Book Type (புத்தக வகை) : அகராதி
Title (தலைப்பு) : கல்வியில் அளவீடும் மதிப்பீடும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-12-04-059
ISBN : 978-955-1857-58-5
EPABNo : EPAB/02/18576
Author Name (எழுதியவர் பெயர்) : க.சின்னத்தம்பி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 244
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 660.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • மூன்றாம் பதிப்புக்கான முன்னுரை 9
  • மூன்றாம் பதிப்புக்கான ஆசிரியர்உரை 11
  • மூன்றாம் பதிப்புக்கான பதிப்புரை 12
1. அளவீடும் மதிப்பீடும் 13
அளவீட்டின் பிரதான இயல்புகள் 13: அளவீட்டில் வழுக்கள் 15: நியமம்சார் அளவீடுகளும் நியதிசார் அளவீடுகளும் 16: மதிப்பீட்டின் பிரதான இயல்புகள் 17: கல்வி மதிப்பீட்டின் பயன்கள் 18: மதிப்பீட்டு வகைகள் 22: மதிப்பீடு செய்யப்படும் துறைகள் 24: மதிப்பீட்டுக் கருவிகளின் வகைகள் 25:
 
2. அளவீட்டில் கல்விக் குறிக்கோள்கள் 27
கல்விக் குறிக்கோள்களை வரையறை செய்தலின் அவசியம் 27: கல்விக் குறிக்கோள்களின் வகைகள் 28: போதனைக் குறிக்கோள்கள் 30: கல்விக் குறிக்கோள்களைக் குறிப்பிடுடுவதால் ஏற்படும் நன்மைகள் 31: குறிப்பான குறிக்கோள்களைக் குறிப்பிடுதல் 32: கல்விக் குறிக்கோள்களின் பகுப்பியல் 34: அறிகை ஆட்சிக் கல்விக் குறிக்கோள்களின் பகுப்பியல் 35: எழுச்சி ஆட்சிக் கல்விக் குறிக்கோள்களின் பகுப்பியல் 37: உள இயக்க கல்விக் குறிக்கோள்களின் பகுப்பியல் 38: பகுப்பியல்களின் பயன்கள் 39: விடய திறன் அட்டவணைகள் 41:
 
3. அளவிடு கருவியின் இயல்புகள் 45
நம்பகம் 46: நம்பகத்தைத் துணிதல் 47: சோதனை - மறுசோதனை முறை 48: சமவலு அமைப்பு முறை 49: இரு பாதி முறை 51:    
கூடர் - றிட்சாட்சன் முறை 53: அளவீட்டு வழுக்களும் நம்பகமும் 55: நம்பகத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் 56: உள்ளடக்கத் தகுதி 60: அமைப்புத் தகுதி 61: முன்னறி தகுதி 62: உடன்நிகழ்தகுதி 63: 
 
4. கட்டுரை அடைவுச் சோதனைகள் 65
அடைவுச் சோதனைகள் 65: சோதனை வகைகள் 66: வாய்மொழிச் சோதனைகள் 66: கட்டுரைச் சோதனைகள் 67: கட்டுரைச் சோதனையின் சிறப்பியல்புகள் 68: கட்டுரைச் சோதனைகளின் குறைபாடுகள் 70: கட்டுரைச் சோதனைகளை அமைத்தல் 73: கட்டுரைச் சோதனைகளுக்குப் புள்ளி வழங்கல் 75: அமைப்புக் கட்டுரை வகை வினா 77:
 
5.புறவய அடைவுச் சோதனைகள் 79
புறவயச் சோதனை வகைகள் 80: வழங்கல் வகை வினாக்கள் 80: வழங்கல் வகைச் சோதனை உருப்படிகளை அமைத்தல் 81: தெரிதல் வகை வினாக்கள் 82: இரண்டுள் தெரிதல் வகை வினாக்கள் 83: இரண்டுள் தெரிதல் வினாக்களை அமைத்தல் 84: பொருத்தல் வகை வினாக்கள் 84: பொருத்தல் வகை வினாக்களை அமைத்தல் 85: பலவுகள் தெரிவு வகை வினாக்கள் 85: பலவுள் தெரிவு வகை வினாக்களின் சிறப்பியல்புகள் 86: பலவுள் தெரிவு வகை வினாக்களை அமைத்தல் 87: 
 
6. வினையாற்றல் அடைவுச் சோதனைகள் 91
வினாயாற்றற் சோதனையின் இயல்புகள் 93: வினையாற்றற் சோதனைகளின் வகைகள் 93. பொருட் சோதனைகள் 94: செயல்முறைச் சோதனைகள் 96: செயல்முறையின் உற்று நோக்கல் நுட்பங்கள் 98: சம்பவப் பதிவேடு 99: சரியீட்டுப் பட்டியல் 99: தர அளவுச் சட்டம் 100: விளைவுச் சோதனைகள் 102: விளைவு மதிப்பீட்டு நுட்பங்கள் 104: வினையாற்றற் சோதனைகளை அமைத்தல் 104:
 
7. உளச்சார்பின் அளவீடு 107
உளச்சார்புச் சோதனைகளும் அடைவுச் சோதனைகளும் 107: நுண்மதியின் அளவீடு 109: நுண்மதிச் சோதனைகள் 110: தனியாள் நுண்மதிச் சோதனைகள் 110: ஸ்ரான்போட் - பீனே அளவுச் சட்டம் 111: நுண்மதி ஈவு 112: உளவயது 113: விலகல் நுண்மதி ஈவு 113: வெக்ஸலர் அளவுச்சட்டம் 114: தனியாள் சோதனைகளின் குறைபாடு 115: கூட்ட நுண்மதிச் சோதனைகள் 115: நுண்மதி ஈவு 117: தனியாள், கூட்ட நுண்மதிச் சோதனைகள் 117: நுண்மதிச் சோதனையின் பயன்கள் 120: சிறப்பு உளச்சார்புகளின் அளவீடு 122: சிறப்பு உளச்சார்புச் சோதனைகளின் பயன்கள் 123: 
 
8. ஆளுமையின் அளவீடு 125
ஆளுமை என்றால் என்ன? 125: ஆளுமைச் சோதனைகள் 126: சுய - அறிக்கை அண
Full Description (முழுவிபரம்):

சமகாலக் கல்விச் செயன்முறையில் 'தரவிருத்தி' 'தரக்காப்பீடு' புதுப்பரிமாணமாக எழுச்சி பெற்று வருகின்றது. கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டிலே 'அளவீடும் - மதிப்பீடும்' புதிய சிந்தனை முறைக ளையும் புதிய நோக்கு முறைகளையும் உள்வாங்கி வளர்ந்து வருகின்றது. 
ஆசிரியர்கள் தமது பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமானால் 'கல்வியில் அளவீடும் மதிப்பீடும்' தொடர்பான அறிவைத் திரட்ட வேண்டும். இவை சமூக வாழ்வின் அடிப்படைத் திறனாகவும் வாழ்வாதார நிலைகளில் மேம்பாடுகளை உருவாக்கும் பண்பு கொண்டதாகவும் அமைய வேண்டும். மாணவர்கள் மட்டத்தில் புத்தாக்கங்களை விளைவிக்கும் அறிவின் படிப்படியான வளர்ச்சி ஆளுமையின் படிப்படியான முன்னேற்றம் முதலானவை உருவாக வேண்டும். 
இந்தப் பண்பை ஆசிரியர்களிடையே வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்நூல் ஆக்கமாக உருவாகியுள்ளது. வெற்றிகரமான கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் ஆசிரியர்கள் ஈடுபடுவதற்கான சாதகமான சூழமைவுகளை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் நூலாகவும் இது அமைகின்றது. விஞ்ஞான மனப்பாங்கு சார்ந்த அணுகுமுறைகளினால் மாணவர் அடைவு மட்டத்தை விளங்கி அளவிடுவதற்கான மதிப்பிடுவதற்கான தற்துணிவை ஆளுமையை ஆசிரியர்களுக்கு வழங்குவதுடன், புதிய அறிகை மரபு உருவாவதற்கான பண்பாட்டுப் பின்புலத்தையும் இந்நூல் உருவாக்கு கின்றது. 
வினைத்திறன்மிக்க கற்பித்தலை முன்னெடுத்துச் செல்லும் அளவீடும் மதிப்பீடுகளும் மாணவரின் கற்றல் நடத்தை உருவாக்கமும் வகுப்பறை முகாமைத்துடன் இணைந்தவை. கல்வி முகாமைத்துவத்தின் ஒன்றிணைந்த பிரிவாக வகுப்பறை முகா மைத்துவம் அமைந்துள்ளது. நாம் இதனை முழுமையாக நிறைவு செய்வதற்கு 'கல்வியில் அளவீடும் மதிப்பீடும்' அறிகை நிலையிலும் ஆற்றுகை நிலையிலும் புதிய சாத்தியப்பாடுகளை புதிய கலங்களை எமக்குத் திறந்து விடுகின்றது. 
எம்மிடையே 'அளவீடும் மதிப்பீடும்' தொடர்பில் தமிழில் அதிகமான நூல்கள்  உருவாகவில்லை. இந்நிலையில் இத்துறையின் விருத்திக்கு வலுவான நூலாகவே இந்நூல் விளங்குகின்றது. 
நூலாசிரியரது கற்கைப் புலம் - விஞ்ஞானஃ கணிதப்புலம் - கல்வியியல் புலம் யாவும் இணைந்து இதுபோன்ற நூல்களை உருவாக்குவதற்குச் சாதகமான ஃபுலமைத்துவ மரபை வழங்கியுள்ளது. இந்த மரபு இன்னும் தொடரப்பட வேண்டும். இது போன்ற காத்தி ரமான நூல்கள் தமிழில் வெளிவர வேண்டும். இதனால்  தமிழ்மொழி இன்னும் வளம்பெற வேண்டும். 
பேராசிரியர் நீண்டு நிலைத்து வாழ எம் வாழ்த்துக்கள்.

-தமிழாகரன்-