Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : கடியாரத்தின் கதை
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2015-03-01-025
ISBN : 978-955-0367-24-5
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

கடியாரத்தின் கதை


அது மழைக் காலம். 

கரிய முகில் படர்ந்திருந்தது. 

சூரியனைக் காண முடியவில்லை. 

இருளாக இருந்தது. 

'இப்போ என்ன நேரம்' என்று அம்மா கேட்டார்.

எங்களிடம் இரண்டு கடியாரங்கள் இருந்தன.

ஒன்று முட்களில்லாக் கடியாரம். 

அது எண் வடிவில் நேரத்தைக் காட்டியது. 

அப்போது நேரம் எட்டுமணி.

மற்றையது முட்கள் கொண்ட கடியாரம். 

சிறிய முள் ஒன்றும் பெரிய முள் ஒன்றும் அதில் இருந்தன.

 முட்களைக் கைகள் என்றும் கூறுவர். 

அப்போது சிறிய முள் எட்டில் நின்றது. 

பெரிய முள் பன்னிரண்டில் நின்றது. 

நேரம் எட்டுமணி.

பெரியமுள் கடியாரத்தைச் சுற்றி வர ஒரு மணி நேரமாகும். 

சிறிய முள் ஒருமுறை சுற்றி வர பன்னிரண்டு மணித்தியாலம் எடுக்கும்.

அப்போது அக்கா அங்கு வந்தார். 

'இருள் வரும். 

ஒளி வரும். 

மழை வரும். 

பனி வரும். 

ஆனால் கடியாரம் உள்ளபடி ஓடிக் கொண்டேயிருக்கும்' என்றார். 

கடியாரம் ஓடியது. 

'ரிக் ரிக்' என்ற சத்தம் வந்து கொண்டிருந்தது. 

Full Description (முழுவிபரம்):

இன்னும் சிறார் இலக்கியம் தமிழில் 
வளர்ச்சியடையாத துறையாகவே இருந்து வருகின்றது. 
இன்றுவரை இத்துறையில்  மரபுவழிச் சிந்தனைகளின்ஆதிக்கம் 
வலுவாகவே உள்ளது.

குறிப்பாக சிறார்களுக்கான கதைகளில் கட்டாயமாக 
ஒரு நீதியோ அல்லது ஒரு பாடமோ இருக்க வேண்டுமென்ற கருத்தேற்றம் 
மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றது.

இந்தப் பழைய மரபிலிருந்து விடுபட்டு புதிதாகச் சிந்திக்கும் 
படைக்கும் பண்பு கொண்டவராக சபா.ஜெயராசா விளங்குகின்றார்.
இவர் சிறார் இலக்கியத்தை வளம்படுத்துவதையும் 
தமது முதன்மை நோக்கமாகக் கொண்டவர். 
சிறார்கள் வாசித்து இன்புறுவது மட்டுமல்ல, 
தமது ஆளுமையையும் ஆக்கத் திறன்களையும் 
வளர்த்தெடுக்கும் உபாயங்களை ஆக்கங்கள் வழியே 
முன்னெடுத்துச் செல்பவர். 

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கடியாரத்தின் கதை
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு