Full Description (முழுவிபரம்): |
2011ம் ஆண்டில் அரசியல் விஞ்ஞானத்தினை க.பொ.த உஃத பரீட்சைக்கு ஒரு பாடமாகத் தோற்றும் மாணவர்களுக்கும் அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமையும். 2011ல் க.பொ.த உஃத பரீட்சைக்கு தோற்றும் மாணவர் களுக்கு 2009ம் ஆகஸ்ட் மாதத்தில் அரசியல் விஞ்ஞான பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் தேர்ச்சி மைய (ஊழஅpநவநnஉளை டியளநன) பாடத் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சிகளை வகுப்பறை யொன்றில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக அவற்றை தேர்ச்சி மட்டங்களாக வகைப்படுத்தியுள்ளார்கள்.
பிரதானமாக 16 தேர்ச்சிகளையும் அத்தேர்ச்சிகளுக்குரிய 35 தேர்ச்சி மட்டங்களையும் 2011ல் க.பொ.த உஃத மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைத்துள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்ச்சி மட்டத்திற்குமான பாட உள்ளடக்கங்களும் அப்பாட உள்ளடக்கங் களை எக்காலப் பகுதியில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற பாட வேளைகளும் பாடத்திட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் ஒருவர் வகுப்பறையொன்றில் தேர்ச்சி மட்டங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனை அடைவதற்கு துணை புரியும் வளவாளராக செயற்பட எதிர்பார்க்கப்படுகின்றார். வேறு வகையில் இதனைக் கூறினால் பாடத் தேர்ச்சிகளை (ளுரடிதநஉவ ஊழஅpநவநnஉல) பிள்ளைகள் அடைந்துகொள்வதற்கான கற்றல் கற்பித்தல் மதிப்பீடு செயலொழுங்குகளை புதிய பாடத்திற்கு ஏற்றாற் போல் திட்டமிட்டுக் கொள்ளுதல் மிக மிக அவசியமாகின்றது. எனவே ஆசிரியர் புதிய சவால்களை எதிர்நோக்க வேண்டியவரா கின்றார்.
மேலும், புதிய பாடத்திட்டத்தில் சமகாலத்தில் முக்கியத்து வமுடைய புதிய தலைப்புக்களும், பழைய தலைப்புக்களின் சமகால வளர்ச்சியினை உள்வாங்கும் விதத்தில் மெருகூட்டப்பட்ட வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூகோள, மற்றும் பிராந்திய சூழல்கள் அரசியல் விஞ்ஞான கற்கைகளில் செல்வாக்கு செலுத்தி யுள்ள தலைப்புகளையும் அது சார்ந்த விடயங்களையும் பிள்ளைகள் கற்பது எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, 2011ல் அரசியல் விஞ்ஞானத்தினை ஒரு பாடமாக பரீட்சைக்கு எடுக்கும் மாணவனுக்கும் ஆசிரியர்க்கும் துணை புரியும் விதத்தில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நூல் ஆசிரியர் மிகத் தெளிவாக ஒரு விடயத்தினை இங்கு குறிப்பிட விரும்புகின்றார். புதிய பாடத்திட்டத்தினையும் அதனைக் கற்பிக்கும் ஆசிரியரினையும் ஆசிரியரின் வழிகாட்டலில் செயற்படும் மாணவனையும் மையமாக வைத்து ஒரு வழிகாட்டல் நூலாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசியல் விஞ்ஞான பாடமொன்றின் ஆய்வுக்கும் அபிவிருத்திக்கு மான நூலாக இது எழுதப்படவில்லை இந்நூலின் வடிவமைப்பினை பார்ப்பவருக்கு இது எளிதில் புரியும்.
அதற்கிணங்க இந்நூலில் பிள்ளைகள் கற்க வேண்டிய தேர்ச்சி யினை முதலில் வரையறை செய்து பின்னர் ஒவ்வொரு தேர்ச்சி யிலும் உள்ளடக்கப்படும் தேர்ச்சி மட்டங்களையும், வரைறை செய்து, அதன் பின்னர் ஒவ்வொரு தேர்ச்சி மட்டத்திலும் உள்ளடக் கப்படும் பாட விடயங்கள் அல்லது பாடப்பரப்புகள் என்பவற்றை வரையறை செய்து அதற்கப்பால் அப்பாட விடயங்கள் குறித்து சுருக் கமான விளக்கவுரை யொன்றினையும் எழுதியுள்ளார். மாணவரின் வகுப்பு மட்டத்திற்கும் அவனது பரீட்சை மட்டத்திற்கும் ஆசிரியரது தேவை மட்டத்திற்கும் ஏற்றாற்போல் எல்லைகள் வகுத்து தேவை யினை மையமாக வைத்து விடயங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருப் பதுடன் எதிர்காலத்தில் ஆர்வமுடன் அரசியல் விஞ்ஞான பாடத் தினை கற்பதற்கு மாணவர்களை தூண்டும் எண்ணமொன்றின் பின்புலத்திலும் இந்த நூலை வடிவமைத்துள்ளேன்.
சர்வதேச பிரஜையொன்றினை உருவாக்கும் அரசியல் விஞ்ஞான பாடத்தின் நோக்கங்களை அடைந்து கொள்ளும் பொருட்டு இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே நூலிற்குள் நுழையும் மொருவர் மேற்படி விளக்கத்தினை புரிந்து கொள்ளுதல் நூற் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்யும் அத்துடன் 2011ல் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளின் தேவையையும் கருத்தில் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நூலை எழுதுவதற்கு ஆசிரியர் 2011 ஆம் ஆண்டிற்கான பாடத்திட்ட செயலமர்வு ஒன்றில் தேசிய கல்வி நிறுவன வழிகாட் டலிலும் பேராதனை அரசியல் விஞ்ஞான பல்கலைக்கழக ஆசிரியர் களாலும் நடாத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பெற்ற அறிவின் பின்புலத்திலும் இந்நூலானது ஆக்கப்பட்டுள்ளது.
ஏ.சி.ஜோர்ஜ்
|