Full Description (முழுவிபரம்): |
ஈழத்துக் கல்வியியல் செயற்பாடுகள் தொடர்பில் சிந்திக்கின்ற ஒரு மனிதன் பேராசிரியர் கலாநிதி.ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும் நூலை விடுத்து கற்பானாயின் அவனால் கல்வியியல், உளவியல் தொடர்பில் முழுமையான அறிகையினைப் பெற முடியாதென்பதே உண்மையாகும்.
1980களில் தமிழில் கல்வியியல், உளவியல் தொடர்பான நூல்கள் மிகமிக அரிது. என்னாசான் பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்த காலத்தில் நானும் ஒரு மாணவனாகக் கற்றதையும் அவர் எனக்கு கற்பித்ததையும் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவரோடு இணைந்து விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் கல்வி உளவியல் துறை சார்பாக என்னை வழிகாட்டியமையையும் நினைத்துப் பார்க்கின்றேன்.
கல்வியியலின் எத்துறையாக இருந்தாலும் மிக ஆழமாக, தெளிவாகக் கற்பிக்கும் திறனும் ஆளுமையும் மிக்க முறையில் விரிவுரைகளை ஆற்றுவதையும் காணலாம். அந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமை யாவும் ஒருமித்த வருகையே 'கல்வியும் உளவியலும்' ஆகும். அதனை 25 அத்தியாயங்களாக வகுத்து, பகுதி ஐஇஐஐ என அவர் காலத்தில் இரு நூல்களாக வெளியிடப்பட்டது. இவற்றை அதன் உட்பொருள் நோக்கி அறிமுகம், வளர்ச்சி, உளவளர்ச்சி, உளநலம், வழிகாட்டல், உளத்தொழிற்பாடு, கற்றல் கொள்கை, மனிதகற்றல், கற்பித்தல் ஆகிய ஒன்பது அறிகைக்குள் உள்ளடக்கி நோக்கலாம்.
இன்றைய ஆசிரியர்கள், பயிற்சிக்காயினும் சரி, பயிலுதலுக் காயினும் சரி பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும் இந்நூலைத் தெரியாமல், அறியாமல் இருப்பாராயின் அது திறனற்ற கற்பித்தல் கற்றலாகவே அமையும்.
நீண்ட இடைவெளியின் பின் இந்நூலை மீள்பதிப்புச் செய்து முழுமையான ஒரே நூலாக வெளியிடுவதையிட்டு பெரு மகிழ்ச்சி யடைகின்றேன். இப்பெருமுயற்சியில் தன்னை முழுமைப்படுத்தி ஈடுபட்ட சேமமடு பொத்தகசாலை நிறுவனர் திரு.சதபூ.பத்மசீலன் அவர்களுக்கு கல்வியியல் உலகின் சார்பான நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் கூறும் கல்வியியல் உலகம் பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்களை என்றும் மறக்காது, ஏனெனில் 'கல்வியும் உளவியலும்' முதன்முதலில் ஈழத்துத் தமிழுக்குத் தந்தவர்.
பேராசிரியர் க.சின்னத்தம்பி
|
ஏனைய பதிப்புக்களின் விபரம் |
Content (உள்ளடக்கம்): |
பொருளடக்கம்
- கல்வி உளவியலும் அதன் ஆய்வு முறைகளும்
- பரம்பரையும் சூழலும்
- முதிர்வு
- வளர்ச்சிக் கோலங்கள்
- குழந்தைப் பருவமும் பிள்ளைப் பருவமும்
- கட்டிளமைப் பருவம்
- சிந்தனை - பியாஜேயின் கருத்துக்கள்
- நுண்மதி
- இயல்பூக்கம், நனவிலி ஊக்கல், சமூக ஊக்கல்
- உளவியல் தேவைகள்
- பொருத்தப்பாடு
- ஆளுமை, மனப்பான்மை, கவர்ச்சி
- வழிகாட்ட முறைகள்
- விசேட உதவி வேண்டிய பிள்ளைகள்
- கவனமும் புலக்காட்சியும்
- ஞாபகம்
- தூண்டி - துலங்கல் சார் நிபந்தனைப்பாடு
- தொழிலிசார் நிபந்தனைப்பாடு
- அகக்காட்சி
- கற்றலில் இடமாற்றம்
- எண்ணக்கருவாக்கம்
- பிரச்சினை விடுவித்தல்
- சிந்தனையும் மொழியும்
- வகுப்பறைக் கற்பித்தல்
- நிரலித்த கற்பித்தல்