Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கற்றல் உளவியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-01-03-003
ISBN : 978-955-1857-02-88
EPABNo : EPAB/02/18842
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 132
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 500.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):
பொருளடக்கம்
  1. கல்வி உளவியல் - விளக்கமும், விரிவும், எதிர்பார்ப்புக்களும்
  2. கற்றலின் இயல்பும் விளக்கமும்
  3. மனித வளர்ச்சியும் விருத்தியும் தொடர்பான கோட்பாடுகள்
  4. கவனமும் கற்றலும்
  5. புலக்காட்சி
  6. கற்றலை விளக்கிய உளவியலாளரும் கோட்பாடுகளும்
  7. கற்றலும் சமூக இயக்கமும், பண்டுறாவின் சமூகக் கற்றற் கோட்பாடு
  8. கார்ல் ரொஜர்ஸ் முன்மொழிந்த விளைவீட்டற் கோட்பாடு
  9. கற்றலும் அறிகை உளவியற் சிந்தனா கூடமும்
  10. புறூனரின் அறிகை உளவியலும் பண்பாட்டு உளவியலும்
  11. மார்க்சிய உளவியற் சிந்தனா கூடமும் வைக்கோட்சியும்
  12. கற்றல் இடமாற்றம்
  13. கற்றலும் கட்டுமானவாதமும் 
  14. நினைவாற்றல் உளவியல் - ஞாபகமும் மறதியும் 
  15. நுண்மதி
  16. ஆக்க மலர்ச்சி
  17. கற்பதைக் கற்றுக்கொள்ளல்
Full Description (முழுவிபரம்):

வளர்ந்து விரிந்து வியாபித்து வரும் கல்விச் செயற்பாடுகள் கல்வி உளவியலின் தேவையை மீள வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. அறிவுப் பெருக்கை அனைத்து மாணவர்க்கும் ஆழத்துடனும் செறிவுடனும் கையளிப்பதற்குக் கற்றல் உளவியல் பல நிலைகளிலும் பல பரிமாணங்களிலும் துணைசெய்ய வல்லது. கற்றல் உளவியலின் கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்குமிடையேயுள்ள இடைவெளிகளை மீளாய்வு செய்வதற்குரிய தேவையை நண்பர்கள் அவ்வப்போது வலியுறுத்தி வந்தனர். 
பேராசிரியர் வ.ஆறுமுகம், யாழ்.பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் செல்வி சுசிலா அருளானந்தம், கலாநிதி அனுசியா சத்தியசீலன், கலாநிதி த.கலாமணி, கலாநிதி ஜெயலட்சுமி இராசநாயகம், பேராசிரியர் க.சின்னத்தம்பி, கிழக்குப் பல்கலைக்கழகத்துக் கல்வியியற்புலத் தலைவர் பேராசிரியர் ம.செல்வராஜா, கொழும்புப் பல்கலைக்கழகக் கல்வியியற் பீடாதிபதி பேராசிரியர் சோ.சந்திரசேகரன் மற்றும் கலாநிதி எம்.கருணாநிதி ஆகியோர் இவ்வாறான நூலாக்கத்தின் தேவையைப் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளனர். 
புதிய ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய நூலாக்கத்தின் தேவையை வேண்டிநிற்கும் நண்பர் தெ.மதுசூதனன் அவர்களும், சேமமடு வெளியீடுகளின் தலைவர் திரு.பூலோகசிங்கம் பத்மசீலன் அவர்களும் நன்றிக்குரியவர்கள்.