புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சீர்மிய உளவியல்

பாடசாலைச் சீர்மியம் தொடர்பாக தமிழில் வெளிவரும் முதலாவது நூலாக இது அமைகின்றது. சீர்மியம் ஒரு மேலைத்தேயச் செயல்முறை என்றும் அறிமுறையென்றும் கருதப்படும் அறிகை அடிமைத்தனத்தை மாற்றியமைத்தலும் இந்நூலாக்கத்தின் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது. எமது மரபு வழிச் சடங்குகளும், கூத்துக்களும், இலக்கிய வழியான எடுத்துரைப்புக்களும் உளச்சுகம் தேடும் நுண் வழிகளைப் பலநிலைகளிலும் முன்னெடுத்து வந்துள்ளன. சீர்மியத்திலே தோழர் தோழியரது வகிபாகம் சங்க இலக்கியங்களிலே பரவலாகப் பேசப்படுகின்றது. மேலும் சீர்மிய நெறியைப் பக்தி நெறியுடன் இணைக்கும் அறிகை முறைமை நாயன்மார் பாடல்களிலும், ஆழ்வார் பாசுரங்களிலும் காணப்படுகின்றன. எமது சித்தர் மரபுகளில் இடம்பெற்று வந்த உள-நலக்காப்பு நடவடிக்கைகளும், நாட்டார் மரபுகளில் இடம்பெற்று-வரும் உளச்சுகம் காணற் செயற்பாடுகளும் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளன. இவ்வாறான கருத்தெழுகைச் சூழமைவில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது. 
ஆக்கத்துக்கு வேண்டிய உசாத்துணை நூல்களைத் தந்துதவிய தேசிய கல்வி நிறுவக சமூக விஞ்ஞானத் துறைப் பணிப்பாளர் கலாநிதி உ.நவரத்தினம் மற்றும் கல்வி அமைச்சின் மதியுரையாளர் கலாநிதி கமலநாதன் அவர்களும் தொடர்ந்து எழுதுமாறு உற்சாக தரும் நண்பர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் நண்பர் தெ.மதுசூதனன் அவர்களும் சேமமடு வெளியீட்டு நிறுவனத்தினரும் நன்றிக்குரியவர்கள். 
சபா.ஜெயராசா
கோயில் முன்றல், இணுவில் 

 


க.சி.குலரத்தினம்
Kularatnam, C.S

ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபில் பல்துறை ஈடுபாட்டாளராக விளங்கியவர் க.சி.குலரத்தினம் ( 1916 - 1993 ). இவர் மரபு நவீனம் வழிவந்த மருகளை உள்வாங்கியவர். சைவாசிரியர் கலாசாலை மரபிலும் திளைத்தவர். தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப்பணி புரிந்தவர். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமல்ல தொடர் ஆய்வு முயற்சிகளிலும் தீவரமாகச் ஈடுபட்டவர். செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், சைவம் வளர்த்த சான்றோர்கள், தமிழ் தந்த தாத்தாக்கள் போன்ற மூலம் ஈழத்துத் தமிழ் மரபின் தளமும் வளமும் பற்றிய தேடுகைக்கான ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் மீளுருவாக்கம் செய்தவர். நோத் முதல் கோபல்லா வரை என்னும் தூல் மூலம் வரலாற்று அரசியல் இணைப்புக்களை ஆய்வு ரீதியில் விளக்க முற்பட்டவர். அதன்மூலம் தமிழுணர்வு முகிழ்ப்பின் தோற்றப்பாடுகளையும் அடையாளம் காட்டியவர். இந்து நாகரீகம் தந்து இந்து ம