உள்ளம் பெருங் கோயில்
|
சீர்மிய உளவியலையும் ஆக்க மலர்ச்சிச் சிந்தனைகளையும் ஒன்றி ணைத்துத் தமிழிலே வளமான எழுத்தாக்கங்களைத் தரவல்ல ஒரு சிலரில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் தனித்துவமானவர். அவரது 'உள்ளம் பெருங் கோயில்' என்ற படைப்பு, தமிழின் சீர்மிய இலக்கிய ஆக்கத்தை மேலும் வளப்படுத்தும் புதுவரவாகின்றது.
ஆழ்ந்தும் நுண்ணிதாகியும் வளர்ந்து செல்லும் உளவியல் ஆய்வு களின் விளைவீட்டும் முடிவுகளை எழுத்தாக்கங்கள் வழியே எடுத்துச் சென்று அறிபரவல் (னுளைளநniஅயவழைn ழக மழெறடநனபந) செய்தல் சமகாலச் சமூகத்தின் தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் மேலெழுந்துள்ளன. அத்தகைய ஓர் அறிகைச் செயற்பாட்டை ஆழமாகவும், நிதானமாகவும், அறிவுசார்ந்த பக்குவத்துடனும், நூலாசிரியர் மேற்கொண்டுள்ளார்.
தனிமனித உளக்கோலங்களின் சமூகத் தளத்தையும் சமூக இருப் பையும் கண்டறிய முற்பட்டமை உளப் பிரச்சினைகளுக்குரிய விசை பற்றிய தரிசனத்திலே பன்மை நிலைகளை ஏற்படுத்தலாயிற்று. சமூகத்தின் பன்மை நிலைகள் பற்றிய கவன ஈர்ப்பு உலக உளவியற் புலத்திலே ஏற்படலாயிற்று. சமூகத்தின் பன்மை விசைகளும் அவற்றின் தாவல் களும் மனிதர் மீது ஏற்படுத்தும் தாக்கங்களும் பன்முகமான பிரச்சி னைகளை வருவிக்கத் தொடங்கியுள்ளன.
உளப் பிரச்சினைகள் தொடர்பான அறிகைத் தெளிவை ஏற்படுத்து தல் நூலின் வினைபாட்டுப் பரிமாணமாகவுள்ளது. எமது சமூகத்தைப் பொறுத்தவரை சீர்மியம் தொடர்பான அறிகைத் தளத்திலே 'தொடர்பாடல் இடைவெளிகள்' காணப்படுகின்றன. அந்நிலையிலே தெளிவான அறிகைப் புலக்காட்சியை ஏற்படுத்தும் புனைவுகளும் நூலிலே முன் னெடுக்கப்பட்டுள்ளன. 'சீர்மியம் என்றால் என்ன?&
|