Full Description (முழுவிபரம்): |
முன்னுரைகள் பற்றிய ஆய்வுகளின் தொடர்ச்சி அதனைத் தனித்துவமான ஒரு இலக்கிய வடிவம் என்ற நிலைக்கு மேலுயர்த்தியுள்ளது. ஆழமான முன்னுரைகள் வெறுமனே அறிமுகக் குறிப்புக்களாக மட்டும் அமைந்துவிடுதல் இல்லை. பல்வேறு கலைப் பரிமாணங்களின் செறிவும், திறனாய்வு வீச்சுக்களும், வளமான எடுத்தியம்பல் முறைகளும் திறன்மிகு முன்னுரைகளின் இடம்பெற்றுள்ளமையைக் காணமுடியும். முன்னுரைகள் ஒருவகையில் கருத்து வினைப்பாட்டின் (னுளைஉழரசளந) கட்டுச்செட்டான வடிவங்களாக அமைதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இவ்வகையில் பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோரின் முன்னுரைகளின் தனித்துவங்களை வரைபுபடுத்த வேண்டியுள்ளது.
வரலாற்று நிலையிலும் தமிழியல் நிலையிலும் தனித்துவமான முன்னுரைக்கங்கள் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. தரப்பட்ட நூலியங்களை ஊடறுத்துச் செல்லும் அறிகை நிலையின் வெளிவீச்சுக்களாக அவை அமைந்துள்ளன.
தமிழ் மரபில் முன்னுரை என்பது 'பொதுப்பாயிரம்' 'சிறப்புப் பாயிரம்' என இருதுறையாக எண்ணக் கருவாக்கம் செய்யப்பட்டது. பொதுப்பாயிரத்தில் நூலின் வரலாறும், நூலாசிரியர் வரலாறும், ஆசிரியன் பாடங்கூறும் வரலாறும், மாணக்கர் வரலாறும், மாணக்கரின் கல்வியறியும் வரலாறும் கூறப்படும், சிறப்புப் பாயிரம் நூலின் பெயர், நூல் வந்தவழி, நூலாசிரியர் பெயர், நூலின் பெயர், நூல் குறித்த பொருள், நூற்பயன் முதலியவற்றைக் குறித்து நின்றது.
மேலைப்புலக் கல்வியின் பரவல் மேற்குறித்த நிலைகளில் இருந்து முன்னுரைகளை இலக்கியக் கருத்துவினைப் பாட்டுத் தளத்துக்கு நிலை மாற்றம் செய்தது. நூலியத்தில் (வுநஒவ) இருந்து முகிழ்த்தெழும் அறிகைப் பதிவாகவும், உட்பொருளைத் திறனாய்வுக்கு உட்படுத்தும் முன்னெழு பதிவாகவும் (Pசழடழபரந) முன்னுரைகளை எழுதும் மேலைப்புல அறிகை வீச்சுக்கு உட்பட்ட பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் முன்னுரைத் தளத்தைத் தமிழில் வளம் பெறச் செய்தார்.
முன்னுரை என்பதைக் குறிக்கும் பல்வேறு நுண்ணிய எண்ணக் கருக்கள் ஆங்கில மொழியில் உருவாக்கம் பெற்றுள்ளமை அதற்குரிய இலக்கிய நடப்பியல் நிலையின் எழுச்சியை ஒருவகையிலே சுட்டிக் காட்டுகின்றது. அவ்வகையில் உருவாக்கப்பட்ட நுண் எண்ணக் கருக்கள் வருமாறு:
முன்னுரை - Introduction
முன்னெழு குறிப்பு - Fore Word
முகப்புரை - Preface
முன்நிறைவு - Preamble
முன்னமைவு - Prelude
திறவுரை - Preliminary
முன்னியம்பல் - Exorcism
முன்விளக்கல் - Phenomenon
முன்னெழுபதிவுகள் - Prologue
ஆங்கிலக் கல்வி மரபிலே மிகுந்த வளமான அறிகைத் தளத்தில் அமைந்த முன்னுரை இலக்கியத்தைத் தமிழில் எகை செய்வதற்குரிய புலமையாக்கங்களைப் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆங்கில மரபிலே முன்னுரைகளில் இருந்து மேற்கோள்கள் காட்டப்படும் உயர்நிலை அறிகைச் செயற்பாடுகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. புலமை நிலையில் திறன்மிகு முன்னர் மரபு பேராசிரியர் சு.வித்தியானந்தன் காலம் தொடக்கம் தமிழ் மரபில் வளர்க்கப்பட்டு வந்தாலும் அதனை ஓர் அறிகை வடிவமாகவோ, இலக்கிய வடிவமாகவோ கருதி ஆய்வுகளும் மதிப்பீடுகளும் உயர்நிலையில் மேற்கொள்ளப்படாத பெரும் வெற்றிடம் காணப்படுதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
முன்னுரைகளின் முக்கியத்துவம் கருதி அவற்றைத் தொகுத்து வெளியிடும் பணிகள் தமிழில் ஏற்கனவே கால்கோள் கொண்டுள்ளனவாயினும் அதே தளத்திலிருந்து மேலும் முன்னோக்கிய பெயர்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்நூல் தளராத விசையை வழங்குமெனில் தமிழியலின் புதியதொரு பரிமாணமத்தின் வளர்ச்சியைக் கண்டுகொள்ள முடியும்.
சபா ஜெயராசா
தலைவர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
|