யாழ்ப்பாணச் சரித்திரம் |
இத்துணைச் சிறந்த யாழ்பாணவரசு இற்றைக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னர் ( 161 டீ.ஊ) அரசு செய்த ஏலேலன் காலத்திலே தொடங்கியது. இடையிடையே அரசின்றி சிலகாலமும் வழிவழியரசோடு நெடுங்காலமும்இ பின்னருமிடையிடையே சிங்களவரசு சிலகாலமும்இ பின்னரும்தமிழரசு வழிமுறையாகச் சிலகாலமுமாக 1700 வருஷம் சுவதேசவரசு நடந்தது. அதன்மேற் பறங்கியரசு 40 வருஷமும்இ ஒல்லாந்தவரசு 150 வருஷமும் நடந்தொழியஇ 1796ல் ஆங்கிலவரசு வந்து நடக்கின்றது. இப்படியே யாழ்பாணம் ஏறக்குறைய 2000 வருஷ சரித்திரமுடையது. |