புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் ( தொகுதி II )

தமிழியல்சார் சிந்தனைத் துளிகள், தொகுதி ஐ என்ற எனது நூலுக்கு, 2009ஆம் ஆண்டு நூலாசிரியர் உரை எழுதியபோது, இரண்டாவது தொகுதி என ஒரு நூலை வெளியிடும் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இந்நூல், முதற்தொகுதியின் தொடர்ச்சி - தொகுதி ஐஐ. ஆதலால், அங்கு கட்டுரைகளின் தோற்றம் பற்றிக் கூறிய பொதுக் கருத்துக்கள், இங்கும் பொருந்தும். இந்நூலில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள், தமிழில் உள்ள சொற்கள் பற்றியவை. அவை, கடந்த ஈராண்டுகளில், திட்டமிடாது, அவ்வப்போது தனித்தனியாக எழுதப்பெற்றவை. கட்டுரைப் பொருள்கள், தொடர்புடையவையாக இருக்கும் போதும், ஒரே பொருளை, வௌ;வேறு கோணத்தில் நோக்கி எழுதும் போதும், கூறிய கருத்துக்களை மீண்டும் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெரும்பாலும், கட்டுரைகளின் முன்னுரையிலே தான் கூறிய கருத்து மீண்டும் வருகிறது.
தமிழியல் பற்றி, நாள் இதுவரை எடுத்துரைக்கப்படாத கருத்துக்கள் எவ்வளவோ உண்டு. ஆய்வு வளர்ச்சிக்கு, தேடுவதும், தொகுப்பதும், வகுப்பதும், ஒப்புநோக்கிக் காண்பதும், சிந்திப்பதும், எழுதுவதும் இன்றியமையாதவை. தொகுதிகளைப் பெருக்கிக் கொண்டே போகலாம். அதற்கு, உடல் நலம், உளநலம், நினைவாற்றல் போன்றவை உதவ வேண்டும். இனி, எல்லாம் கடவுள் சித்தம் என இருப்போம்.
முன்னுரையோ அறிமுகவுரையோ இல்லாமல், நூல்கள் வெளியிடுவதில்லை என்பது, சேமமடு பதிப்பகத்தின் கொள்கை. இது, நல்ல கொள்கையென்றாலும், தகுதி வாய்ந்த அறிஞர் வாய்க்காதவிடத்து தர்மசங்கடமாகிவிடுகிறது. இன்று, நமது நாட்டில் நல்ல அறிஞர்களைக் கண்டுகொள்வது அரிது; இருப்பவர்களை விரல்விட்டு எண்ணலாம். இந்நூலின் முதற் தொகுதிக்கு, ந


சந்திரசேகரம், பத்தக்குட்டி
Sandrasekaram, Paththakuutti

 கல்வியியல் துறையில் ஆய்வாளராகவும், பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணிபுரிந்தவர். கல்வியியலை தமிழ்மொழி மூலம் கற்பித்த முன்னோடி. தமிழ்மொழி மூலம் உயர்நிலையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமென்பதை நிரூபணமாக்கியவர். தாய்மொழிக் கல்வி வாயிலாகவே புதிய கண்டுபிடிப்புக்களையும் அறிவுருவாக்கச் செயற்பாடுகளையும் மேற்கொண்டவர். கல்வித் தத்துவம் தொடர்பான விரிநிலை சிந்தனையும் ஆழமான தரிசனமும் கொண்டவர். இதனால் சில நூல்களையும், கட்டுரைகளையும் ஆக்கியவர். கல்வித் தத்துவத்தை உயர்நிலையில் எடுத்துரைப்பதற்குரிய வலுவான மொழிக்கட்டமைப்பைத் தமிழில் உருவாக்கியவர். கல்வியியல் சார்ந்த பல எண்ணக்கருக்களையும்  தமிழில் உருவாக்கியவர். மேலைத்தேய, கீழைத்தேய தத்துவ சிந்தனை மரபுகளுடன் ஊடாடி நமக்கான அறிகைமரபை கல்விமரபை மீள்கண்டுபிடிப்பதிலும்