புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

நோத் முதல் கோபல்லவா வரை

கலாநிதி அ.ஜெயரத்தினம் வில்சன்
B.A (Hons) . ph.D
அரசியல் விரிவுரையாளர்
இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை
1796இல் பிரித்தானிய படைப்பற்றாட்சியுடனேயே உண்மையில் ஆரம்பமாகும் இலங்கையின் இக்கால வரலாற்றை எழுதுவோர், தம்முன்னுள்ள பணி இலகுவானதொன்றென்று எண்ணவொண்ணாது.  அஃது ஆட்சிமுறை (பரிபாலன) நடவடிக்கைகளின் அல்லது தனித்தனித் தேசாதிபதிகளின் சாதனைகளின் தொகுதி அன்று; அது, பொருளாதார முன்னேற்றம், கல்வி அபிவிருத்தி, சமுதாய வளர்ச்சி, அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஆகிய எல்லாவற்றினதும் சுருக்கமாகும். சுருங்கக்கூறின், இக்கால இலங்கை வரலாறு, சிதைவுற்றுக் கொண்டிருந்த சமுதாய அரசியல் அமைப்பு, இலங்கை ஒரே தீவு என்ற கருத்தினடிப்படையில் ஆக்கப்பட்ட ஒன்றரை நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியில் விளைந்த பிண்டமாகிய தேசிய ஒருமைப்பாடாக வலுப்படுத்தப்பட்ட கதையேயாகும். பிரித்தானியரின் வரலாற்றேட்டில் (அ) ஒருங்கிணைக்கப்பட்ட தனி ஆட்சி முறை அமைப்பில், கண்டி மாநிலங்களை இணைத்த கோல்புறூக் கமறூன் விசாரணைக் குழுவின் முடிவுகளின் பின்னர் செயலாக்கப்பட்ட பரிபாலன ஒருமைப்பாடும், (ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அதுவரை நாட்டின் ஏனைய பகுதிகளோடு தொடர்பு கொள்ளக்கூடிய தகுதி வாய்ந்த போக்குவரத்து வசதிகள் இல்லாமலிருந்த வடமாநில நகரங்களுக்கு உளதாய இருப்புப்பாதை இணைப்பும், அற்ப சாதனைகள் எனக் கருதப்படமாட்டா. இருப்புப் பாதைகள், ஏனைய இணைப்பு வழிகள், புதிதாயுள்ள இயற்கை வளவாய்ப்புத் தொகுதிகளைப் பொருளாதார சுபீட்சத்துக்குப் பயன்படுத்துதல், பரிபாலனச் சீர்திருத்தம் முதலிய அனைத்தும் சமுதாயக் கூட


தி.வேல்நம்பி
Velnampy, T Dr

முனைவர் திருநாவுக்கரசு வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முகாமைத்துவத்துறையில் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார். இவர் கணக்கியல், வர்த்தகம், முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் பயிற்சியும் தேடலும் தமிழ் மரபு பண்புசார் புலங்களுடன் ஊடாடி புதிய ஆய்வுத் தோற்றப்பாடுகள் உருவாக்கவும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். முகாமைத்துவச் சிந்தனையாளர் தமிழியல் ஆய்வுச் செல்நெறிகளுள் உள்வாங்கப்படுகின்றார். இதன் இன்னொரு வெளிப்பாடாகவே முகாமைத்துவமும் திருக்குறளும் என்னும் நூல் அமைகின்றது.