Content (உள்ளடக்கம்): |
1. முன்னுரை
2. முகவுரை
3. அறிமுகம்
4. வன்னி தமிழாக்கக் குழு சார்பாக
5. ஆசியுரை
6. மொழிப்பெயர்ப்பாளர்கள்
7. மூலநூலாசிரியரின் முன்னுரை
8. பதிப்புரை
9. தரைத்தோற்ற விவரணம் - பௌதிக அம்சங்கள்
10. வரலாற்றுச் சுருக்கம்
11. நிருவாகம்
12. குடித்தொகை
13. பிரிவுகளும் கிராமங்களும்
14. இனம், சாதி, தொழில், சமயம்
15. வன்னியில் சிங்கள்வர்கள்
16. வருமானம் - பொது
17. வருமானம் - உப்பு
18. வருமானம் - சுங்கம்
19. வருமானம் - மரம்
20. வருமானம் - நெல்லும், உலர்தானியங்களும்
21. நிலம் (காணி) உடைமையுரிமை
22. விவசாயம் - நீர்பாசனம்
23. விவசாயம் - நெல் வேளாண்மை
24. விவசாயம் - உலர்தானியப் பயிர்ச்செய்கை
25. நானாவித விவசாயம்
26. மீன்பிடிதளங்கள்
27. உழைப்பு - வேதனம்
28. கால்நடை
29. வீதிகள்
30. தபால் சேவை (அஞ்சல்)
31. நிறுவைகளும் அளவைகளும்
32. விலை
33. குற்றமும் சட்ட நடவடிக்கைகளும்
34. அரோக்கியமும் சுகாதாரமும்
35. மக்களின் சமூக நிலை
36. காலநிலை
37. தாவரங்கள்
38. விலங்கினங்கள்
39. தொல்பொருளியல்
40. நானாவித தகவல்கள்
41. அபிவிருத்திக்கான திட்டங்கள்
|
Full Description (முழுவிபரம்): |
ஒரு நூற்றாண்டு காலத்திற்கு நீடித்திருந்த நிர்வாகத்தினை பெருமளவில் வெளிக்கொணரும் வகையில் ஒரு குறிப்பிட்ட வருடத் தைச் சார்ந்ததல்லாது, பேரளவு நிர்வாக அறிக்கையாகும் இவ் ஒருங்கி ணைப்புகள் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுவது அவசியமாகிறது.
அதிக அளவு விபரங்களைக் கொண்டு நீண்டதாகக் கூறுவது பிழையாயின், அவ்வாறு அமைந்தமை (முல்லைத்தீவு - வவுனியா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள) இரண்டு கச்சேரிகளிலும் 1892ம் ஆண்டு வரை இருந்த நாட்குறிப்பேடுகளிலிருந்துழூ பெறப்பட்ட மேலோட்டமான ஒரு பகுதித் தகவல்கள் தான் என்பதைக் கருத்திற் கொள்ளத் தூண்டுகிறேன். கைந்நூலிலிருந்து மேற்கோள்கள் தவிர கருத்திற் கொள்ளக்கூடிய எந்த ஒரு பகுதியும் தவிர்த்து விடப்பட வில்லை என்பதனைப் பவ்வியமாகக் கூறுகின்றேன். உண்மையில், இவற்றை முதன்முறையாக வாசிக்கும்போது ஏற்படும் சிந்தனைகளால் இத்தகவல்கள் அனைத்தும் மிகவும் உறுதியானவையென உரிமை பாராட்ட முடியாது. ஏனெனில், காரியாலய நாட்குறிப்பேடுகள் பெருமளவில் அன்றாட சம்பவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பன.
ஆகையால், சில எல்லைகளை நாம் வகுக்க வேண்டிய நிலை ஏற்படக் காரணிகளாக அமைந்தவை, இக்கைந்நூலை ஆக்குவதற்குத் தேவையான உள்ளீடுகள் அந்தந்த இடங்களிலேயே திரட்டப்பட்டா லும், அவைகளை வடிவமைத்த போது, நான் சம்பந்தப்பட்ட இடங் களிலிருந்து வெளியேறியதும், சம்பவங்களுக்குரிய மாவட்டங்களி லிருந்து வெகு தூரத்திலிருந்தமையுமாகும்.
எவ்வாறான பூரணத்துவம் இல்லாதிருந்தாலும், நான் எவ்வித சிரமங்களையும் பாராது, இந்நூலைச் சரியான தகவல்கள் கொண்டதாக அமைத்துள்ளதோடு, எனக்குப் பின்வரும் வன்னி நிர்வாகத்தினருக்கு, போதிய தகவல்களைத் தரும் சேவையாக இந்நூல் அமையலாம் என எதிர்பார்க்கின்றேன்.
எனக்கு இந்நூலை ஆக்குவதற்கு உதவியும் ஆலோசனைகளும் வழங்கியவர்களுள் சிவில் சேவை அதிகாரிகளான திருவாளர்கள் ப்பௌலர், வைற், ஸ்சோட் என்பவர்களும், டாக்டர் ற்றைமன் அவர்களும், திரு.கே.தில்லையம்பலம் (தலைமை லிகிதர்- வவுனியா கச்சேரி, தொலுக்கு முதலியார் - முல்லைத்தீவு) அவர்களும் குறிப்பிடப்பட வேண்டியவர்களும், எனது நன்றிக்குரியவர்களுமாவர்.
ஜே.பி.லூயிஸ்
|