சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள் |
ஆசிரியர்களுக்கான தொழில்முறைக்கல்வி 'கல்வியியல்' எனப் பொதுவாகச் சுட்டப்பட்டாலும் அதில் ஏராளமான துணை நெறிகள் உண்டு. கல்வி உளவியல், கல்விச் சமூகவியல், பொதுக்கற்பித்தலியல், கல்வி மதிப்பீடு, கல்வித்தத்துவம் எனப் பலவாறாக விரிந்து செல்லும் கல்வியியலின் ஒரு பிரதான துணைப்பிரிவு 'ஒப்பியல் கல்வி' ஆகும். உலக நாடுகளின் கல்வி முறைகளின் போக்குகள், வளர்ச்சிகள் என்பன இதில் முறையாக, வரலாற்று ரீதியாக ஆராயப்படுவதும் அவ்வாறான போக்குகளுக்கும் வளர்ச்சிகளுக்குமான காரணங்கள், அவற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பற்றிய ஆய்வு ரீதியான நோக்கு இக்கற்கை நெறியின் உள்ளடக்கமாகும். |