச்சூழல், பாடசாலைகளில் அதிபரின் தலைமைத்துவம், பெற்றோரின் ஒத்துழைப்பு வகுப்பறைக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதல், ஆசிரியர் தொழில்சார் பயிற்சியின் கூறுகளை இற்றைப்படுத்துதல் என்பனவும் அத்தியாவசியமானவை. கற்றல் - கற்பித்தல் : மேம்பாட்டுக்கான வழிமுறை என்ற இந்நூல் இத்தகைய விடயம் பற்றிய கருத்துக்களையே முன்வைத்துள்ளது. இந்நூலில் இடம்பெறுகின்ற கட்டுரைகள் கல்வித்துறை மேம்பாடு பற்றிச் சிந்திப்போர், அத்துறையில் பணிபுரியும் சகல தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகின்றேன். |