கல்வியியலும் கணிப்பீட்டியலும் |
நவீன கல்வி விருத்தியில் கணிப்பீடு ஒரு முதன்மை விடயமாக கருவியாக உருமாற்றம் பெற்று வளர்ந்துள்ளது. அதாவது கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒரு அறிகை முறைமையாகவும் செயல்வாதமாகவும் பரிமாணம் பெற்றுள்ளது. இதனால் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒன்றிணைந்த கூறாக வளச்சிபெறத் தொடங்கியுள்ளது. ஒரு நிலையில் கணிப்பீடுதான் முழுமையான கல்வி அம்சமாகவும் உருமாற்றம் பெற்றுள்ளது. ஆனால் சாதாரண பொதுப்புத்தி மட்டங்களில் மாணவர் மதிப்பீடு என்பது கணித வாய்ப்பாட்டு அளவுக்குள் கணிப்பீடு குறுகி விடுகின்றது. |