சமகாலக் கல்வி முறைகள் ஒரு விரிநிலை நோக்கு |
ஆசிரியர் பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமன்றிக் கல்வித்துறை யில் பணியாற்றும் சகலரும் - உதவிப் பணிப்பாளர்கள், பணிப்பாளர் கள் உலகளாவிய ரீதியில் கல்விமுறையின் செல்நெறிகள், புத்தாக்கச் செயற்பாடுகள் என்பவற்றை அறிந்துகொள்வதால், உலகளாவிய கல்விமுறைகள் பற்றிய அவர்தம் அறிவும் புரிந்துணர்வும் பெரிதும் விரிவடைய வாய்ப்புண்டு. கற்கைநெறி என்ற முறையில், இத்துறை யானது ஒப்பியல் கல்வி, சர்வதேசக் கல்வி என அழைக்கப்படு கின்றது. ஆங்கிலத்தில் இத்துறை சார்ந்த சஞ்சிகைகளும் நூல்களும் ஆய்வுகளும் ஏராளமுண்டு. அவற்றால் தமிழ்மட்டும் தெரிந்தவர்க ளுக்கு எதுவித பயனுமில்லை. |