உயர் கல்விச் சிந்தனையை வெகுஜனமயமாக்கல் |
பாடசாலைக் கல்வியின் அவசியம், முக்கியத்துவம் என்பன பற்றிபொதுவாக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். அது பற்றி அவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு உண்டு என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியும். அதனை எடுத்துக்காட்டும் ஒரு முக்கிய குறிகாட்டி ஆரம்ப, இடைநிலைக் கல்விநிலையில் காணப்படும் உயர்ந்த மாணவர் சேர்வு வீதமாகும். ஆரம்பக்கல்வி நிலையில் இவ்வீதம் 100 ஐ அண்மித்து விட்டது. |