புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அரசியல் விஞ்ஞானம் : அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்

அரசியல் நடவடிக்கை பரந்த சமூக முறையின் பிரிக்க முடியாத பகுதியாகும். இதனால் அரசியல் விஞ்ஞானம் உறுதியாக சமூக விசாரணை என்ற பரந்த பரப்பில் நிலைகொண்டிருக்கின்றது என லாம். சமூக விஞ்ஞானங்கள் சமூகக் குழுக்களின் மனித நடத்தை தொடர்பான விடயங்கள் பற்றிய கற்கையினை ஏதோவொரு வகை யில் கவனத்தில் கொள்கின்றன. சமூகவியலாளர்கள் ஒரே விதமான தகவல்களைச் சேகரித்து ஒரேவிதமான கருதுகோள்கள், கோட்பாடு களின் அடிப்படையில் ஒரேவிதமான கண்டுபிடிப்புகள் அல்லது முடிவுகளுக்கு வருகின்றனர். விஞ்ஞான ரீதியான விசாரணையின் நோக்கம் மனப்பதிவுக்கு அறிவைப் பதிலிடுதலாகும். விஞ்ஞானம் நம்பிக்கையான அறிவைத் தேடுகிறது என்ற அடிப்படையில்  என்ன நடந்தது?  என்ன நடக்கிறது? என்பவைகளை எதிர்வு கூறவும் முடியும்.
அண்மைக்கால சிந்தனையாளர்கள் அரசியல் விஞ்ஞானம் என்பது அரசின் கொள்கை உருவாக்கம் அதனை நடைமுறைப்படுத் தல், மோதல் முகாமைத்துவம் மற்றும் மோதல் தீர்வு என்பனவற்றை யும் கவனத்தில் கொள்ளுமொரு கற்கைநெறி என்றும் விளக்கமளிக் கின்றனர். மேலும் அரசியல் விஞ்ஞானிகள் அரசாங்கத்தின் வரவு செலவுத் தீர்மானங்களை விளங்கிக் கொள்ளுவதற்குப் பொருளாதாரத் தரவுகளைப் பயன்படுத்துவது அவசியம் என்பதையும் ஏற்றுக் கொண் டுள்ளனர். இதற்காகப் பொருளியலாளர்களின் கோட்பாடுகளைக் கடன்வாங்க ஆரம்பித்துள்ளனர். மேற்குறிப்பிட்ட சகல விடயங்களும் இறுதியாக அரசுடன் தொடர்புபடுகின்றதுடன், எந்தவொன்றும் அரசி லிருந்து விடுபடாமல் அரசைமையமாகக் கொண்டு பல்வேறு திசை களில் பரவியுள்ள துணைப்பிரிவுகளுமாகும். அரசியல் கல்வி ஆளு பவர்களுக்கும், ஆளப்படுகின்ற


தி.செல்வமனோகரன்
Mr.Selvamanoharan

திருச்செல்வம் செல்வமனோகரன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்   இந்து நாகரிகத் துறையின் விரிவுரையாளர். இவர்  'இந்து மெய்யியல்'  துறையை  தனது கற்கையாக, ஆய்வாக, புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். பின்னைக் காலனிய நோக்கில் இந்து மெய்யியல் சிந்தனைகள்  குறித்து புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கும் அல்லது  கண்டுபிடிக்கும் அறிவு, ஆய்வு இவரது ஆளுமையின் வெளிப்பாடாகின்றது.   மெய்யியல், இலக்கியவியல், கலையியல் உள்ளிட்ட துறைகளில் ஊடாடித்  தமக்கான விமரிசனச் சிந்தனைசார்  நவீன அணுகுமுறைகளுடன் கூடிய கோட்பாட்டாக்க மரபை உணர்ந்து, தெளிந்து உருவாக்குபவர். இதன் அடையாளமாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்.  மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான தொடருறு உரையாடலை  வளர்த்து நிதானமாக  இயங்குபவர். தமிழ்ச் சூழலில் 'தமிழர் மெய்யியல்'  குறித்த தேடல் தவிர்க்க ம