உயிரினப் புவியியல் |
உயிரினப் புவியியல் என்பது, உலகில் காணப்படும் பல்வேறு இனங்களின் கடந்தகால மற்றும் நிகழ்காலப் பரம்பல் பற்றிய ஆய்வாகவும் புவியியலின் ஒரு கிளையாகவும் விளங்குகின்றது. பௌதிகச் சூழலானது இனங்களையும் அவற்றின் இடஞ்சார்ந்த பரம்பலையும் பாதிப்பதாகக் காணப்படுவதனால் அதனைப் பௌதிகப் புவியியலின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். இதனால் உலகின் உயிரினக் கூட்டம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் ஆய்வாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் உயிரியல், உயிர்ச் சூழல், பரிணாமம் பற்றிய ஆய்வுகளுடன் நெருங்கிய இணைவினையும் கொண்டிருக் கின்றது. இன்று, உயிரினப் புவியியல் வரலாற்று உயிரினப் புவியியல், உயிர்ச் சூழல் உயிரினப் புவியியல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் உயிரினப் புவியியல் என மூன்று பிரதான பிரிவுகளாகக் கருதப்படு கின்றது. வரலாற்று ரீதியான உயிரினப் புவியியலானது கடந்த கால இனங்களின் பரம்பலில் காலநிலை மாற்றத்தின் செல்வாக்கு மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஏன் குறிப்பிட்ட சில இனங்கள் விருத்தியுற்றிருக்கின்றன, கண்டத் தகடுகளின் அசைவால் இனங்களின் நகர்வுகள் எவ்வாறு இடம் பெற்றன, அதற்கான சுவட்டுச் சான்றுகள் எவை என்பன பற்றி ஆய்வு செய்கின்றது.
''உயிர்ச் சூழல் உயிரினப் புவியியலானது காலநிலை, முதனிலை உற்பத்தி மற்றும் வாழிடங்கள் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்கின்றது. பேணிப் பாதுகாத்தல் தொடர்பான உயிரினப் புவியியல் இயற்கையினையும் அதன் தாவரங்கள் மற்றும் விலங்குக
|