Book Type (புத்தக வகை) : அரசியல்
Title (தலைப்பு) : அரசியலும் சிவில் சமூகமும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-02-01-088
ISBN : 978-955-1857-87-5
EPABNo : EPAB/2/19289
Author Name (எழுதியவர் பெயர்) : ரீ.விக்னேஸ்வரன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 104
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

முன்னுரை
ஆசிரியர் உரை
பதிப்புரை
  • சிவில் சமூகமும் நல்லாட்சியும்
  • இலங்கையின் உள்ளூராட்சி அமைப்புகளும் அவற்றின் தொழிற்பாடுகளும்
  • அரசியல் பங்குபற்றல்
  • உலக பொருளாதாரம்: ஒரு அரசியல் பார்வை
  • உலக பொருளாதாரம் நெருக்கடிகளும், அரசியல் போக்கும்: ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை
  • முடிவுரை
Full Description (முழுவிபரம்):

அரசியலும் சிவில் சமூகமும் என்கின்ற இந்நூலானது சிவில் சமூகமும் நல்லாட்சியும், இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்கள் ஒரு பார்வை, அரசியல் பங்குபற்றல், உலக பொருளாதாரம்: ஒரு அரசியல் பார்வை, உலக பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் போக்கும்: ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை என்கின்ற ஐந்து தலைப்புக்களில் கட்டுரைகளினைக் கொண்டுள்ளது. இக்கட்டுரை கள் அனைத்தும் அரசறிவியலினை ஒரு பாடமாகக் கற்கின்ற மாண வர்களுக்கு பயன்மிக்கதாகத் துலங்கும் என்பது எனது எதிர்பார்க்கை. இந்நூலினை வடிப்பதில் என்னை உந்திய புறச்சூழ்நிலைகளாக எனது பட்டப்படிப்பின்போது வரிவுரையாற்றிய பெறுமதிமிக்க விரிவுரையாளர்களது விரிவுரைகள், இறுதி ஆண்டின் எனது ஆய்வுக் கட்டுரையும் அது தொடர்பான வாசிப்புக்களும், அரசறிவியல் பாடப்பரப்பு தொடர்பான எனது ஈர்ப்பு போன்றன செல்வாக்கு செலுத்தியுள்ளன. 
அரசறிவியல் பாடப்பரப்பானது மிகவும் விசாலமானதும் ஆழமானதுமான ஒன்று. இவற்றில் சில தலைப்புக்களினை தெரிவு செய்து அவற்றின்பால் நூலாக வடிவமைத்துள்ளேன். சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இணங்க எனது சிறுதுளியான இம் முயற்சி எனது அரசறிவியல் துறைக்கும், அரசறிவியல் பாடப் பரப்புக்கும் வலுச்சேர்க்கும் என்பதனை இட்டு மனநிறைவடை கின்றேன். 
இந்நூலினை எழுதுவதற்கு என்னைப் பின்நின்று இயக்குவித்த சில பெறுமதிமிக்க நபர்களினை இங்கே சுட்டுவது பொருத்தமான ஒரு இங்கிதம். அந்த வகையில் எனது பலவீனங்களினைக் களைந்து என்னை ஒரு முழுநிறைவான மனிதனாக உருவாக்குவதில் கரிசனையுடன் செயற்பட்டு வருபவரும் எனது முன்னேற்றத்தினையிட்டு மகிழ்ச்சி காண்பவரும் இந்நூலிற்கு தேவையான அறிவுரைகளினை எனக்கு ஏற்ற வகையில் சுட்டியுரைத்த எனது பேராசிரியரும், நான் மதிக்கின்ற மனிதர்களில் முதன்மையானவருமாகிய எமது துறைத் தலைவர் பேராசிரியர் அ.வே.மணிவாசகர் அவர்களுக்கும், நூலினை எழுத ஆரம்பித்தது  முதல் இன்றுவரையில் ஆலோசனைகளினை வழங்கி என்னை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துகின்ற எமது துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சமூகவியல்துறைத் தலைவருமாகிய திரு.கே.ரீ.கணேசலிங்கம் அவர்களுக்கும் எனது உளம்சார்ந்த நன்றிகள். மேலும் எனக்கு பல்வேறு வகையான உதவிகளினை புரிகின்றவர்களில் முதன்மையானவர்களாக எனது நண்பர்களான எஸ்.திருச்செந்தூரன், செல்வி.ஜா.லிங்கேசியா, செல்வி.க.கிரிஷாந்தி ஆகியோருக்கும், சமூகவியல்துறை விரிவுரை யாளர்களாகிய வதிரி.இ.இராஜேஸ்கண்ணன், எஸ்.சிறிகாந்தன் ஆகியவர்களுக்கும் எனது குடும்பத்தினருக்கும் இந்நூலினை வெளிக்கொணருகின்ற சேமமடு பதிப்பகத்தினருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.
என்னை ஒரு நல்ல நிலையில் வைத்துப் பார்க்க ஆசைப்பட்ட எனது பெற்றோர்களான கனகசுந்தரம் திருநாவுக்கரசு, திருநாவுக்கரசு வசந்தராணி ஆகியோரினை மனக்கனதியுடன் நினைவுகூர்ந்து இந்நூலினை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன். 
திரு.ரீ.விக்னேஸ்வரன்