தமிழ் அழகியல் |
அழகியல் கலையின் அழகுசார் பண்புக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட கலைக் கொள்கைகள் பற்றி விசாரணையாக விளங்குவது கலை உருவாக்கம், ரசனை, வியாக்கியானம், விமர்சனம், மதிப்பீடு போன்ற விடயங்களின் அடிப்படையிற் கலைகளையும், கலைக்கொள்கைகளையும் ஆராய்வது. மேலைத்தேசத்தைப் பொறுத்த மட்டில் அழகியல் நீண்டகால தத்துவத்துறையின் ஒரு பிரிவாக வளர்ந்து பின் தனித்துறையாக தனக்கேயுரிய முறைமையியலூடு வளர்ந்து வந்தது. ஒரு செழுமையான கலை விமர்சனம் அரிஸ்டோட்டில், பிளேட்டோ காலத்தில் இருந்து வந்தமையை அழகியல் வரலாறு எடுத்துக் கூறுகிறது. 18ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மேலைத்தேய அழகியல் வரலாற்றில் ரசனை பற்றிய கருத்தாடல் மூலம் திறனாய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுதந்திரமான, ஆரோக்கியமான, ஓர் விமர்சனம் கலையை அடிப்படையாகக் கொண்டு வளர்வதற்கு வழிவகுத்தது. |