Book Type (புத்தக வகை) : | அகராதி | |
Title (தலைப்பு) : | கலைத்திட்ட மாதிரிகைகள் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2010-05-02-075 | |
ISBN : | 978-955-1857-74-5 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | கி.புண்ணியமூர்த்தி | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2017 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 204 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 600.00 | |
Edition (பதிப்பு): | 2ம் திருத்திய பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | பொருளடக்கம்
|
|||||||||||||||||||||||
Full Description (முழுவிபரம்): | ஆசிரியத் துறையில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு வருக்கும் கலைத்திட்டம் தொடர்பான அறிவு இன்றியமையாத தாகும். இந்நூல் கலைத்திட்டத்தின் ஒழுங்கமைப்பு, உள்ளடக்கம், கலைத்திட்ட மாதிரிகைகளின் அமைப்பு, இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்களில் கலைத்திட்ட மாதிரிகைகள் செலுத்தியுள்ள செல்வாக்குகள் என்பன தொடர்பாக ஆராய்கின்றது. ஏற்கெனவே வெளிவந்த 'கலைத்திட்ட மாதிரிகைகள்' நூலில் சில பகுதிகள் நீக்கப்பட்டு வேறு சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே வெளிவந்த 'கலைத்திட்ட மாதிரிகைகள்' 2010 ஆம் ஆண்டு வெளிவந்ததாகும். இந் நூல் சந்தையில் முழுமையாக முடிவடைந்ததன் காரணமாகவும் இந்நூலை மீண்டும் பதிப்பிக்குமாறு பல மட்டங்களில் இருந்து வந்த கோரிக்கைகள் காரணமாகவுமே இத் திருத்திய பதிப்பு வெளியிடப்படுகின்றது. இந்நூல் தற்காலக் கல்விச்சூழ்நிலைகளுக்குப் பொருத்தமானவாறு இற்றைப்படுத்தப் பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.
கல்விக் கல்லூரிகளில் கல்வி கற்கும் ஆசிரிய பயிலுனர்கள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் கல்விமாணிப் பாடநெறியைப் பின்பற்றும் மாணவர்கள், பட்டப்பின்படிப்புக்கல்வி டிப்ளோமாப் பாடநெறியைப் பின்பற்றும் மாணவர்கள், பட்டப்பின்படிப்புக் கல்விமுகாமைத்துவ டிப்ளோமாப் பாடநெறியைப் பின்பற்றும் மாணவர்கள், கல்வி முதுமாணி, ஆசிரிய கல்வியில் முதுமாணிப் பாடநெறிகளைப் பின்பற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரது கல்வித் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இந்நூல் அமையும் எனக் கருதுகிறேன்.
இன்று கலைத்திட்டம் தொடர்பான தேடல்கள் பல்வேறு உயர் கல்வி மட்டங்களில் வியாபித்துக் காணப்படுகின்றன. இதன் முந்திய பதிப்பு தேசிய கல்விக் கல்லூரிகள், தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் பெரு வரவேற்பைப் பெற்றமை எனக்குப் பாரிய தூண்டுதல்களாக அமைகின்றது.
எனது 32 வருட ஆசிரிய வாழ்க்கையில் நான் பெற்ற நடைமுறை அனுபவங்களையும் இந் நூலில் ஊடாடவிட்டுள்ளேன். பாடசாலைகளிலும் கல்வித் திணைக்களங்களிலும் கல்விக் கல்லூரிகளிலும் நான் பெற்ற அனுபவங்களே எனக்கு இந்நூலை ஆக்குவதற்குரிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.
இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய எனது பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஆசான், பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் இந்நூலை மீள உருவாக்குவது தொடர்பாக எனக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய 'ஆசிரியம்' சஞ்சிகை ஆசிரியர் திரு.தெ.மதுசூதனன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்நூலை அழகுறப் பதிப்பித்து வெளியிட்டுள்ள பதிப்பாளர் திரு.சதபூ.பத்மசீலனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலுக்கு தாங்கள் வழங்கும் ஒத்துழைப்பே எனது எதிர்கால ஆக்கங்களுக்கு அத்திவாரமாக அமையும் எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புவதுடன் இந்நூலால் பயனடையவும் வாழ்த்துகிறேன்.
கி.புண்ணியமூர்த்தி
சிரேஷ்ட ஆசிரிய கல்வியியலாளர்
தேசிய கல்விக் கல்லூரி
மட்டக்களப்பு
|
|||||||||||||||||||||||
|