புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சேவை சந்தைப்படுத்துதல் : ஓர் அறிமுகம்

உலகில் பிரபல்யம் அடைந்துவரும் கற்கை நெறிகளில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் முதன்மையான இடத்தை வகிக்கின்றது. அந்த வகையில் சேவைச் சந்தைப்படுத்தல் பற்றியும் அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் ஆராய்தல் இவ்வுலகிற்கு இன்றியமையாததும் தேவைப்பாடுடையதுமாகும். ஏனெனில் உலக நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்பில் சேவைத்துறையானது மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றதுடன் பொருளாதாரமும் அதன் உதவியுடன் கட்டியெழுப்பப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. இதன் விளைவாய் சேவைச் சந்தைப்படுத்தல் குறித்த நூல் ஒன்றினை எழுதும் நாட்டம் தோன்றியது. அந்தவகையில் எழுதப்பட்ட நூல்லானது ஒன்பது கட்டுரைகளினை உள்ளடக்கியுள்ளது. ஓவ்வொரு கட்டுரையும் கொள்கைகளையும், நடைமுறை உதாரணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 
சேவை சந்தைப்படுத்தலுக்கு தமிழ்மொழி வழி நூல்கள் மிக அரிதே என்கின்ற குறையினை இந் நூலின் மூலம் குறைக்க முனைந்துள்ளேன். நூலினை உருவாக்குவதற்கு எனக்கு உறுதுணையாகவிருந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். குறிப்பாக என்னை எழுதத்தூண்டிய எனது தந்தை பேராசிரியர் க. சிவானந்தமூர்த்திக்கு என் இனிய நன்றிகள். எனது நூலினை வெளியீடு செய்யும் பதிப்பாளர் சதபூ. பத்மசீலனுக்கும் நன்றிகள். 
இந் நூலுக்கு அணிந்துரை, வழங்கிய முகாமைக் கற்கைகள் வணிகபீட பீடாதிபதி பேராசிரியர் க. தேவராஜா அவர்களுக்கும், சந்தைப்படுத்தல் துறைத் தலைவர் இ. இரட்ணம் அவர்களுக்கும், அணிந்துரை வழங்கிய பேராசிரியர் தி. வேல்நம்பி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
சி.சிவேசன்

 


ஏ.றமீஸ்
A.Rameez

சாதாரண குடும்பத்தில் பிறந்த கலாநிதி றமீஸ் அபூபக்கர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விசேடதுறையில் 2004ல் முதல் நிலையில் சித்தியடைந்த்தன் விளைவாக அதே பல்கலைக்கழகத்தில் நிரந்தர விரிவுரையாளாக நியமிக்கப்பட்டார். பின்னர் தனது முதுமானி பட்டத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்புலமைப்பரிசிலைப் பெற்று தனது கலாநிதிப்பட்டத்தை பூர்த்தி செய்தார். அது மட்டுமன்றி முரண்பாட்டும் தீர்வையும் சமாதான ஆயத்தங்களும் கற்றைநெறியை பிரித்தானியாவில் பிரட்பேட் பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்திருக்கின்றார். சமூக விவகாரங்களிலும் ஆய்வுப்பணியிலும் அதிகம் அக்கறை காட்டும் இவர் சிறந்த அரசியல் ஆய்வாளரும் ஆவார்.