Content (உள்ளடக்கம்): |
பொருளடக்கம்
அணிந்துரை
இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை
முதலாம் பதிப்புக்கான முன்னுரை
இரண்டாம் பதிப்புக்கான பதிப்புரை
இயல்
1. ஆய்வு அறிமுகம்
2. ஆய்வின் பரிமாணங்கள்
3. இலக்கிய மீளாய்வு
4. ஆய்வு முறைகள்
5. மாதிரியெடுப்பு உபாயங்கள்
6. தரவு சேகரிப்பு உத்திகள்
7. தரவுப் பகுப்பாய்வு
8. ஆய்வறிக்கை எழுதுதல்
கலைச்சொற்கள்
துணை நூல்கள்
பின்னிணைப்பு
- ஆய்வு முன்மொழிவின் மாதிரி அமைப்பு
- ஆய்வறிக்கை மதிப்பீட்டுப் பிரமாணங்கள்
- வ-சோதனை
- கை வர்க்கச் சோதனை (÷2 வநளவ)
- எழுமாற்று மாதிரியின் பருமன் அட்டவணை
விடயச்சுட்டி
|
Full Description (முழுவிபரம்): |
அண்மைக்காலங்களில் கல்வித்துறையில் ஆய்வுச் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்வதனை நாம் காண முடிகின்றது. தனிநபர் தேவையின் பொருட்டும் பொதுநலன் கருதி பொது நிறுவனங்களினாலும் தனிநபர்களினாலும் பெருமளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலைமை காரணமாக ஆய்வில் ஈடுபடுவோர் ஆய்வியல் அறிவினைப் போதுமானளவிற்கு பெறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில், ஆய்வில் ஈடுபடுமுன்னதாக ஆய்வு பற்றிய அறிவைத் திரட்டும் பண்டு ஆய்வாளரிடையே வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆய்வு பற்றிய அறிவை, குறிப்பாகக் கல்வித்துறையில், தேடிக் கொள்வதற்கான ஓர் உந்து சக்தியாக விளங்கவேண்டுமெனும் முதன்மை நோக்கோடு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன், கல்வி ஆய்வியியல் தொடர்பான நூல்கள் தமிழ்மொழியில் அரிதாக உள்ளமையும் இந்நூல் உருவாவதற்கான தேவையாக அமைந்துள்ளது. நூலின் அடக்கத்தினை மட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் காரணமாக, ஆய்வு தொடர்காபத் தெரிவு செய்யப்பட்ட சில முக்கிய விடயங்கள் மட்டுமே இந்நூலில் எடுத்தாளப்பட வேண்டி ஏற்பட்டமை தவிர்க்க முடியாதது.
இந்நூலானது ஏழு இயல்களாக அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது இயல் ஆய்வியல் பற்றிய முன்னுரையாக அமைய, இரண்டாவது இயலில் ஆய்வின் பல்வேறு பரிமாணங்கள் சற்று விரிவாக நோக்கப்பட்டுள்ளன. ஆய்வுச் செயற்பாட்டில் இலக்கிய மீளாய்வு கொண்டுள்ள முக்கியத்துவம் காரணமாக, அது பற்றிய முக்கியமான கருத்துக்கள் மூன்றாவது இயலாக அமைகின்றது. நான்காவது இயலில் ஐந்து வகையான ஆய்வு முறைகள் விபரிக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது இயலில் பல்வேறு வகையான மாதிரியெடுப்பு உபாயங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. தரவு சேகரிப்பு உத்திகள் பற்றிய விபரங்கள் ஆறாவது இயலில் இடம்பெற்றுள்ளன. ஏழாவது இயலில் ஆய்வறிக்கை எழுதும் முறை தொடர்பான முக்கிய அம்சங்கள் விபரிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, ஆய்வாளருக்கு உதவக்கூடிய மேலும் சில விடயங்கள் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. இவ்வகையில், ஆய்வு முன்மொழிவின் மாதிரி அமைப்பு, ஆய்வறிக்கை மதிப்பீட்டுப் பிரமாணங்கள், வ- சோதனை, மாதிரியின் பருமன் அட்டவணை ஆகியன பின்னிணைப்புகளாக அமைகின்றன. வாசகர் நலன் கருதி உசாத்துணை நூற்பட்டியல், கலைச் சொற்தொகுதி, விடய சுட்டிகள் என்பனவும் இடம்பெறுகின்றன.
இந்நூலை ஆக்குவதற்கான ஊக்குவிப்பையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கிய என்னுடைய மாணவர்கள், சக விரிவுரையாளர்கள், மற்றும் என் நண்பர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். மேலும், இந்நூலின் உருவாக்கத்திற்கு உதவியாக அமைந்த ஆய்வறிக்கைகள், கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றின் ஆசிரியர்களும் நன்றியுடன் நினைவு கூறப்படுகின்றனர். இந்நூலின் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட்டு, நூலினைச் செழுமைப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கிய கலாநிதி த.கலாமணி, மற்றும் நண்பர்களுக்கும் நன்றிக்கடன் கொண்டுள்ளேன்.
ஆய்வுசார் முயற்சிகளின் மேம்பாட்டுக்கு இந்நூல் உதவும் வகையில் அமையுமாயின், அதுவே எனக்குக் கிடைக்கும் வெகுமதியாகக் கொள்வேன். அத்துடன், இந்நூலினை மேலும் மெருகூட்டும் வகையிலான ஆலோசனைகள் வாசகர்களிடமிருந்து பெரிதும் வரவேற்கப்படுகின்றன.
க.சின்னத்தம்பி
|