Book Type (புத்தக வகை) : பொருளியல்
Title (தலைப்பு) : அபிவிருத்தித் தொடர்பாடல் மாற்று நோக்கி...
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2015-07-01-136
ISBN : 978-955-685-035-2
EPABNo : EPAB/02/18594
Author Name (எழுதியவர் பெயர்) : எஸ்.ரகுராம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 496
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 700.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

தொடர்பாடல்      01
அபிவிருத்தியும் அபிவிருத்தி தொடர்பாடலும்     59
நாட்டார் ஊடகங்கள்     160
தொடர்பாடல் நோக்கில் நாட்டார் நிகழத்து         
கலைகள்: தகுதிகளும் தடைகளும்     247
அபிவிருத்தித் தொடர்பாடலில் நாட்டார்         
ஊடகங்களை பயன்படுத்துதல்     335
துணை நூற் பட்டியல் (தமிழ்- ஆங்கிலம்)     456
பத்திரிகைகள்     483
இணையம்     486
பின்னிணைப்பு      487
கலைச் சொற்கள்     494

 

Full Description (முழுவிபரம்):

பின் காலனியச் சூழல், உலகமயமாதல் ஆகியவற்றின் எழுபுலத்தில் மரபுவழி ஊடகங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் வளர்வுறும் நாடுகளிலே மேலெழத் தொடங்கியுள்ளன.  கலாநிதி சி.ரகுராம் அவர்கள் மேற்கொண்ட நிகழ்த்தும் கலைகள் பற்றிய அகன்று ஆழ்ந்த இந்த ஆய்வு அந்த வகையிற் குறிப்பிடத்தக்கது.
தொடர்பாடல் இயல், சமூகவியல், உளவியல், அரசியற் பொருளியல், அரங்கியல் முதலாம் பன்முக அறநெறிகள் (ஆரடவனைளைஉipடiயெசல) சார்ந்த நிலையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஓர் அணுகுமுறை ஆய்வுத் தளத்தை வலிமைப்படுத்துகின்றது.
தொடர்பாடல் நோக்கில் நாட்டார் ஊடகங்கள்;, நாட்டார் நிகழ்த்து கலைகள் ஆகியவற்றின் மேலெழு கோலங்களையும் (ளுரசகயஉந ளுவசரஉவரசநள) ஆழ்நிலைக் (னுநநி)கோலங்களையும் கண்டறிவதற்குரியவாறு ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்பாடும் தொடர்பாடலும் ஒன்றிணைந்திருத்தலும், அவை சமூக அடிக்கட்டுமானத்தின் மேற்சுழற்சிகளாக இருத்தலும் குறிப்பிடத் தக்கவை. இந்திய மரபுவழித் தொடர்பாடலும், மரபுவழி ஊடகங்களும் நிகழ்த்துகலைகளும் சமூக அடித்தளம் (டீயளந) மற்றும் மேல் அமைப்பு (ளுரிநச ளுவசரஉவரசந) ஆகியவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளைத் துல்லியமாகப் புலப்படுத்துகின்றன. விரிவான இந்த ஆய்வின் நீட்சி அதற்குரிய சான்றாகவும் அமைகின்றது.
வேட்டுவ வாழ்க்கை, ஆயர் வாழ்க்கை, நிலமானிய வாழ்க்கை, ஐந்திணை மரபுகள், தொன்மையான வர்த்தக முறைமை, அரசின் உருவாக்கம், கிராமிய வழிபாடுகள், சாதிய அடுக்கமைவு முதலியவற்றின் பண்புநிலை நீட்சியாக மரபுவழி ஊடகங்களும், நிகழ்த்துக்கலைகளும் அமைந்துள்ளன. அவை சமூக வரலாற்றைத் தாங்கிய வடிவங்கள். வெளித்தோன்றும் அழகியற் பரிமாணத்துடன் மட்டும் நிகழ்த்துகலைகள் கட்டுப்பட்டிருக்கவில்லை என்ற சமூகவியற் செய்தி ஆய்வின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் விரிந்த படிநிலைகளைக் கொண்டதாக இந்த ஆய்வு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தொடர்பாடல் பற்றிய மரபு வழித்தடங் களில் இருந்து, நவீனபடி மலர்ச்சிவரை அனைத்தும் தழுவிய (ஊழஅpசநாநளெiஎந) வகையில் ஆய்வின் ஆக்கம் நீட்சி கொள்கின்றது. பலமான ஆய்வுத் தளங்களில் இருந்தே உறுதியான முடிவுகள் மேற்கிளம்ப முடியும்.
அபிவிருத்தியும் அபிவிருத்தித் தொடர்பாடலும் பற்றிய ஆய்வு விபரண நிலையில் மட்டுமன்றி பகுப்பாய்வு வழியான உய்த்தறி நிலைக்கு நகர்ந்து செல்ல ஆய்வின் அளிக்கைச் செம்மைக்கு இட்டுச்செல்கின்றது. அபிவிருத்தி தொடர்பான மேலைப்புலக்காட்சி (றுநளவநசn Pநசஉநிவழைn) மற்றும் ஐரோப்பிய மையவாதத்துடன் சமூக நோக்குடைய கிழக்கியல் (ழுசநைவெயடளைஅ) மற்றும், மார்க்சியக் கருத்தியல் முரண்பாடு கொள்ளும் நிலையில், புதிய வளர்ச்சிகளை ஊடக நிலையிலும், தொடர்பாடல் நிலையிலும் ஆழ்ந்து விரிந்த பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருத்தல் ஆய்வுக்கு கனதியூட்டுகின்றது.
அபிவிருத்தி ஊடகம் மற்றும் அபிவிருத்தித் தொடர்பாடல் (னுநஎ ஊழஅஅ) இன்றைய பல்கலைக்கழகங்களில் ஒரு கற்கைநெறியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த அளவுக்கு அதன் முக்கியத்துவம் மேலுயர்ச்சி பெற்றுள்ளது. இத்துறையில் ஆய்வாளர் கண்டறிந்து முன்வைத்துள்ள கருத்துக்கள் முன்னைய ஆட்சி நிரலமைப்பை (Pசயனபைஅ)த் தகர்ப்புக்கு உட்படுத்தியிருத்தலைக் குறிப்பிட வேண்டி யுள்ளது. அதாவது ஒரு வாசிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நூற்றுக்கு மேற்பட்ட நிகழ்த்து கலைகளை இனங்கண்டு களஆய்வு செய்து, களங்களில் வாழ்ந்து, இனவரைவியற் பண்புகளுடன் செறிவுற்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் வழி எழும் முடிவுகள் நம்பகத் தன்மைக்கு வலுவூட்டும் அறிகைத் தளத்தில் நிற்கின்றன.
கள ஆய்வின் பெறுபேறுகள் பன்மை உள்ளடக்கங்களைத் தாங்கியிருத்தல் ஆய்வுக்குரிய புறவய நோக்கினுக்கு வலுவூட்டுகின்றது. அகவய நோக்கு என்பது ஒற்றைப் பரிமாணத்திலே சென்று கொண்டிருக்கும், ஆனால் புறவய நோக்கு விருப்பு வெறுப்பு இன்றி அனைத்தின் மீதும் கவனம் செலுத்துவதாக இருக்கும். பன்முக நிலையில் எத்தகைய பண்பும் புறந்தள்ளப்படமாட்டாது.
தமிழகத்து நிகழ்த்து கலைகள் தொடர்பான நுண் (ஆiஉசழ) பாகத் தகவல்களை விரிவாகத் தொகுத்துள்ளமை ஆய்வின் ஆழ்ந்த ஊடுருவ லோடு நீண்டு செல்வதைக் காட்டுகின்றது. தமிழகத்துப் பண்பாட்டோடு ஊறிய நிகழ்த்துக் கலைகளின் நுண்ணாய்வு, சமூகம் பற்றிய புலக் காட்சியைக் கலைகளினூடாகக் காணும் நீட்சிக்கு இட்டுச் செல்வதோடு சமூக முரண்பாடுகள் கலைகளினூடாகத் தெறித்து மேலெழுவதையும் காட்டுகின்றது.
இந்தியச் சூழலில்ஆறாயிரத்துக்கு மேற்பட்ட நாட்டார் கலை வடிவங்கள் காணப்படுகின்றன. நவீன ஊடகங்களுக்கும் நாட்டாரியல் சார்ந்த மரபுவழி ஊடகங்களுக்குமிடையே அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. நவீன ஊடகங்கள் பெரும் முதலாளியத்தின்  நீள் கரங்களாகவுள்ளன. ஆனால் நாட்டார் ஊடகங்கள் சமூகத்தின் அடிநிலை மக்களின் உணர்வுகளோடு தொடர்புடையவை. அதனால், அந்த ஊடகங்களுக்குத் தனித்துவமான பலம் உண்டு.
தொடர்பாடலை மக்கள் தளங்களில் இருந்து கட்டியெழுப்புதற்கு நாட்டார்  ஊடகங்களே வலிமையானவை. அவை சடங்குகளுடனும் வாழ்க்கை வட்டத்துடனும், சமூக மட்டங்களும் தொடர்புபட்டு நிற்பத னால், அந்;நியப்படாத வடிவங்களாக அமைந்துள்ளன. ஆனால் நவீன ஊடகங்கள் அடிநிலை மக்களைப் பொறுத்தவரை அந்;நியமாகிய வடிவங்கள்தான். அதனால் மக்களிடத்துச் செய்திகளை ஊடுருவிய நிலையில் எடுத்துச் செல்வதற்கு மூன்றாம் உலக நாடுகளில்  நாட்டார் ஊடகங்களின் முக்கியத்துவமே வலியுறுத்தப்படுகின்றது. இந்த விபரணங்கள் நூலாசிரியரால் விரிவாக நோக்கப்பட்டுள்ளன.
அபிவிருத்தியில் தொடர்பாடலில் நாட்டார் ஊடகங்களைப் பயன்படுத்துதல் 'பிரயோகத் தொடர்பாடலில்' ஒரு தனித்துவமான துறையாகவுள்ளது. இத்துறையில் இன்று விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டார் ஊடகங்கள் மற்றும் நிகழ்த்துக்கலைகள் தொடர்பான ஆய்வுகளில் மார்க்சியக் கருத்தியலின் பிரயோகம் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தியது. தமிழர் நாட்டார் கலைகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த முன்னோடியாக பேராசிரியர் நா.வானமாமலை விளங்குகின்றார். அவரின் பங்களிப்பு பின்வந்த ஆய்வாளர்களிடத்துச் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டார் கலைகள் உருவாக்கம் பெற்ற சமூகப் பின்புலத்தையும் சமூக மாற்றத்தை உருவாக்குவதில் அவற்றில் உட்பொதிந்துள்ள விசைகளையும் மார்க்சிய நோக்கில் பேராசிரியர் நா.வானமாமலை வெளிப்படுத்தினார். அந்த முயற்சி தமிழகத்து ஆய்வு வெளியில் ஊடுருவிப்பரந்தது.
மார்க்சியத்தின் செல்வாக்கு தென் - அமெரிக்கச் சிந்தனைகளிலும் செல்வாக்கை ஏற்படுத்தியது. ஒடுக்குமுறைக்கு எதிரான கல்வி, விடுதலை இறையியல், விடுதலைக்கான அரங்கு முதலாம் கருத்து வடிவங்கள் போலோ பிரேரியின் சிந்தனைகளை அடியொற்றி மேற்கிளம்பின.
நாட்டார்கலைகளின் அமைப்பும், நிகழ்த்தும் முறைமையும், சமூகத் தளத்தை அடியொற்றிய ஊடாட்டங்களும் உறவுமுறைகளும் அபிவிருத்தி சார்ந்த அறிவுக்கையளிப்பில் செலுத்தும் செல்வாக்குகளை நூலாசிரியர் ஆய்வுவெளிக்குக் கொண்டு வந்துள்ளார். பெருந்தொகை யான பனுவல் வாசிப்பும், களத்தரிசனங்களும் ஆவணங்களை உசாத்துணையாகக் கொள்ளலும் ஆய்வை வளப்படுத்தியுள்ளன.
சபா.ஜெயராசா