புனைகதை இயல்
|
தமிழில் புனைகதை இலக்கியம் பற்றிய சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வும் பல நிலைப்பட்ட பல தளப்பட்ட செல்நெறிகளாக விருத்தி பெற்றுள்ளன. குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் பின்னர் புனைகதை இலக்கியம் 'புனைகதை இயல்' ஆக வளர்ச்சியடைந்து புதுப்பிரக்ஞையும் புதுப்பரிமாணமும் மிக்க ஓர் துறையாக பரிணாமம் பெற்றுள்ளது.
இன்று எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வடிவமாகத் திகழ்வது புனைகதைகளே ஆகும். இவற்றின் செல்வாக்கை தாக்கத்தை அடிப்படையாகவும் அளவுகோலாகவும் கொண்டு நூல்களை 'புனைகதைகள்' என்றும் ' புனைகதைகள் அல்லாதன' என்றும் பிரிக்கும் முறை ஏற்பட்டது. உரைநடைப்புனைகதை என்பது சிறுகதை, நாவல் ஆகிய இரண்டையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகவும் பயன்பட்டு வருகின்றது.
தொடர்ந்து மேனாட்டுத் தொடர்பால் வந்த இலக்கிய வடிவங்களை விளங்கிக்கொள்ளும் முயற்சி தீவிரப்பட்டது. இதனால் கவிதை, உரைநடை போன்றவற்றின் இயக்கத்துக்கான கோட்பாட்டு விளக்கத்தினை மேனாட்டு இலக்கியக் கோட்பாட்டாளர்கள் விமரிசகர்கள் வழியாக அறிந்துகொள்வதற்கு விமரிசனப் பயில்வு இடமளித்தது.
இன்று நாம் இலக்கிய விமரிசனம் என மேற்கொள்ளும் இலக்கியக் கற்கை மேல்நாட்டு கல்விமுறை வழியாக வந்தது. அதாவது மேனாட்டு இலக்கிய அறிகையுடனேயே வந்தது. இந்தப் பண்பு புனைகதை இயல் பற்றிய அறிதல்மரபிலும் சிந்தனை மரபிலும் பெரும் தாக்கம் செலுத்தின. நவீன இலக்கியப் பயில்வின் பரப்பை ஆழ அகலப்படுத்தின. சமகாலத்தில் பன்னாட்டு இலக்கியப் பரப்பில் பெருமளவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட துறையாக பு
|