Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்வியில் எழு வினாக்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-01-01-086
ISBN : 978-955-1857-85-1
EPABNo : EPAB/02/18577
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 116
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 280.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

முன்னுரை 
ஆசிரியர் உரை 
பதிப்புரை 
  • கல்வியில் சமத்துவமும் சமசந்தர்ப்பமும்
  • சிவில் சமூகமும் கல்வியும்
  • கல்வியுலகும் கேடுறுத்தலும்
  • இனக்குழும உறவுகளும் விளைவுகளும்
  • கல்வி நிதி வழங்கல்
  • மனிதவள விருத்தியும் கல்வியும்
  • பெண்களும் கல்வியும்
  • கல்விக்குரிய தனிநபர் கேள்வியும் சமூகக் கேள்வியும்
  • பல்கலைக்கழகக் கல்விப் பிரச்சினைகள்
  • கல்வியில் பண்பும் தரக்காப்பீடும்
  • முழுமைப்புல முகாமைத்துவமும் கல்வியும்
  • அறிவுக் காலனித்துவமும் மறுவாசிப்பும் 
  • அறிவை முகாமை செய்தல்
  • செயல்நிலைக் கற்றலை முன்னெடுத்தல்
  • மரபு வழியான கற்பித்தலிலிருந்து விலகுதல்
  • ஆழ்கற்றல்
  • பின்னிணைப்பு
Full Description (முழுவிபரம்):

எழுவினாக்கள் எழுபொருள்கள் எனவும் குறிப்பிடப்படும். கல்விச் செயல்முறையின் விரைந்த மாற்றங்களுடன் பிரச்சினை களும் தொடர்ந்து மேலெழுந்த வண்ணமிருக்கும். பிரச்சினைகளைக் குவியப்படுத்தும் கருத்தாடல்கள் செல்லும் வழியைச் செம்மைப் படுத்த உதவும்.
எழுபொருள்களின் கருத்தாடல் முக்கியத்துவத்தை அறிந்து பல்கலைக்கழகங்களும் ஆசிரிய கலாசாலைகளும், கல்வியியற் கல்லூரிகளும் தத்தமது பாடத்திட்டங்களில் இதனை உள்ளடக்கி வருகின்றார்.
கல்வியியல் சார்ந்த கருத்துக்களையும், முன்மொழிவுகளையும் திறனாய்வின்றி உள்வாங்கும் அறிவூக்கமற்ற நிலையிலிருந்து விடுபட வைப்பதற்குரிய கருத்தாடல்கள் பலநிலைகளிலும் வேண்டப்படு கின்றன. திறனாய்வும், மீள்வாசிப்பும் இன்றி முன்னேற்றங்களை எட்ட முடியாது.
கல்வியியல் அதற்கென உரிய தனித்துவமான சொல்லாடல் களைக் கொண்டுள்ளது. அறிவு நீண்டு வளர்ந்து செல்லும்பொழுது அதற்குரிய புதிய புதிய கலைச்சொற்களும் தோற்றம்பெற்ற வண்ண மிருக்கும். அந்த நடப்பியலைப் புரிந்துகொள்ளும் பொழுது புதிய சொற்கள் மலைப்பை உண்டாக்காது மகிழ்ச்சியை உண்டாக்கும். சொற்பெருக்கு மொழி வளர்ச்சியின் சுட்டியாகும். 
இந்நூலாக்கத்துக்குத் துணை புரிந்த நண்பர்களும், சேமமடு பதிப்பகத்தினரும் நன்றிக்குரியவர்கள். பயனுள்ள நூல்களைத் தந்த பிரித்ததானிய கழக நூலகத்தினருக்கும் நன்றி
சபா.ஜெயராசா