Full Description (முழுவிபரம்): |
மனித குலத்தின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொருஅசைவுக்கும் அடிப்படையாக விளங்குவது அறிவியல்.அறிவியல் என்பது அறிவைத் தேடுவது. அவ்வாறு தேடியதைமேம்படுத்துவது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில்முன்னேறிய நாடுகள்தான் இன்று பலதுறைகளிலும்வளர்ச்சியடைந்த நாடுகளாக விளங்குகின்றன.அறிவியல் மனப்பாங்குள்ள சமூகம் பல்துறையில்முன்னேற்றங்கண்டு வருகிறது. தொடர்ந்து அறிவியல்வளர்வதற்கும் புதிய துறைகள் புதிய கண்டுபிடிப்புகள்தோன்றுவதற்கும் அறிவியல் புதுவிசையாக அமைகிறது.இந்த விசைப்படுத்தலில் பல்வேறு அறிவியல் அறிஞர்கள்தொழிற்பட்டு வருகிறார்கள். இந்த ஆளுமைகள் தமதுசிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளால் புத்தாக்கமானபுரட்சிகரமான மாற்றங்களை உருவாக்குகின்றார்கள்.உலகளவு அறிவியல் அறிஞர்கள் பாராட்டப்படவேண்டும். கௌரவிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்கள்வாழும் காலத்தில் இது சாத்தியப்பட வேண்டும். இந்த உயரியநோக்கத்தில் 'நோபல் பரிசு' வழங்கப்படுகின்றது. இந்தப்பரிசுக்கு உரித்தானவர்களை இளந்தலைமுறையினர்அடையாளம் காண வேண்டும். அவர்களது சிறப்புகள்ஆய்வுகள் யாவும் கல்வியாக வாசிக்கப்பட வேண்டும். இந்தப்பண்பு மாற்றத்துக்கான ஆற்றுப்படையாக இந்நூல்அமைகின்றது.
நோபல் பரிசு இயற்பியல், பேரியல், மருந்தியல் -உடலியல் ஆகிய அறிவியல் துறைகளில் வழங்கப்பட்டுவருகின்றது. இதைவிட இலக்கியம், பொருளாதாரம்,சமாதானம் போன்றவற்றுக்கும் வழங்கப்படுகின்றது. இந்நூல்இலக்கிய அறிஞர்கள் வரிசையில் இரண்டாவது தொகுதியாகவெளிவருகின்றது. இதில் 10 அறிஞர்கள்இடம்பெறுகிறார்கள். இந்த நூல் வரிசை இன்னும் தொடரும்.மாணவர்களிடையில் அறிவியல் நோக்கு, அறிவியல்மனப்பாங்கு யாவும் விருத்திபெற இந்நூல் துணை செய்யும்.இந்நூலை வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் நல்கியதமிழ்மண் பதிப்பகத்தாருக்கும் இதுபோன்ற அறிவியல்நூல்களை வழங்கும் ஆசிரியர் நா.சு.சிதம்பரம் அவர்களுக்கும்எமது நன்றிகள்.
பதிப்பாளர்
சதபூ.பத்மசீலன்
|