புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமூகவியல் சமூகமானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்

சமூக விஞ்ஞானங்களில் (Social Sciences) முதன்மையான துறையாகக்கருதப்படும் சமூகவியல் (Sociology) வயதில் இளையது. 19ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இத்துறை இன்று அகலக்கால் பதித்து ஏனைய சமூக விஞ்ஞானங்களை விட ஆய்வுத் துறையில் முன்னணி வகிக்கிறது. சமூகத்தையே தனது ஆய்வுத் தளமாகக்கொண்டியங்கும் இத்துறைக்கு வரவேற்பு பலமானதாகும். வட ஆபிரிக்காவில் பிறந்த இப்னு கல்தூனின் (Ibnu Khaldun) சிந்தனையில் உருவான இத்துறை மேற்கேத்தேய அறிஞர்களினால் வளர்த்தெடுக்கப்பட்டது. சமூகவியலைப் போன்றே, மானிடவியலும் மனிதனை ஆராயும் தளமாகக்கொண்டியங்கும் துறையாகும்.
இந்தவகையில், சமூகவியல், சமூக மானிடயவியல் என்பவற்றின் அடிப்படை எண்ணக்கருக்களை பற்றிய தமிழ் மொழி மூல நூல்கள் மிகவும் குறைவாகும். அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இவ்வாறான ஒரு கன்னி முயற்சியில் இறங்க தீர்மானித்தேன். அந்த முயற்சியின் பலனாக உருவானதே இந்நூலாகும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமன்றி, சாதாரண பொதுமக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு எண்ணக் கருக்களையும் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் பல உபதலைப்புக்களுடனும், உதாரணங்களுடனும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சமூகவியலை போன்று மானிடவியலும் ஒரு விரிந்த துறை என்பதால், முக்கியமான மானிடவியல் எண்ணக்கருக்கள் மாத்திரமே இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கலாநிதியு.றமீஸ்,

 


பேராசிரியர் நா. ஞானகுமாரன்
Gnanakumaran, N Prof

பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் கடந்த 34 வருடங்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் கடமையாற்றி வருபவர். இவர் பாரதி போற்றிய அருளம்பலசுவாமிகள் (1992), நயந்தரும் சைவசித்தாந்தம் (1994), சைவசித்தாந்தத் தெளிவு (1994), சைவசமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு (1995), சைவசித்தாந்தத்தில் அத்துவித எண்ணக்கருத்து (1997), மெய்யியல்(2003), அருளாளர்களின் சமய அனுபவம்(2004), சைவசித்தாந்தத் தெளிவு (திருத்திய பதிப்பு 2012), மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும் (2012), மெய்யியல்(திருத்திய பதிப்பு 2012) முதலான நூல்களின் ஆசிரியர். 

 
மெய்யில், சைவசித்தாந்தம், வேதாந்தம் ஆகிய துறைகளில் ஆழமான ஈடுபாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் மிக்கவர்.  சுவீடன் ஒப்சலா பல்கலைக்கழகம், அமெரிக்க அர