காலையில் கதிரவன்
கண் விளிக்க
காலை புலர்ந்தது
கதிரொளி பரந்தது
காலையென்று அறியாமல்
கன்துயில் கொள்ளலாமோ
காலை விடிந்தது
கண்விளித்து வாடி
சேவல் கூவுது
செந்தாமரை விரியுது
கோயில்மணி அடிக்குது
கூடிக்காகம் கரையுது
பசுவும் பால் சொரியுத
பசுக்கன்றும் துள்ளிக் குதிக்குது
பசும்புல் நுனியில் தங்கிய
பனித் துளியும் மறையுது
பூக்கள் எல்லாம் விரியுது
புதுமணம் எங்கும் பரவுது
பாக்கள் தீட்டிய
பாவலர் இருப்பது பாரடியோ.
பஞ்சனையில் படுத்துறங்கியது போதும்
பள்ளிச் சிறுவர் படிப்பதைக் கேளடி
கொஞ்சமும் கூச்சம் இல்லாமல்
குறட்டை விட்டுத் தூங்கலாமோடி
|