புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

வித்தியின் தமிழியற் பதிவுகள்

மறைந்த மூதறிஞர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் வாழ்க்கைப் பணிகளையும் சாதனைகளையும் தமிழ்த் துறைப் பங்களிப்பையும் நினைவு கூறுமுகமாக நடைபெறுகின்ற நிகழ்ச்சியின்போது அன்னார் எழுதிய பல பிரதான கட்டுரைகளின் தொகுப்பொன்று வெளியிடப்படுவது மனங்கொளத்தக்கது. இம்முயற் சிக்குப் பெரிதும் உதவிய சேமமடு பதிப்பகத்தார் திரு.பத்மசீலன், நினைவுக்குழுவின் பிரதான உறுப்பினர் திரு.மதுசூதனன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். அண்மைக் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியரின் எழுத்துக்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியைச் செய்துவரும் இவர்களின் தமிழ்ப்பணி பெரிதும் வரவேற்கத்தக்கது.
பேராசிரியர் அவர்கள் காலஞ்சென்ற பின்னர் உருவாகிய புதிய தலைமுறையினரான தமிழ்பேசுவோர், பேராசிரியர் மற்றும் அவர் போன்று தமிழ்ப்பணி ஆற்றியவர் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஒன்றுண்டு. நவீன தலைமுறையினர், நவீன தொழில்நுட்ப, கணினிக் கல்வியைப் பெறுகின்ற அதேவேளையில் பேராசிரியர் போன்றோரின் தமிழ்ப் பணிகள் பற்றிய கலாசாரக் கல்வியைப் பெற இந்நூல் முயற்சி பெரிதும் உதவும் என்பது எமது நம்பிக்கை. 
காலங்காலமாக மரபுவழிக் கல்வியாக இருந்து வந்த தமிழ்க்கல்வி, 1942ஆம் ஆண்டின் நிறுவப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பிரதான கற்கைத் துறையாக நிறுவப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம், கிழக்கிலங்கை, தென்கிழக்கு ஆகிய பல் கலைக்கழகங்களிலும் பரவியது. மரபுவழித் தமிழ்க் கல்வியைக் கற்பிக்கும் புலமை மிக்கவர்களின் வீழ்ச்சியுடன் உயர்நிலையில் தமிழ்க்கல்வியானது பல்கலைக்கழகங்களின் ஏகபோக உரிமையா யிற்று. தற்போது இத்த


எஸ்.அன்ரனி நோர்பேட்
Antony Norbert, S

சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பேட் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் புவியியல் கற்கையின் சமகாலச் செல்நெறிகளையும் மாற்றங்களையும் உடனுக்குடன் உள்வாங்கி கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் புதிய நுட்பங்களை விருத்தி செய்து வருபவர். 

சமூக அறிவியல் துறைகளின் வளர்ச்சிகளை இற்றைப்படுத்திக் கொண்டு புதிய ஆய்வுக் கலாச்சார விருத்தியிலும் முனைப்புடன் இயங்குபவர். சர்வதேச ஆய்வுக் கருத்தரங்குகளிலும் ஆய்விதழ்களிலும் கட்டுரைகள் வழங்கி வருபவர். 

தமிழ்மொழி மூலமான புவியியல் கற்றைசார் புலமையின் விரிவாக்கத்திற்கு வளம் சேர்த்து வருபவர். இத்துறைப் பேராசிரியர்களின் வழித்தடங்களிலிருந்து மாறுபட்டு இயங்குபவர்.