Full Description (முழுவிபரம்): |
அரசியல் மற்றும் சமூக அமைதி, உறுதிப்பாடு மற்றும் பாது காப்பு என்பவற்றுக்கிடையில் நிலவும் நித்தியமான தொடர்பின் முக்கியத்துவம் பற்றிய புரிந்துணர்வு முன்னொருபோதும் இல்லாத ளவுக்கு இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணி யில் அண்மைக்காலத்தில் அரசியல் விஞ்ஞானத்தைப் பற்றிக் கற்பதில் ஒரு புத்தெழுச்சி எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இன்று அரசியல் விஞ்ஞானத்தின் மூலத்துவங்கள் பற்றிய கற்கை க.பொ.த (உ.த) வகுப்பு மாணவர்களுக்கு மத்தியில் வேரூன்றி வருகின்றது. எமது நாட்டின் பிரதான பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசியல் விஞ்ஞானத் தோடு தொடர்பான பல்வேறு கற்கை நெறிகளை தமது பாட விதானத் துக்குள் சேர்த்துள்ளன. பட்டப்படிப்பினை வெளிவாரியாகத் தொடரும் பட்டதாரி மாணவர்களுள் அதிக எண்ணிக்கையினர் அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாகத் தெரிவுசெய்துள்ளனர். இப்பாடத்தை முறைசார் முறையில் கற்காத சாதாரண மக்கள் மத்தியிலும் அரசியல் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. இவ்ஈடுபாட்டை புதினத்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளினூடாகவும், கலந்துரையாடல்கள் மற்றும் கருத் தரங்குகளினூடாகவும், விரிவுரைகள் மற்றும் உரைகளினூடாகவும் இக்காலப் பகுதியில் இடம்பெறும் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் காணமுடிகிறது.
மக்கள் இறைமை, அரசியல் யாப்புத் திருத்தம், அரசாங்க மாதிரி கள், அரசாங்க அதிகாரம், அரசாங்கத்தின் பணிகள், அதிகாரப் பரவ லாக்கம், மோதல், மோதல் முகாமைத்துவம், மோதல் தீர்த்தல், சட்டத் துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறைத் தொடர்புகள், பொதுக் கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறை, தேசிய, சமூக, சர்வதேச சமூகத்தொடர்பு, சர்வதேச அரசியல், பிரதிநிதித்துவம் பற்றிய சிந்தனை கள், மனித உரிமைகள் போன்ற அரசியல் விஞ்ஞானத்தின் கேந்திரத் தலைப்புக்கள் தற்கால சமூக வாதப் பிரதிவாதங்களின் தலைப்புகளாக மாறியுள்ளன. இந்த ஈடுபாடும், உத்வேகமும் நீடித்து நிலைக்கும் ஜனநாயக முறையொன்றினை எமது நாட்டில் கட்டியெழுப்புவதற் கான அடித்தளமாக அமையும். மொத்த சனத்தொகையில் அரசியல் அறிவுமிக்க குடிகள் ஒரு பகுதியினராக இருத்தல் ஆட்சியாளர்களின் தன்னிச்சையான தன்மையைத் தவிர்ப்பதற்கான ஒரு சிறந்த தடையாக அமையும்.
எமது நாட்டில் ஒரு முறையான அரசியல் கற்கையைப் பரவ லாக்குவதற்குள்ள ஒரு பிரதான தடை என்னவெனில், அது தொடர்பாக ஆசிரியர்களும் மாணவர்களும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகை யில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட பாட நூல்கள் அருமையாகக் காணப்படுவதாகும். தனபாலசிங்கம் கிருஷ;ணமோகன் அவர்களின் அரசியல் விஞ்ஞானம் : அரசு பற்றிய கற்கையும்,அரசை இனம் காணுதலும், அரசியல் விஞ்ஞானம் : அரசியல் செயற்பாடும், அரசியல் செயல்முறையும் என்ற இரு நூல்கள்; தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள அரசியல் விஞ்ஞானம் பற்றிய சில நூல்களோடு சேர்க்கப்படும் ஒரு சிறந்த புதிய படைப்புகளாகும். இவைகள் அரசியல் விஞ்ஞானத்தின் சில பிரதான எண்ணக்கருக்களை பலதரப்பட்ட வாசகர்களுக்கு முன்வைக்கும் நூல்களாகும்.
இவ்விரு நூல்களும் அரசியல் விஞ்ஞானத்தின் இயல்பு, அரசு பற்றிய கற்கை, பொதுத்துறை நிர்வாகம், பொதுக் கொள்கை மற்றும் பொது முகாமைத்துவம் மோதல் கல்வி, சர்வதேச pயல் போன்ற அரசியல் விஞ்ஞானப் பாடத்தின் பலதுறைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக 2009 ஆண்டிலிருந்து கல்வி அமைச்சி னால் க.பொ.த. (உ.த) வகுப்புக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அரசியல் விஞ்ஞான பாடம் தொடர்பான புதிய பாடத்திட்டத்தின் அரசு பற்றிய கோட்பாடுகள், பொதுத் துறை நிர்வாகம், பொதுக் கொள்கை மற்றும் பொது முகாமைத்துவம் மோதல் மற்றும் மோதல் தீர்வு போன்ற புதிய சில தலைப்புக்கள் இந்நூல்களில் சேர்க்கப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தலைப்புக்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமன்றி பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்க ளுக்கும் பயனுடையனவாக அமையும். மேலும் சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந்நூலில் சேர்க் கப்பட்டுள்ளன. இக்கோட்பாடுகளை தற்கால சர்வதேச அரசியலின் நடைமுறை விவகாரங்களோடும், அனுபவங்களோடும் இணைத்து எழுதப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன் அவர்களின் இந்நூல்கள் அரசியல் விஞ்ஞானத்தை முறைசார் முறையில் கற்கும் மாணவர்கள் மட்டுமன்றி நடைமுறை அரசியலில் ஈடுபாடு காட்டும் சாதாரண மக்களும் புதிதாக அரசியலைக் கற்க விரும்பும் சாதாரண வாசகர் களும் விளங்கிக்கொள்ளக் கூடியவாறு எளிமையான மொழி நடை யில் எழுதப்பட்டுள்ளமை மன ஈர்ப்புக்குரிய ஓர் அம்சமாகும். குறிப்பாக மோதல் மற்றும் மோதல் தீர்வு பற்றிய தலைப்பின் மூலம் கடந்த முப்பது வருடகாலமாக எமது நாட்டில் நிலவி வந்த மோதல் நிலை மையும் அது தொடர்பான தீர்வு முயற்சிகளையும் சாதாரண மக்களும் கோட்பாட்டு ரீதியாக விளங்கிக்கொள்ளக் கூடியவாறு எழுதப்பட் டுள்ளது. 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் தேசநிர்மா ணம், பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல், பொதுத்துறை நிருவா கத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற முக்கியமான சவால்களை எதிர் நோக்கி வருகின்றது. இவற்றோடு தொடர்புபடும் பொதுக்கொள்கை உருவாக்கம் மற்றும் பொதுத்துறை முகாமைத்துவம் பற்றிய கோட் பாடுகளை மாணவர்களும் சாதாரண மக்களும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் விடயங்களை முன்வைக்கும்போது அண்மைக் காலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் பரிசீலனை செய்வதன் மூலம் அரசியல் விஞ்ஞானக் கற்கையின் புதிய எண்ணக்கருக்களிலும் புதிய போக்குகளிலும் தமது கவனத்தை செலுத்த முயன்றுள்ளமை மெச்சத்தக்கதாகும். மேலதிக விபரங்களை தேடிக்கற்பதற்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர் உசாத்துணை நூற் பட்டியலொன்றை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன் அவர்கள் யாழ் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞான சிறப்புப் பட்டத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முது தத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ள தோடு தமது கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை யாழ் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளார். இவர் 1989 - 1993 வரை யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1995லிருந்து இன்று வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் குழாத்தில் பணியாற்றி தற்போது சிரேஷ்ட்ட விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டுள்ளார். 2003 - 2006 வரை மூன்று ஆண்டுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானத் துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இலங்கைப் பெருந்தோட்ட தொழிற் சங்க இயக்கங்கள், ஒப்பியல் பொதுத்துறை நிருவாகம் : தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில்நிர்வாக முறைமை ஆகிய இரு நூல்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத் தில் வெளியிடப்படும் சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
திரு. த. கிருஷ்ணமோகன் பல்கலைக்கழக ஆசிரியர் என்ற வகையில் அரசறிவியலுக்கோர் அறிமுகம், சமகால அரசியல் கோட் பாடுகளும் பகுப்பாய்வும், மோதல் பற்றிய எண்ணக்கருக்களும், அரசியல் வன்முறையும் மோதல் கல்வியும் உலக அரசியலும், இலங் கையின் பொதுத்துறை நிருவாகம், ஒப்பீட்டரசியல், சர்வதேச அரசியல் பற்றிய கோட்பாடுகள் போன்ற கற்கைநெறிகளை பட்டதாரி மாண வர்களுக்குப் போதித்து அத்துறைகளில் அறிவைத் திரட்டிக் கொண்டுள்ள ஒரு விரிவுரையாளராவார். 2003 லிருந்து இன்று வரை க.பொ.த (உ.த) பரீட்சையின் ஒரு பிரதம பரீட்சகராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்றவருமாவார்.
திரு த. கிருஷ்ணமோகன் கடந்த இருபது வருடகாலமாக ஒரு பல்கலைக்கழக ஆசிரியராக, சமூகவிஞ்ஞானங்கள்; துறையின் தலைவராக, நூல் மற்றும் கட்டுரை, ஆசிரியராக, க.பொ.த.(உ.த) பரீட் சையின் பிரதம பரீட்சகராகப் பணிபுரிந்து திரட்டிய அறிவையும், அனுபவத்தையும் பெற்றவர் என்ற வகையில் இவ்வாறான இரு நூல் களை எழுதுவதற்குரிய தகுதியையும், திறமையையும் பெற்றவர் என்று மீண்டும்; வலியுறுத்திக் கூறுவதில் பிழையில்லை.
இந்நூல்கள் அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாகக் கற்கும் க.பொ.த (உ.த) வகுப்பு மாணவர்களுக்கும், அவ்வகுப்பு ஆசிரியர்க ளுக்கும் பல பல்கலைக்கழகங்களினதும் உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கும் பயன் தரத்தக்கவாறு தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசியல்; கற்கும் மாணவர்களல்லாத அரசியல் தொடர்பான தகவல்களையும், அறிவையும் தேடிப் பெற விரும்புவோர் வாசிக்கத் தக்க நூல்களாக அமைகின்றன என்பதில் சந்தேகமில்லை.
என்.பீ.எம். சைபுதீன், B.A. (Hons) M.A
அரசியல் விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளர்,
பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை
|