இந்நூலாசிரியர் சின்னத்துரை விஜயகுமார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்று அங்கு முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார். இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி கற்கைநெறியில் முதல்தர சித்தி பெற்றதோடு அதன் பின்னர் சென்னைப்
பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி பட்டத்தினை அதிவிசேட தரத்தில் சித்தியடைந்துள்ளார்.
இவரது இந்நூல் நுண்பாக கோட்பாடுகளை கணிதம்
மற்றும் வரைபட உதவியுடன் மிகத் தெளிவாக
விளக்கியுள்ளதுடன் பருநிலைப் பொருளாதாரக்
குறிக்கோள்களின் விமர்சிப்பாகவும் பயன்தரும் முறையில் கையாளப்பட்டுள்ளது. கெயின்சியவாதம், அதனைத் தொடர்ந்த நாணயவியல்வாதம் என்பவற்றின் கருத்துக்கள் நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளன. அவைபற்றி ஆசிரியர் காத்திரமான முறையில் விளக்கி
ஆராய்ந்துள்ளார். கலப்புப் பொருளாதார அமைப்புகள் நடைமுறையில் இருந்துவரும் பின்னணியில் அரசின்
பங்களிப்பு, தனியார் துறையின் பங்களிப்பு ஆகியவை
பற்றிய விமர்சன நோக்கிலான ஆசிரியரின் விளக்கம் நல்ல முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது. நடைமுறையில்
எவ்வாறு கொள்நெறி வகுத்தல், அதன் இலக்குகளை
எவ்விதம் அமைத்தல் என்பவற்றின் சிக்கல் நிலைகள்
பற்றி ஆசிரியர் போதிய சிரத்தையுடன் நோக்கியுள்ளார்.
இந்நூலில் சேர்க்கப்பட்ட சூழலியல் ஒரு புதிய அணுகுமுறையினைத் தருவதுடன், பொருளியல்
மற்றும் பொருளாதார அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் அதனை முன்னிலைப்படுத்துவது வரவேற்கத்தக்கது.
|