Full Description (முழுவிபரம்): |
அரசியலில் ஈடுபட விரும்புபவர்கள் கட்டாயம் இதில் கூறப்பெறும் அரசியல் நுட்பங்களைக் கற்றுணர்ந்து, ஆட்சியியலை அறிந்து, மக்கட்கு நலம் செய்யும் பயனுடைய ஆளுமையைச் செய்ய முயற்சி செய்ய இதனைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் அரசியல் நூல்.
சமநிலைப் பொதுவுடைமைப் பொருளியல் அமைப்பை மக்களிடம் ஏற்படுத்த விரும்புபவர்கள் இதில் கூறப்பெறும் பொருளியல் உண்மைகளை உணர்ந்து, அவற்றின்வழி தாங்கள் பொருளை ஈட்டவும், பேணவும், அதைப் பிறர்க்கும் பயன்படும்படியான பொதுமைப் பொருளியல் கொள்கைகளை வகுக்கவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும் பொருளியல் நூல்.
சாதி, சமய வேறுபாடற்ற சமநிலைக்குமான அமைப் பை உருவாக்கவும், இக்கால் உள்ள ஏற்றத் தாழ்வான சமூக நிலைகளில் சீர்திருத்தம் செய்யவும் விரும்பும் சமூகப் பொதுநலத் தொண்டர்கள் இதனை அறக் கற்று, அவர்களின் கொள்கை, கோட்பாடுகளுக்கு இதன் கருத்துக்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள உதவும் சமூகவியல் நூல்.
முந்து தமிழினத்திற்குக் கடந்த மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னிருந்து இன்றுவரை நேர்ந்துள்ள அரசியல், பொருளியல், சமூகவியல், மொழியியல், இனவியல், கலையியல், பண்பாட்டியல், கல்வியியல், அறிவியல் முதலியவற்றில் நிகழ்ந்த வீழ்ச்சிகளையும், தாழ்ச்சிகளை யும், அறியாமைகளையும், மூடநம்பிக்கைகளையும் அற வே அகற்றுகின்ற மறுமலர்ச்சி இனநல, மீட்பு முயற்சி களுக்கும், அத்தகைய மீட்பர்களுக்கும் போராட்டக் காரர்களுக்கும், புரட்சியாளர்களுக்கும் செவ்வையான வழிகாட்டும் இனநல மீட்பு நூல்.
இதில் கூறப்பெறும் கருத்துகள் அரசியல், பொருளியல், சமுதாயவியல் அமைப்புகளை மாற்றியமைத்துப் புரட்சி செய்ய முனைபவர்களுக்கு இ‡தொரு தோன்றாத்துணை யாக வழிகாட்டும் புரட்சி நூல்.
ஒவ்வொருவரும் தம்தம் நோய்களைப் போக்கிக் கொள்ளும் மருந்துகளைத் தேடி எடுத்து, அவற்றை உண்டு, செரித்துத் தம்தம் பிணிகளைப் போக்கிக் கொள் வதை வாழ்வியல் கடமையாகக் கொள்ளுதற்குதவும் மருத்துவ நூல்.
இலக்கிய நூல்களை கற்க விரும்புவார் இவ் அறி விலக்கியத்தையும் கற்று, மகிழ்வும் பயனும் பெறுவதை ஒரு நோக்கமாகக் கொள்ளும் அறிவிலக்கிய நூல்.
உலகியல் அறக்கூறுகளைப் பற்றித் தெரிந்து கொண்டு அவற்றைச் செய்து உயிர்நலம் பெற விரும்புபவர், இந் நூலைத் தவறாது பிற அற நூல்களுடன் ஒப்பவைத்துக் கற்று, இதன் பொதுமையறத்தை உணர்ந்து கொண்டு அதன்வழி நடந்து வாழ்வியற் பயனும், புகழும் பெறு வதுடன் உலகோர்க்கும் அறிவித்து அதனைக் கடைப் பிடிக்க உதவும் அற நூல்.
திருக்குறளை நன்கு கற்று, அதன் நுட்பங்களை உணர்ந்து, ஒவ்வொருவரும் தம்மை வாழ்க்கையைச் செவ்வனே நடத்திச் செல்வதற்கு இதனைப் பயன்படுத் திக் கொள்ளலாம். வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டும் வாழ்வியல் நூல்.
தன்னொழுக்கத்தையும், சமுதாய ஒழுகலாறுகளை-யும் இதில் கூறப்பெறும் கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கிக் கொள்ள விரும்புபவர்களுக்கு இ‡தொரு கலங்கரை விளக்கமாக அமையும் ஒழுக்க நெறி நூல்.
இதில் கூறப்பெறும் காமவியல் கூறுகளும், ஆண் - பெண், கணவன் - மனைவிக்கான இல்லறவின்ப உத்தி-களும், உயர் நாகரிகமும் உளப் பண்பும் கொண்டவர்கள் கடைப்பிடித்து, மாறாக உள இன்பமும், உடல் இன்பமும் பெற உதவுகின்றவை. ஆதலின், அவற்றை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இதில் கூறப்பெறும் அ‡ததற்கான பகுதிகளையும் இன்பத்துப் பாலையும் கருத்தூன்றிக் கற்றுக் கடைப்பிடித்து ஒழுகித் தங்கள் இல்லறத்தை இன்ப அறமாக ஆக்கிக் கொள்ள உதவும் இன்பநூல்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
திருக்குறள் மெய்ப் பொருள் உரை

|