Book Type (புத்தக வகை) : நூலகவியல்
Title (தலைப்பு) : நூலக அபிவிருத்தி : ஒரு பயில் நோக்கு
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-09-01-083
ISBN : 978-955-1857-82-0
EPABNo : EPAB/02/18566
Author Name (எழுதியவர் பெயர்) : அருளானந்தம் சிறீகாந்தலட்சுமி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 212
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 560.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • நூலகம்   15-36 
அமைவிடம்-17/ கட்டிடம்-19/ உட்புற வடிவமைப்பு-22/ இடஒதுக்கீடு-24/ தளபாடங்களும் உபகரணங்களும்-26/ அமைப்புக் கட்டமைப்பு-30/ நூலகக் குழு-32/ஒழுங்கு விதிகள்-33/ நூலகப் பாதீடு-35 
  • நூல்கள்  37-152
உருவம்-38/ வடிவம்-40/ உள்ளடக்கம்-41/ உட்பொருள்-42/ தரம்-43/ பயன்பாடு-44/ இருப்பிடம்-45/ ஒழுங்கமைப்பு-48/ ஈட்டல் நியமங்கள்-49/ தெரிவுப் பிரமாணங்கள்-51/ நூல் தெரிவு அட்டை-57/ நூல்களும் நன்கொடைகளும்-58/நூல்களும் கொள்வனவும்-60/ கொள்வனவுக் கட்டளைச் செய்முறை-62/ நூல்வரவுப் பதிவேடு-66/ பருவ இதழ்ப் பதிவேடு-68/ பகுப்பாக்கம்-69/ பொருட்துறைகளை விளங்கிக் கொள்ளல்-70/ பகுப்பாக்கப் பணி-77/ சுருக்கப்பட்ட தூய தசமப் பகுப்புத் திட்டம் 22ம் பதிப்பு-81/ பட்டியலாக்கம்-100/ பட்டியலாளருக்கான தகவல் மூலங்கள்-101/ பட்டியல் அட்டையின் மூலகங்கள்-103/ பட்;டியல் விவரணம் முதலாம் நிலை-105/ பட்டியல் விவரணம் இரண்டாம் நிலை-106/ பட்டியல் விவரணம் மூன்றாம் நிலை-107/ விவரணப் பட்டியலாக்க மூலகங்கள்-108/ பிரதான தலைப்பு விதிமுறைகள்-114/ மாதிரிப் பதிவுகள்-116/ நூற்தலைப்பு-119/ கூட்டு நிறுவனம்-122/ மாதிரிப் பதிவுகள்-125/ சீரமைவுத் தலைப்பு-131/ பொருட் தலைப்புகள்-133/ மாதிரிப் பொருட் தலைப்புகள்-137/ வழிகாட்டிப் பதிவுகள்-138/ பட்டியலில் பயன்படுத்தப்படும் பிரதான குறியீடுகள்-139/ கோவை ஒழுங்கமைப்பு-140/ அதிகாரக் கோவை-141/பௌதிகச் செய்முறைகள்-142/ இறாக்கைப் படுத்தல்-144/ இருப்பெடுத்தல் -146/ நூலும் பராமரிப்பும்-148/நூல் கட்டுதல்-150.
  • வாசகர்   153-178
வாசகரும் பண்புகளும்-154/ வாசகரும் தகவல் தேவையும்- 155/ வாசகரும் தகவல்களும் அணுகுகைசார் தடைகளும்-156/ வாசகரும் சேவைகளும்-161/ வாசகர் கல்வி-169/ நூலகமும் தகவல் தொழினுட்பமும்-171/ வாசகரும் கணினிமூல சேவைகளும்-173/ வாசகரும் தகவல் தேடுகையும்-175
  • அலுவலர்   179-212
ஆளணி-180/ அலுவலர் நியமங்கள்-181/ அலுவலர் சமன்பாடு-182/ கடமைகளும் பொறுப்புகளும்-184/ நியமனங்கள்-186/ பணி விபரம்-191/ நூலக பதிவேடுகள்-194/ அலுவலகப் பதிவேடுகள்-196/ நூலகப் புள்ளிவிபரங்கள்-197/ படங்கள்-201-211/ உசாத்துணை நூல்கள்-212
Full Description (முழுவிபரம்):

அறிவும் திறனும்  இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு, வரி, வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின்  உருவமைப்பில் அதிக கவனம் செலுத்தி அவற்றின் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, சேமிப்பு, பகிர்வு, பராமரிப்பு  போன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலக அறிவியல் துறையும், இப்பதிவே டுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம், சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, மீள் பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறை களினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது   தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத் தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டை யும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கான வழிவகைகள், தகவல் கையாள்கை மற்றும்  பரவலாக்கம் போன்றவற் றில் நூலகங்கள் மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றி  கணித வியல், தருக்கவியல், மொழியியல், உளவியல், கணினித் தொழினுட்பம்;, நூலகவியல், தகவலியல்,  முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன் தொடர்புடையதொன் றாகவும் உள்ள பெருமைக்குரியது. 
இன்றைய தகவல் தொழினுட்ப யுகத்தில், நூலகர்களாக அல்லது தகவல் அறிவியலாளராக தமது பணியை வரித்துக்கொண்ட அனை வரும் வளர்ச்சியடைந்த தேசங்களைப் பொறுத்து அபிவிருத்தியின் அச்சாணியாக மட்டுமன்றி இனிவரப் போகும் யுகம் தகவலை ஒழுங்கு படுத்தும் பாரிய பணியை சுமக்கப்போகின்ற  நூலகர்களின் யுகமாக இருக்கும் என்ற எதிர்வு கூறல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் தமது அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ளும் தீவிர முயற்சியில் இறங்கிருத்தலும் கண்கூடு. இதற்கு முற்றிலும் மாறாக ஏனைய வளர்ச்சி யடைந்துவரும் நாடுகளைப் போன்றே இலங்கையின் பெரும்பாலான பொதுசன நூலகங்கள் மற்றும் பாடசாலை நூலகங்களின் நூலகர்களும் தகவல் என்ற கருத்துநிலைக்கு முற்றிலும் பழக்கப்படுத்தப்படாதவர் களாக இருக்கும் அதேசமயம் 
நூலகத்திற்கு அவசியமான அடிப்படை ஆவணத்தொகுதியை  கட்டியெழுப்புவதற்கான அறிவையும் திறனையும் இன்னும் வேண்டி நிற்கும் நிலையே எங்கும் நிறைந்திருக்கிறது. அதுமட்டுமன்றி நூலக அறிவியலில் அதிக புலமைத்துவத்தை வேண்டி நிற்கும் தகவல் வள அபிவிருத்திக்கான தெரிவிலோ அல்லது தகவல் வளங்களின் ஒழுங்க மைப்புக்குத் தேவைப்படும் பகுப்பாக்க அறிவிலோ கவனம் செலுத்தாது தகவல் தொழினுட்ப சவால்களுக்கு முகங்கொடுப்பதிலும் வளர்ச்சிய டைந்து வரும் உலகிலுள்ள வாசகனின் தேவைகளையும் அதற்கான வசதிவாய்ப்புகளையும் புறக்கணித்து வளர்ச்சியடைந்த உலகிற்கு இணையாக தம்மை மாற்றிக்கொள்வதில் அதிக முனைப்புடன் செயற் படுவதன்  காரணமாக நூலகங்கள் வாசகனின் அடிப்படைத் தகவல் தேவையை பூர்த்தி செய்வதற்கான அடிப்படை ஒழுங்கமைப்பைக் கூட அறிவும் பயிற்சியுமற்ற தொழிற்றிறன்சார் துணை அலுவலர்களின் கரங்களில் ஒப்படைத்திருக்கும் தன்மையானது நூலகங்களுக்கும் வாசகருக்குமிடையிலான இடைவெளியை மிகவும் அதிகரித்திருக்கிறது. 
'நூலக அபிவிருத்திக் கைநூல்' எனப்படும் இந்தப் படைப்பானது நூலகவியல் தொடர்பான அடிப்படை அறிவு எதுவுமின்றி பொது நூல கங்கள் மற்றும் பாடசாலை நூலகங்களை நிர்வகிக்கும் நூலகர்களது நீண்ட கால வேண்டுகோளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு; உருவாக் கப்பட்டது. அதுமட்டுமன்றி நூலகம் ஒன்றைப் புதிதாக அமைக்க விரும்பும் தாய்நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரும் மிக இலகு வாகப் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையான முறையிலும்  வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக் கொண்டு இயங்கும்  ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான 'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்கு கள், பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின் தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்புசார் நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகிய வர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்த ஆக்கம் எனில் மிகையல்ல. எனினும் இந்த ஆக்கத்தில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இந்த விடயங்களில் இன்றுவரை பரிச்சியமில்லாத பெரிய நூலகங்களுக்கும் கணிசமானளவு உதவக்கூடியது.  
நூலகம் என்பது நூல்கள், வாசகர், நூலகர் என்ற மூன்று மூலகங் களை உள்ளடக்கும் மூவுரு என்பதற்கமைய இந்த நான்கு அம்சங்களும் பிரதான தலைப்புகளாகக் கொள்ளப்பட்டு இந்த ஆக்கத்தில் தனித்தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
நூல்கள், வாசகர், நூலகர் என்ற மூன்று அம்சங்களும் ஒன்றி ணைந்து செயற்படுகின்ற இடமாகிய நூலகம் என்ற கருத்துநிலையை முதலாவது பகுதி உள்ளடக்குகின்றது. வாசிப்பு என்பது மனது சம்பந்தப்பட்டது. வாசிப்பதற்கான சூழலைத் தெரிவுசெய்வது முதற் கொண்டு நூலக உருவாக்கத்தின் ஒவ்வொரு படிநிலையும் அதிக கவனத்துடன் செயலாற்றவேண்டிய அறிவையும் திறனையும் வேண்டி நிற்பதொன்று. எனவே நூலகத்திற்கான அமைவிடத் தெரிவு முதற் கொண்டு, கட்டிட உருவாக்கம், உட்புற வடிவமைப்பு, இட ஒதுக்கீடு, தளபாடங்களின் தேவை என்பனவும் நூலகத்தின் தொழிற்பாடுகளும் இப்பகுதியில் விபரிக்கப்பட்டிருக்கின்றன. 
'சுவரின்றிச் சித்திரம் வரைதல் சாத்தியமற்றது' என்பதை மனதிற் கொண்டு ஒரு நூலகத்திற்கு அடிப்படையைத் தருகின்ற நூல்கள் என்ற கருத்துநிலைக்கு இரண்டாவது இடம் தரப்பட்டிருக்கிறது.  நூல்களின் தன்மை, அவற்றின் பண்புகள், நூல்களின் வகைக்கமைய அவற்றின் தெரிவு, தெரிவுப் பிரமாணங்கள், ஈட்டல் நியமங்கள், அவற்றை ஒழுங்க மைப்பதற்கு வேண்டிய பகுப்பாக்க பட்டியலாக்க அறிவு, அவற்றின் பராமரிப்பும் பாதுகாப்பும்  என்பன இந்தப்பகுதியில் எளிமையாக விபரிக்கப்பட்டிருக்கின்றன.
'வாசகனின்றி நூல்களால் பயனேது' என்பதற்கமைய நூல்களைப் பயன்படுத்தும் வாசகர் சார்ந்த தகவல்கள் மூன்றாவது பகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.  வாசகரின் பண்புகள், வாசகரின் தகவல் தேவைகள், தகவலை அணுகுவதில் வாசகர் எதிர்கொள்ளும் தடைகள், இந்தத் தடைகளுக்கு எவ்வாறு முகங் கொடுத்தல் என்பதற்கான கல்வி, தகவல் வளங்களைக் கையாள் வதற்கான அறிவு என்பவை இப்பகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
தகவல் கட்டுமீறல் என்ற கருத்துநிலையால் திணறிக் கொண்டி ருக்கும் இவ்வுலகில் வாசகனையும் அவனுக்குரிய தகவலையும் பொருத்தமான நேரத்தில் இணைத்துவிடும் பாரிய பணியைச் சுமக்கின்ற நூலகர்கள் சார்ந்த தகவல்கள் நான்காவது பகுதியில் உள்ளடக்கப்பட் டிருக்கின்றன. நூலகருக்குத் தேவைப்படும் அறிவு, திறன்கள், அவர்க ளின் கடமைகளும் பொறுப்புகளும் போன்ற தகவல்களை இப்பகுதி உள்ளடக்குகின்றது. 
நூலக உருவாக்கத்திற்கு தேவைப்படும் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கொண்டு வரும் செயற்பாட்டில் இந்நூல் உருவாக்கம் கணிசமான நேரத்தையும் சக்தியை யும் நுகர்ந்திருக்கிறது. இந்நூலின் சிறப்பம்சங்களில் ஒன்றான ஒவ்வொரு பகுதிக்கும் பொருத்தமான படங்களையும் விளக்கப் படங்களையும் தேர்ந்தெடுக்கும் பணி மிகச் சிரமம் வாய்ந்ததாகும்.   
இந்நூலுருவாக்கத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்து சக்தியைத் தந்த அகவிழி ஆசிரியர் மதுசூதனனுக்கு எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டு சனசமூக நிலைய நூலகங்கள், பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள்,  பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப் படையைத் தர இந்நூல் முயற்சி செய்திருப்பதன் காரணமாக நூலகம் ஒன்றின் உருவாக்கம், வடிவமைப்பு, ஒழுங்கமைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தும் நூலகர்கள் ஒவ்வொருவரது தேவையையும் இந்நூல் பூர்த்தி செய்வதன் மூலம் ஊருக்கு ஊருணி நூலகம் என்ற கருத்து நிலையையும், அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலை யையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண் ணுக்கும் நான் பேசும் மொழிக்கும் செலுத்துகின்ற நன்றிக்கடனாகும். இந்நூலின் உருவாக்கத்தில் பெரிதும் பங்கு கொண்ட சகோதரி கோமளா, படங்களின் தெரிவில் உதவிய திரு.நவநீதகிருஷ்ணன், வடிவமைப்பில் உதவிய திரு.தனஞ்சயன், பட்டியற் பதிவுகளைச் செவ்வைப் பார்த்த கொழும்பு இறையியல் கல்லூரியின் நூலகர் திருமதி வனஜா ராஜ்குமார் ஆகியோருக்கு எனது நன்றிகள். 

அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்,