Full Description (முழுவிபரம்): |
புவிவெளியுருவவியல் என்பது புவி பற்றிய ஒரு விஞ்ஞானமாகும். புவியில் காணப்படும் அம்சங்களின் தோற்றம், வரலாறு, அத்துடன் அது எவ்வாறு மாற்றமடைகின்றது என்பது பற்றிய இயக்கத் தன்மையுடன் தொடர்புடையது. பல்வகைத் தோற்றப்பாடுகளான எரிமலைகள், பனிக்கட்டியாறுகள், அருவிகள், கடற்கரையோரங்கள், புவிநடுக்கங்கள் என்பவை பற்றி புவிச்சரிதவியலாளர்களும் புவியியலாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற மாற்றங்கள், சமகால மாற்றங்கள், எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றிய இயற்கையின் விளங்கிக்கொள்ளலாக இக்கற்கைநெறி அமைந்துள்ளது.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் பல்வேறு அம்சங்கள், அவை உருவாகியபோது நிகழ்ந்த செயன்முறைகளை இன்றும் வெளிக்காட்டி நிற்கின்றன. சகாரா பாலைவனத்தின் மணற்குன்றுகள், அலைகளின் செயற்பாட்டினால் ஏற்பட்ட அத்திலாந்திக் கரை யோரத்தின் அமைப்புக்கள், எரிமலை வெடிப்புக்களை வெளிப்படுத் திக் காட்டும் ஹாவாய்தீவுகள் என்பன புவியின் வரலாற்றினையும் அதன் இயங்கு தன்மையினையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிலவாக அமைந்துள்ளன.
உயர்தர வகுப்பில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாண வர்களைப் பொறுத்தவரையில் தகுதி வாய்ந்த நூல்களின் பற்றாக் குறை முக்கியமானதொரு குறைபாடாகக் கூறப்பட்டு வந்துள்ளது. இலங்கையின் பாடசாலை முறைமையைப் பொறுத்தவரை வகுப் பறைப் பாடம் மற்றும் தனியார் போதனை நிலையங்களில் வழங்கப் படும் போதனை தவிர்ந்த ஏனைய சுயகற்றல் முறைகளினுடாகப் புவியியலைக் கற்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. அத்துடன் அரசாங்கத்தின் இலவச பாடநூல் விநியோகமும் பல சிக்கல்கள் காரணமாக உயர்தர வகுப்புக்களைச் சென்றடை வதில் தடங்கல்கள் காணப்படுகின்றன. இன்றைய கல்வி முறைமை யின் புதிய நோக்கங்களுக்கமைய மாணவர்கள் சுயகற்போராக விருத்தி பெறவேண்டும் என்னும் குறிக்கோள் ஓர் உயர்தரமான கல்வியின் நோக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைக் காணலாம்.
தமிழ்மொழி வழி மாணவர்கள் இவ்வாறான நோக்கத்திற் கமைய தம்மை விருத்தி செய்து கொள்வதற்கு அம்மொழி வழியிலான பாடநூல்களும், இணையச் சஞ்சிகைகளும், இணையத் தளங்களும் தேவை. குறிப்பாக, புவியியல் பாட ஏற்பாடு சார்ந்த பல விஞ்ஞான ரீதியான புதிய துறைகளில் துணைப் பாடநூல்களின் பற்றாக் குறையானது புவியியல் மாணவர்களினால் இன்று நன்கு உணரப்பட் டுள்ளது. அத்துடன் சில காலத்துக்கு முன்னர் பல்கலைக்கழகங்களில் புவியியலைக் கற்ற பட்டதாரி ஆசிரியர்களும் புவியியல் துறையில் விருத்தி பெற்றுவரும் புதிய அறிவுத் தொகுதியை தமிழ் வழியினூடாகப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஓர் அவசியத் தேவையையும் கொண் டுள்ளனர். இப் பின்புலத்திலேயே கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் 'பெதிகப் புவியியல்: செயன்முறையும் நிலவுருவங்களும்' என்னும் தலைப்பில் ஒரு புதிய நூலை எழுத முற்பட்டோம். ஆறு, காற்று, பனிக்கட்டியாறு, அலைகள் என்பவற்றின் அரித்தல் செயன்முறைகளும் அவற்றினால் உருவாக்கப் படும் நிலவுருவங்களும் மற்றும் தரைநீரின் செயன்முறையும் நிலவுரு வங்களும் பற்றி, குறிப்பாக, சுண்ணாம்புக் கற்பிரதேச நிலவுருவங்கள் பற்றி இந்நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ளது.
புவியியலின் விஞ்ஞானம் சார்ந்த உள்ளடக்கத்தை மாணவர்கள் சுயமாகக் கற்று விளங்கிக்கொள்வதற்கான எளிய தமிழ் நடையிலான நூல்களின் தேவையை எமது இந்நூல் பெரிதும் நிறைவு செய்யும் எனக் கருதுகின்றோம்.
இந்நூலில் புவியியல் சார்ந்த வௌ;வேறு முக்கியமான ஐந்து தலைப்புக்களில் மாணவர்களுக்கு விளங்கும் முறையிலும் பரீட்சை நோக்கிலும் சில முறையியலைப் பயன்படுத்தி அவர்களுடைய கல்வித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இந்நூலை நாம் வடிவமைத்துள்ளோம். இந்நூலுக்கு புவியியல் மாணவர்கள், ஆசிரி யர்கள் மட்டுமன்றி இத்துறையில் படிக்கும் ஆர்வமிக்க வாசகர்கள் அனைவரும் தமது ஆதரவை நல்குவார்கள் என்பது எமது நம்பிக்கை.
இந்நூலை அழகிய முறையில் அச்சேற்றி உதவிய சேமமடு பதிப்பக உரிமையாளர் சதபூ. பத்மசீலன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எஸ். அன்ரனி நோர்பேட்
|
ஏனைய பதிப்புக்களின் விபரம் |
Content (உள்ளடக்கம்): |
பொருளடக்கம்
- அறிமுகம்
- ஆற்றின் அரித்தல் செயன்முறையும் நிலவுருவங்களும்
- காற்றரிப்புச் செயன்முறையும் நிலவுருவங்களும்
- பனிக்கட்டியாற்று நிலவுருவங்கள்
- கரையோர அரித்தல் செயன்முறையும் நிலவுருவங்களும்
- தரைநீரின் செயன்முறையும் நிலவுருவங்களும்
- உசாத்துணைகள்